Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 438 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
438பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 6
கண்ணா நான்முகனைப் படைத்தானே காரணா கரியாய் அடியேன் நான்
உண்ணா நாள் பசியாவதொன் றில்லை ஓவாதே நமோ நாரணா வென்று
எண்ணா நாளும் இருக்கெசுச் சாம வேத நாண் மலர் கொண்டு உன் பாதம்
நண்ணா நாள் அவை தத்துறு மாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே–5-1-6
காரணா,Kaaranaa - (லோக ஸருஷ்டிக்குக் காரணமானவனே!)
நான்முகனை,Naanmuganaai - பிரமனை
படைத்தானே,Padaiththaanae - (உந்தி மேல்) படைத்தருளினவளே!
கண்ணா,Kannaa - கண்ணபிரானே!
கரியாய்,Kariyaai - (காள மேகம்போல்) கறுத்த நிறத்தை யுடையவனே!
அடியேன் நான் ,Adiyaen Naan - (உனக்கு) சேக்ஷபூதனான நான்
உண்ணா நாள்,Unnaa Naal - உண்ணா தொழிந்த போது
பசி ஆவதொன்றுமில்லை,Pasi Aavadhonrumillai - பசி என்பது மறந்து முண்டாவதில்லை.
ஓயாதே,Oyaadhe - இடைவிடாமல்
நமோ நாராயணா என்று,Namo Naaraayanaa Endru - ‘நமோ நாராயணாய’ என்று
எண்ணா நாளும்,Ennaa Naalum - அநுஸந்திக்கப் பெறாத நாளும்
இருக்கு எசுச் சாமவேதம்,Irukku Esuchchaamavetham - ருக், யஜுர், ஸாமம் என்கிற வேதங்களை (ச்சொல்லிக் கொண்டும்)
நாண் மலர் கொண்டு,Naan Malar Kondru - அப்போதலர்ந்த (புதிய) பூக்களை எடுத்துக் கொண்டும் (வந்து)
உன் பாதம்,Un Paadham - உன் திருவடிகளை
நண்ணா நான்,Nannaa Naan - கிட்டப் பெறாத நாள்களும்
அவை,Avai - (எனக்கு) அந்த உண்ணாதொழிந்த நாள்களாம்;
அவை,Avai - அந்த வேதாசந்தநமும் புஷ்ப ஸமர்ப்பணமும்
தத்துவம் ஆகில்,Thaththuvam Aagil - தட்டுப்படுமாகில்
அன்று,Andru - அந்த நாளானது
எனக்கு,Enakku - எனக்கு
பட்டினி நாள்,Pattini Naal - உண்ணாதொழிந்த நாளாகும்.