Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 211 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
211பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 10
சொல்லி லரசிப் படுதி நங்காய் சுழலுடையன் உன் பிள்ளை தானே
இல்லம் புகுந்து என் மகளைக் கூவிக் கையில் வளையைக் கழற்றிக் கொண்டு
கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கொருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு நானல்லேனென்று சிரிக்கின்றானே–2-9-10
நங்காய்,Nangai - யசோதைப் பிராட்டி
சொல்லில்,Sollil - உன் மகன் செய்த தீமைகளை நாங்கள் சொன்னால்
அரசிப்படுதி,Arasippaduthi - அதற்காக நீ சீற்றம் கொள்ளா நின்றாய் (அரசி – அரசன் மனைவி. அரசிப்படுதி – அரசியின் தன்மையை அடைகிறாய்;
இது கோபிக்கிறாயென்ற பொருளைத் தந்தது.)

உன் பிள்ளை தான்,Un Pillai Thaan - உன் பிள்ளையோ என்றால்
சூழல் உடையனே,Soozhal Udaiyane - (பற்பல) வஞ்சனச் செய்கைகளை உடையனா இருக்கின்றானே (என்று ஒரு இடைச்சி சொல்ல அவன் என்ன தீமை செய்தான் என்று யசோதை கேட்க)
இல்லம் புகுந்து,EIlam Pugundhu - என் வீட்டினுள் புகுந்து
என் மகளை,En Magalai - என் பெண்ணை
கூவி,Koovi - பேர் சொல்லி அழைத்து
கையில் வளையை,Kaiyil Valaiyai - அவளுடைய கையிலிருந்த வளையை
கழற்றிக் கொண்டு,Kazhaththi Kondu - பலாத்காரமாக நீக்கிக் கொண்டுபோய்
கொல்லையில் நின்றும்,Kollayil Nindrum - காடுகளில் நின்றும்
நாவற்பழங்கள்,Naavar Pazhangal - நாவற்பழங்களை
கொணர்ந்து,Konarndhu - இடைச்சேரி தெருக்களில் கொண்டு வந்து
அங்கு,Angu - அவ் விடத்தில்
விற்ற,Vitra - அவற்றை விற்பனை செய்யலுற்ற
ஒருத்திக்கு,Oruththikku - ஒரு பெண் பிள்ளைக்கு
அவ்வளை,Avvalai - அந்த என் மகளுடைய கை வளையை
கொடுத்து,Koduthu - கொடுத்து
நல்லன,Nallana - (அதற்குப் பதிலாக) (தனக்கு) நல்லவையாகத் தோற்றின
நாவல் பழங்கள்,Naaval Pazhangal - நாவற் பழங்களை
கொண்டு,Kondu - அவளிடத்தில் வாங்கிக் கொண்டு
நான் அல்லேன் என்று,Naan Allaen Endru - (போரும் போராதென்று விவாதப் படுகிற வளவிலே , என்னைத் தன் அருகில் வரக் கண்டு,
நான் ஒன்றுங் கேளாதிருக்கச் செய்தேயே) (உன் மகளினது கை வளையை களவு கண்டவன்) நான் அல்லேன் என்று தானாகவேச் சொல்லி

சிரிக்கின்றான்,Sirikkindran - (அவ்வளவில் தன் திருட்டுத்தனம் வெளியானதை தானே அறிந்து கொண்டு) ஓ! மோசம் போனோமே என்று சிரியா நின்றான்.(இதிலும் மிக்கத் தீமையுண்டோ என்கிறாள்)