Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 433 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
433பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 1
வாக்குத் தூய்மை யிலாமையினாலே மாதவா உன்னை வாய்க் கொள்ள மாட்டேன்
நாக்கு நின்னை யல்லால் அறியாது நான தஞ்சுவன் என் வச மன்று
மூர்க்குப் பேசுகின்றானிவ னென்று முனிவாயேலும் என் நாவினுக்கு ஆற்றேன்
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருளக் கொடியானே–5-1-1
மாதவா,Maadhavaa - ச்ரிய: பதியானவனே!
நாரணா,Naaranaa - (உலகங்கட்கெல்லாம்) ஆதி காரணமானவனே!
கருளன்,Karulan - பெரிய திருவடியை
கொடியானே,Kodiyaanae - த்வஜமாக வுடையவனே!
வாக்கு,Vaakku - (என்னுடைய) வாய் மொழிக்கு
தூய்மை இலாமையினாலே,Thooymai Ilaamaiyinaalae - பரி சுத்தி இல்லாமையால்
உன்னை,Unnai - (ஹேய ப்ரதிபடனான) உன்னை
வாய் கொள்ள மாட்டேன்,Vaai Kollamaattaen - வாய் கொண்டு துதிக்க யோக்யதை அறற்வனா யிரா நின்றேன்
நாக்கு,Naakku - (வெறுமனே கிடப்போமென்று பார்த்தாலும்) (ரஸமறிந்த எனது) நாக்கானது
நின்னை அல்லால்,Ninnai Allael - உன்னை யொழிய மற்றொருவரை
அறியாது,Ariyaadhu - (வாய்க் கொள்ள) அறியாது;
அது,Adhu - அசுத்தமான நாக்கு இங்ஙனே உன் பக்கம் ஈடுபடா நின்றதைக் குறித்து
நான் அஞ்சுவன்,Naan Anjuvan - நான் அஞ்சுகின்றேன்;
என் வசம் அன்று,En Vacham Andru - (அது) (அந்த நாக்கானது)எனக்கு வசப்பட்டு நிற்பதன்று;
இவன் மூர்க்கு பேசுகின்றான் என்று,Ivan Moorkku Paesugindraan Endru - “இவன் மூடர் பேசும் பேச்சைப் பேசா நின்றான்” என்று திருவுள்ளம் பற்றி
முனிவாயேலும்,Munivaayaelum - நீ சீறி யருளினாலும்
என் நாவினுக்கு ஆற்றேன்,En Naavinukku Aatraen - என்னுடைய நாக்கின் பதற்றத்தை என் ஸஹகிக்க வல்வேனல்லேன்;
காக்கை வாயிலும்,Kaakkai Vaayilum - காக்கையினுடைய வாயிலுண்டான சொல்லையும்
கட்டுரை,Katturai - நற் சொல்லாக
கொள்வர்,Kolvar - (அறிவுடையார்) கொள்ளுவார்கள்.