Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 425 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
425பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 3
எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி நமன் தமர் பற்றும் போது
நில்லுமி னென்னும் உபாய மில்லை நேமியும் சங்கமும் ஏந்தி னானே
சொல்லலாம் போதே உன் நாம மெல்லாம் சொல்லினேன் என்னைக் குறிக் கொண்டு என்றும்
அல்லல் படா வண்ணம் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-3
நேமியும்,Naemiyum - திருவாழியையும்
சங்கமும்,Sangamum - ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தையும்
ஏந்தினானே,Aendhinaanae - கையில் அணிந்து கொண்டுள்ளவனே
வாசல் குறுகச் சென்றால்,Vaasal Kurugach Sendraal - (யம புரத்துக்குப்) போம் பழியைக் கிட்டப் புகுந்தால்
நமன் தமர்,Naman Thamar - யம கிங்கரர்கள்
ஏற்றி,Aettri - அடித்து
பற்றும் போது,Patrum Podhu - பிடிக்குங் காலத்தில்
நில்லுமின் என்னும்,Nillum In Enum - “கடக்க நில்லுங்கள்” என்ற (அவர்களைக் கிட்ட வர வொட்டாமல்) தடுக்கும் படியான
உபாயம் இல்லை,Upaayam Illai - ஓரு உபாயமும் (என் கையில்) இல்லை;
சொல்லலாம் போதே,Sollalaam Podhae - வாய் விட்டுச் சொல்லுகைக்கு உரிய இப்போதே
அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!,Arangaththu Aravu Anaip Palliyanae - திருவரங்கம் பெரிய கோயிலில் திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல் பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே!
எல்லையில்,Ellaiyil - (அடியேனுடைய வாழ் நாளின்) எல்லையாகிய சரம தசையில்
உன்,Un - உன்னுடைய
நாமம் எல்லாம்,Naamam Ellaam - திரு நாமங்களை யெல்லாம்
சொல்லினேன்,Sollinaen - சொன்னேன்;
என்னை,Ennai - அடியேனை
குறிக் கொண்டு,Kurik Kondu - திருவுள்ளத்திற் கொண்டு
என்றும்,Endrum - எப்போதும்
அல்லல் படா வண்ணம்,Allal Padaa Vannam - அநர்த்தப் படாதபடி
காக்க வேண்டும்,Kaakka Vendum - ரக்ஷித்தருள வேணும்.