திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 343 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
343பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 6
ஏவிற்றுச் செய்வான் ஏன்றெதிர்ந்து வந்த மல்லரை சாவத் தகர்த்த சாந்தணி தோள் சதுரன் மலை ஆவத்தன மென்று அமரர்களும் நன் முனிவரும் சேவித்திருக்கும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-6
பதவுரை Show / Hide
ஏலிற்று,Elitru - (கம்ஸன்) ஏவின காரியங்களை
செய்வான்,Seivaan - செய்து முடிப்பதற்காக
ஏன்று எதிர்த்து வந்த,Enru Edhirththu Vanda - துணிந்து எதிரிட்டுவந்த
மல்லரை,Mallarai - (சாணுரன் முதலிய) மல்லர்களை
சாவ தகர்த்து,Saava Thagarththu - முடியும்படியாக நோக்கினவனும்
சாந்து,Santhu - (கூனி யிட்ட) சாந்தை
அணி,Ani - அணிந்து கொண்டுள்ள
தோள்,Thol - தோள்களை யுடையவனும்
சதுரன்,Sathuran - ஸமர்த்தனுமான கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கிற)
மலை,Malai - மலையாவது:
அமரர்களும்,Amarargalum - (பிரமன் முதலிய) தேவர்களும்
நல் முனிவரும்,Nal Munivaram - (ஸனகர் முதலிய மஹர்ஷிகளும்)
ஆவத்து தனம் என்று,Aavathu Thanam Endru - ஆபத்துக் காலத்துக்குத் துணையாயிருக்குமிடமென்று (நினைத்து)
சேவித்து இருக்கும்,Seviththu Irukkum - ஸேவித்துக் கொண்டு இருக்குமிடமான தென் திருமாலிருஞ்சோலை