Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 396 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
396பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 6
தலைப் பெய்து குமுறிச் சலம் பொதி மேகம் சல சல பொழிந்திடக் கண்டு
மலைப் பெருங் குடையால் மறைத்தவன் மதுரை மால் புருடோத்தமன் வாழ்வு
அலைப் புடைத் திரை வாய் அருந் தவமுனிவர் அவபிரதம் குடைந் தாட
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரை மேல் கண்ட மென்னும் கடி நகரே–4-7-6
அரு தவம் முனிவர்,Aru Thavam Munivar - அரிய தவங்களைப் புரிந்த மஹர்ஷிகள்
அலைப்பு உடை,Alaippu Udai - அலைத்தலை யுடைய (கரை யெறியா நின்றுள்ள)
திரை வாய்,Thirai Vaai - அலையிலே
அவபிரதம் குடைந்து ஆட,Avapratham Kudaindhu Aada - அவப்ருத ஸ்நாநம் பண்ண, (பிறகு பெரும் ஆறாய்)
கலப்பைகள் கொழிக்கும்,Kalappaigal Kozhikkum - (யாக பூமியிலுண்டான) கலப்பை முதலிய உபகரணங்களெல்லா வற்றையும் எடுத்துத் தள்ளிக் கொண்டு போகா நிற்கிற
கங்கையின் கரை மேல்,Gangaiyin Karai Mel - கங்கைக் கரையிலுள்ள
கண்டம் என்னும் கடி நகர் ;,Kandam Ennum Kadi Nagar - ‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய சிறந்த நகரமானது
சலம்,Sadam - (கடலிலுள்ள) ஜலத்தை
பொதி,Podhi - பொதிந்து கொண்டிரா நின்ற
மேகம்,Megham - மேகங்களானவை
தலைப்பெய்து,Thalaippeidhu - திருவாய்ப்பாடியில் வந்து கிட்டி
குமுறி,Kumuri - கர்ஜனை பண்ணி
சலசல பொழிந்திட,Salasala Pozhindhida - சள சள வென்று மழை பொழிய
கண்டு,Kandu - (அதைக்) கண்டு
மலை,Malai - கோவர்த்தன மலையாகிற
பெருங் குடையால்,Perung Kudaiaal - பெரிய குடையாலே
மறுத்தவன்,Maruththavan - (அம்மழையைத்) தடுத்தருளினவனும்
மதுரை,Mathurai - திரு வடமதுரையில்
மால்,Maal - விருப்பமுடையவனுமான
புருடோத்தமன்,Purudhoaththaman - ஸ்ரீபுருஷோத்தமப் பெருமான்
வாழ்வு,Vaazhvu - எழுந்தருளி யிருக்குமிடம்.