Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 267 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
267பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 4
கடு வாய்ச் சின வெங் கண் களிற்றினுக்குக் கவள மெடுத்துக் கொடுப்பானவன் போல்
அடி வாயுறக் கை யிட்டு எழப் பறித்திட்டு அமரர் பெருமான் கொண்டு நின்ற மலை
கடல் வாய்ச் சென்று மேகம் கவிழ்ந் திறங்கிக் கதுவாய்ப் பட நீர் முகந்தேறி எங்கும்
குடவாய்ப் பட நின்று மழை பொழியும் கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே–3-5-4
கடுவாய்,Kaduvaai - பயங்கரமான வாயையும்
சினம்,Sinam - மிக்க சீற்றத்தையும்
வெம் கண்,Vem Kan - தீக்ஷ்ணமான கண்களை யுமுடைய
களிற்றினுக்கு,Kalittrinukku - ஒரு யானைக்கு
கவளம்,Kavalam - சோற்றுக் கபளத்தை
எடுத்து,Edukku - திரட்டி யெடுத்து
கொடுப்பான் அவன் போல்,Koduppaan Avan Pol - கொடுக்கின்ற யானைப் பாகனைப் போல,
அமரர் பெருமான்,Amarar Perumaan - தேவர்களுக்குத் தலைவனான கண்ணபிரான்
கை,Kai - (தனது) திருக் கைகளை
அடிவாய் உற இட்டு,Adivaai Ura Ittu - (மலையின்) கீழ் வேர்ப் பற்றிலே உறும் படியாகச் செலுத்தி (மற்றொரு திருக் கையினாலே மேலே பிடித்து)
எழ பறித்திட்டு,Eza Parithittu - கிளரப் பிடுங்கி
கொண்டு நின்ற,Kondu Nindra - (தானே) தாங்கிக் கொண்டு நின்ற
மலை,Malai - மலையாவது (எது? என்னில்;)
மேகம்,Megam - மேகங்கள்
கடல் வாய் சென்று,Kadal Vaai Sendru - கடலிடத்துச் சென்று
இறங்கி கவிழ்ந்து,Irangi Kavizhnthu - (அங்கு) இறங்கிக் கவிழ்ந்து கிடந்து
கதுவாய்ப்பட,Kaduvaaippada - (கடல்) வெறுந்தரையாம்படி
நீர்,Neer - (அங்குள்ள) நீர் முழுவதையும்
முகந்து,Mukandhu - மொண்டு கொண்டு
ஏறி,Eri - (மீண்டும் ஆகாசத்திலே) ஏறி
எங்கும்,Engum - எல்லாவிடத்தும்
குடம் வாய்ப்பட நின்று,Kudam Vaippada Nindru - குடங்களில் நின்றும் நீரைச் சொரியுமா போலே
மழை பொழியும்,Mazhai Pozhiyum - மழை பொழியா நிற்கப் பெற்ற
கோவர்,Kovar - குடையே-.