திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 162 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (கலித்தாழிசை) 1 | பின்னை மணாளனைப் பேரில் கிடந்தானை
முன்னை யமரர் முதல் தனி வித்தினை
என்னையும் எங்கள் குடி முழுது ஆட் கொண்ட
மன்னனை வந்து குழல் வாராய் அக் காக்காய் மாதவன் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-1 | பதவுரை Show / Hideஅக்காக்காய்,Akkakkai - காக்கையே! பின்னை,Pinnai - நப்பின்னைப் பிராட்டிக்கு மணாளனை,Manalanai - நாயகனும் பேரில்,Peril - திருப் பேர்களிலே கிடந்தானை,Kidandhanai - பள்ளி கொண்டிருப்பவனும் முன்னை,Munnai - (பகவதநுபவத்தில்) முதல்வரான அமரர்,Amarar - நித்ய ஸுரிகளுக்கு முதல்,Mudhal - தலைவனும் தனி வித்தினை,Thani viththinai - (அந்த நித்ய ஸுரிகளின் ஸத்தைக்கும் தாரகாதிகளுக்கும்) ஒப்பற்ற காரணமாயிருப்பவனும் என்னையும்,Ennaiyum - என்னையும் எங்கள் குடி முழுது,Engal kudi muzhuvathu - எங்களுடைய குடியிலுள்ளாரெல்லாரையும் ஆட் கொண்ட,Aad kond - அடிமை கொண்ட மன்னனை,Mannanai - தலைவனுமாகிய கண்ணனுக்கு வந்து,Vandhu - (நீ) வந்து குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக அக்காக்காய்,Akkakkai - காக்கையே! மாதவன் தன்,Madhavan than - ஸ்ரீயபதியான இவனுக்கு குழல் வாராய்,Kuzhal vaarai - கூந்தல் வாருவாயாக |