Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 301 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
301பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 5
தம் மாமன் நந்த கோபாலன் தழீஇக் கொண்டு என் மகள் தன்னை
செம் மாந்திரே யென்று சொல்லிச் செழுங் கயற் கண்ணும் செவ் வாயும்
கொம்மை முலையும் இடையும் கொழும் பணைத் தோள்களும் கண்டிட்டு
இம் மகளைப் பெற்ற தாயர் இனித் தரியாரென்னுங் கொலோ–3-8-5
தம் மாமன்,Tham Maaman - என் மகள் தனக்கு மாமனாரான
நந்த கோபாலன்,Nandha Gopalan - நந்த கோபரானவர்
என் மகள் தன்னை,En Magal Thannai - என் பெண்ணை
தழீஇக் கொண்டு,Thazheei Kondu - (அன்புடன்) தழுவிக் கொண்டு
செம்மாந்திரு என்று சொல்லி,Semmanthiru Endru Solli - (வெட்கத்தாலே தரையைக் கீறி முகங்கவிழ்ந்து நிற்காமல்) செவ்வனே நில் என்று சொல்லி
செழு கயல் கண்ணும்,Sezhu Kayal Kannum - (பிறகு ஸர்வாங்க ஸெளந்தர்யத்தையுங் காணலாம்படி அவள் ருஜுவாக நிற்க)அழகிய மீன் போன்ற (அவளது) கண்களையும்
செம் வாயும்,Sem Vaayum - சிவந்த அதரத்தையும்
கொம்மை முலையும்,Kommai Mulaiyum - (கச்சுக்கு அடங்காமல்) பெருத்திருக்கின்ற முலையையும்
இடையும்,Edayum - இடுப்பினழகையும்
கொழு பணை தோள்களும்,Kozhu Panai Tholgalum - பெருத்த மூங்கில் போன்ற தோள்களையும்
கண்டிட்டு,Kandittu - நன்றாகப் பார்த்து
இ மகளை பெற்ற தாயர்,E Magalai Petra Thaayar - “இப் பெண் பிள்ளையைப் பெற்ற தாயானவள்
இனி,Eni - இவளைப் பிரிந்த பின்பு
தரியார் என்னும் கொல் ஓ,Thariyaar Ennum Kol O - உயிர் தரித்திருக்க மாட்டாள்” என்று சொல்லுவரோ?.