திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 386 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
386பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 6
நாடும் நகரும் அறிய மானிடப் பேரிட்டு கூடி யழுங்கிக் குழியில் வீழ்ந்து வழுக்காதே சாடிறப் பாய்ந்த தலைவா தாமோதரா என்று நாடுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-6
பதவுரை Show / Hide
நாடும்,Naadum - குக்ராமங்களிலுள்ள ஸாமாந்ய ஜ்ஞானிகளும்
அறிய,Ariya - (இவன் உயர்ந்தவன்’ என்று) அறியும்படி,
மானிடர் பேர் இட்டு,Maanidar Per Ittu - (ஷுத்ர) மனுஷ்யர்கள் பெயரை விட்டு
கூடி,Koodi - அவர்களோடு கூடி
அழுங்கி,Azhungi - ஒளி மழுங்கி
குழியில் வீழ்ந்து,Kuzhiyil Veezhndhu - (அவர்கள் விழுந்த) குழியிலே விழுந்து
வழுக்காதே,Vazhukkaadhe - தவறிப் போகாமல்,
சாடு,Saadu - ‘சகடாஸுரன்
இற,Era - முறியும்படி
பாய்ந்த,Paayndha - உதைத்தருளின
தலைவா,Thalaivaa - பெரியோனே!’ (என்றும்)
தாமோதரா என்று,Thaamodharaa Endru - ‘தாமோதரனே! என்றும்
நாடுமின்,Naadumin - வாழ்த்திக் கொண்டு திரியுங்கள்;
நாரணன் தம்மன்னை நரகம் புகார்,Naaranan Thammannai Naagam Pugaar - (இங்ஙனேயாகில்,) எம்பெருமானுடைய திருநாமம் பூண்ட அப்பிள்ளயினுடைய
(அப்படி நாமகரணஞ் செய்தால்) (அப் பிள்ளைகளுடைய) தாய்மார் துர்க் கதியை அடைய மாட்டார்கள்.