| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 424 | பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 2 | சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய் சங்கொடு சக்கர மேந்தினானே நாமடித்து என்னை அனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன் தமர்கள் போமிடத்து உன் திறத்து எத்தனையும் புகா வண்ணம் நிற்பதோர் மாயை வல்லை ஆமிடத்தே உன்னைச் சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-2 | சங்கொடு,Sangodu - ஸ்ரீபாஞ்சஜந்யத்தையும் சக்கரம்,Chakkaram - ஸ்ரீஸுதர்சனாழ்வானையும் ஏந்தினானே,Aendhinaanae - திருக் கையில் அணிந்து கொண்டுள்ளவனே அரங்கத்து அரவு அணை பள்ளியானே!,Arangaththu Aravu Anai Palliyanae - திருவரங்கம் பெரிய கோயிலில் திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல் பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே! அனேக தண்டம் செய்வதா நிற்பா,Anaega Thandam Seivathaa Nirpaa - பல வகைகளால் தண்டிக்க நினையா நின்றவர்களாய் போம் இடத்து,Pom Idaththu - இழுத்துக் கொண்டு போம் போது உன் திறத்து,Un Thiraththu - (என்னுடைய நெஞ்சானது) உன் விஷயத்தில் எத்தனையும்,Eththanaikum - சிறிதாயினும் புகா வண்ணம்,Pugaa Vannam - அவகாஹிக்க மாட்டாதபடி நிற்பது ஓர் மாயை வல்லை,Nirpathu Or Maayai Vallai - மறைந்து நிற்கையாகிற ஒப்பதொரு மாயையைச் செய்வதில் (நீ) வல்லவனாக யிரா நின்றாய் நமன் தமர்கள்,Naman Thamargal - யம படர்கள் நா மடித்து,Naa Madiththu - (மிக்க கோபத்தோடு) நாக்கை மடித்துக் கொண்டு என்னை,Ennai - (மஹா பாபியான) அடியேனை ஆம் இடத்தே,Aam Idaththae - (ஆதலால்) ஸர்வேந்திரயங்களுடங் தெளிவு பெற்றிருக்கை யாகிற இக் காலத்திலேயே சாம் இடத்து என்னை குறிக்கோள் கண்டாய் என்று,Saam Idaththu Ennai Kurikkol Kandhaai Endru - “சரீர வியோக ஸமயத்தில் (உன்னை நினைக்க மாட்டாத) அடியேனைத் திருவுள்ளம் பற்றி யருள வேணும்” உன்னை,Unnai - உன்னைக் குறித்து சொல்லி வைத்தேன்,Solli Vaiththaen - விண்ணப்பஞ் செய்து கொண்டேன். |