Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 264 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
264பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 1
அட்டுக் குவி சோற்றுப் பருப் பதமும் தயிர் வாவியும் நெய் யளறும் அடங்கப்
பொட்டத் துற்று மாரிப்பகை புணர்த்த பொரு மா கடல் வண்ணன் பொறுத்த மலை
வட்டத் தடங்கண் மட மான் கன்றினை வலை வாய்ப் பற்றிக் கொண்டு குறமகளிர்
கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும் கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே–3-5-1
குற மகளிர்,Kura Magalir - குறப் பெண்கள்,
வட்டம் தட கண்,Vattam Thada Kan - வட்ட வடிவான பெரிய கண்களை யுடையதும்
மடம்,Madam - (தனது தாய்க்கு) வசப் பட்டிருப்பதுமான
மான் கன்றினை,Maan Kanrinai - மான் குட்டியை
வலை வாய்,Valai Vaai - வலையிலே
பற்றிக் கொண்டு,Patri Kondu - அகப் படுத்தி
கொட்டை,Kottai - (பின்பு அதனைத் தங்களுடையதாக அபிமானித்து, அதற்கு) பஞ்சுச் சுருளின்
தலை,Thalai - நுனியாலே
பால்,Paal - பாலை
கொடுத்து,Koduthu - எடுத்து ஊட்டி
வளர்க்கும்,Valarkkum - வளர்க்கைக்கு இடமான
கோவர்த்தனம் என்னும்,Govarthanam Ennum - ‘கோவர்த்தநம்’ என்ற பெயரை யுடையதும்
கொற்றம்,Kotram - வெற்றியை யுடையதுமான
குடை,Kudai - குடையானது (யாதெனில்?)
அட்டு,Attu - சமைத்து
குவி,Kuvi - குவிக்கப் பட்ட
சோறு,Sooru - சோறாகிற
பருப்பதமும்,Paruppathamum - பர்வதமும்
தயிர்,Thayir - தயிர்த் திரளாகிற
வாவியும்,Vaaviyum - ஓடையும்
நெய் அளறும்,Ney Alarum - நெய்யாகிற சேறும்
அடங்க,Adanga - ஆகிய இவற்றை முழுதும்
பொட்ட,Potta - விரைவாக (ஒரே கபளமாக)
துற்றி,Thutri - அமுது செய்து விட்டு,
மாரி,Maari - (இப்படி செய்கையினாலே இந்திரனுக்குக் கோபம் மூட்டி அவன் மூலமாக) மழையாகிற
பகை,Pagai - பகையை
புணர்த்த,Punartha - உண்டாக்கின
பொரு மா கடல் வண்ணன்,Poru Maa Kadal Vannan - அலை யெறிகிற பெரிய கடலினது நிறம் போன்ற நிறத்தனான கண்ணபிரான்
பொறுத்த,Porutha - (தனது திருக் கைவிரலால்) தூக்கின
மலை,Malai - மலையாம்.