திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 44 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
44பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 1
மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில் பேணி உனக்குப் பிரமன் விடு தந்தான் மாணிக் குறளனே தாலேலோ! வைய மளந்தானே தாலேலோ!–1-3-1
பதவுரை Show / Hide
மாணிக்கம்,Maanikam - மாணிக்கத்தை
கட்டி,Katti - (இரண்டருகும்) கட்டியும்
இடை,Idai - நடுவில்
வயிரம்,Vairam - வயிரத்தை
கட்டி,Katti - கட்டியும்
ஆணிப் பொன்னால்,Aanip ponnaal - மாற்றுயர்ந்த பொன்னால்
செய்த,Seidha - செய்யப்பட்ட
வண்ணம்,Vannam - அழகிய
சிறு தொட்டில்,Siru thottil - சிறிய தொட்டிலை
பிரமன்,Piraman - சதுர்முகனானவன்
பேணி,Paeni - விரும்பி
உனக்கு,Unakku - உனக்கு
விடு தந்தான்,Vidu thandhaan - அனுப்பினான்
மாணி குறளனே,Maani kuralane - ப்ரஹம்சாரி வாமநாவதாரம் பண்ணின கண்ணனே!
தாலேலோ!,Thaalelo - தாலேலோ!
வையம்,Vaiyam - உலகங்களை
அளந்தானே,Alandhaane - (த்ரிவிக்ரமனாய்) அளந்தவனே!
தாலேலோ!,Thaalelo - தாலேலோ!