திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 284 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
284பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 10
கருங்கண் தோகை மயிற் பீலி யணிந்து கட்டி நன்குடுத்த பீதக வாடை அருங்கல வுருவி னாயர் பெருமான் அவனொருவன் குழ லூதின போது மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும் இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே–3-6-10
பதவுரை Show / Hide
கருங்கண்,Karungan - கறுத்தகண்களையுடைய
தோகை,Thogai - தோகைகளை யுடைய
மயில் பீலி,Mayil Peeli - மயில்களின் இறகுகளை
அணிந்து,Anindhu - (திருமுடி மேல்) அணிந்து கொண்டு
நன்கு கட்டி உடுத்த,Nangu Katti Udutha - நன்றாக அழுந்தச் சாத்தின
பீதகம் ஆடை,Peethagam Aadayi - பீதம்பரத்தையும்
அரு கலம்,Aru Kalam - அருமையான ஆபரணங்களையும்
உருவின்,Uravin - திருமேனியை யுடையனான
ஆயர் பெருமானவன் ஒருவன் குழல் ஊதினபோது;,Aiyar Perumanavan Oruvan Kuzhal Oothinapodhu - ஆயர் பெருமானவன் ஒருவன் குழல் ஊதினபோது;
மரங்கள்,Marangal - (அசேதநமான) மரங்களுங் கூட
நின்று,Nindru - ஒருபடிப்பட நின்று
மது தாரைகள்,Madhu Thaaraiyalar - (உள்ளுருகினமை தோற்ற) மகரந்த தாரைகளை
பாயும்,Paayum - பெருக்கா நின்றன;
மலர்கள்,Malarkal - புஷ்பங்களும்
வீழும்,Veezhum - (நிலை குலைந்து) விழா நின்றன;
வளர்,Valar - மேல் நோக்கி வளர்கின்ற
கொம்புகள்,Kombugal - கொம்புகளும்
தாழும்,Thaazhum - தாழா நின்றன;
இரங்கும்,Erangum - (அம்மரங்கள் தாம்) உருகா நின்றன
கூம்பும்,Koombum - (கை கூப்புவாரைப் போலே, தாழ்ந்த கொம்புகளைக்) குவியா நின்றன;
அவை,Avai - (இவ்வாறாக) அந்த மரங்கள்
திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி,Thirumal Nindra Nindra Pakkam Nokki - கண்ணன் எந்த எந்தப் பக்கங்களில் நிற்பனோ, அவ்வப் பக்கங்களை நோக்கி,
செய்யும் குணம் ஏ,Seyyum Kunam Ea - செய்கின்ற வழிபாடுகள் இருந்தபடி யென்! [என்று வியக்கிறபடி]