திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 235 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
235பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 2
பற்று மஞ்சள் பூசிப் பாவை மாரொடு பாடியில் சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே கற்றுத் தூளி யுடை வேடர் கானிடைக் கன்றின் பின் எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-2
பதவுரை Show / Hide
பாடியில்,Paadiyil - திருவாய்ப் பாடியில்
பற்று மஞ்சள் பூசி,Patru Manjal Poosi - பற்றுப் பார்க்கும் மஞ்சளை(த்திருமேனி யெங்கும் பெண்கள் கையால் தனித் தனியே) பூசப் பெற்று,
சிற்றில் சிதைத்து,Sitril Sithaithu - (அப் பெண்கள் இழைக்கும்) சிற்றில்களை உதைத்தழித்து (இப்படி)
எங்கும்,Engum - எல்லா விடங்களிலும்
தீமை செய்து,Theemai Seidhu - தீம்புகளைச் செய்து கொண்டு
பாவை மாரொடு,Paavai Maarodu - அவ் விடைப் பெண்களோடே
திரியாமே,Thiriyame - திரிய வொட்டாமல்,
கன்று,Kanru - கன்றுகளினுடைய
தூளி உடை,Thooli Udai - தூள்களை யுடைத்தாய்
வேடர்,Vedar - (அடித்துப் பிடுங்கும்) வேடர்களுக் கிருப்பிடமான
கான் இடை,Kaan Idai - காட்டிலே
கன்றின் பின்,Kanrin Pin - கன்றுகளின் பின்னே (திரியும் படியாக)
என் பிள்ளையை,En Pillaiyai - என் மகனை
எற்றுக்கு போக்கினேன்,Etrukku Pokkinean - ஏதுக்காக அனுப்பினேன்!