Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 434 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
434பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 2
சழக்கு நாக்கொடு புன் கவி சொன்னேன் சங்கு சக்கர மேந்து கையானே
பிழைப்ப ராகிலும் தம்மடியார் சொல் பொறுப்பதும் பெரியோர் கடனன்றே
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால் வேறொருவரோடு என் மனம் பற்றாது
உழைக்கு ஓர் புள்ளி மிகை யன்று கண்டாய் ஊழி யேழுலகுண் டுமிழ்ந்தானே–5-1-2
சங்கு சக்கரம் ஏந்து கையானே!,Sangu Chakkaram Aendhu Kaiyaanae - சங்கு சக்கரம் ஏந்து கையானே!
ஊழி,Oozhi - பிரளயக் காலத்தில்
ஏழ் உலகு,Ezh Ulagu - எல்லா வுலகங்களையும்
உண்டு,Undu - திரு வயிற்றில் வைத்துக் கொண்டு (பின்பு பிரளயம் கழிந்தவாறே)
உமிழ்ந்தானே,Umizhnthaaney - (அவற்றை) வெளிப்படுத்தினவனே!
சழக்கு நாக்கொடு,Sazhakku Naakkodu - பொல்லாத நாக்கினால்
புன் கவி,Punn Kavi - அற்பமான பாசுரங்களை
சொன்னேன்,Sonnaen - நான் சொன்னேன்;
பிழைப்பர் ஆகிலும்,Pizhaippar Aagilum - (தாஸ பூதர்கள்) பிழை செய்தவர்களே யாகிலும்
தம் அடியார்,Tham Adiyaar - தமக்கு அடிமைப்பட்ட அவர்களுடைய
செயல்,Seyal - சொல்லை.
பொறுப்பது,Poruppadhu - பொறுத்தருளுகை
பெரியோர் கடன் ஆனதே,Periyor Kadan Aanaadhe - பெருந்தன்மை யுடையவர்களுக்கு கடமை யன்றோ
நின் கண் அல்லால் மற்று விழிக்கும் கண் இலேன்,Nin Kan Allael Matru Vizhikkum Kan Ilaen - உன்னுடைய கடாஷம் அல்லால் வேறு ஒருவருடைய கடாஷத்தை (ரஷகமாக) உடையேனல்லேன்;
வேறு ஒருவரோடு,Vera Oruvarodu - (அன்றியும்) மற்று ஒருவர் பக்கலிலும்
என் மனம்,En Manam - என் நெஞ்சானது
பற்றாது,Patraadhu - பொருந்த மாட்டாது
உழைக்கு,Uzhaikku - புள்ளிமானுக்கு
ஓர் புள்ளி மிகை அன்று கண்டாய்,Or Pulli Migai Andru Kandaai - ஒரு புள்ளி (ஏறுவது) குற்றமதன்றோ?