திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 108 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
108பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 1
வட்டு நிடுவே வளர்கின்ற மாணிக்க மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தே போல் சொட்டுச் சொட்டென்னத் துளிக்கத் துளிக்க என் குட்டன் வந்து என்னைப் புறம் புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம் புல்குவான்–1-9-1
பதவுரை Show / Hide
என் குட்டன்,En kutthan - என் பிள்ளை
வட்டு நடுவே,Vattu naduve - (இரண்டு நீலரத்ந) வட்டுகளின் நிடுவே
வளர்கின்ற,Valarkindra - வளர்த்துக் கொண்டிருப்பதான
மாணிக்கம் மொட்டு,Manikkam mottu - இந்திர நீலமயமான அரும்பினுடைய
நுனையில்,Nunaiyil - நுனியில்
முளைக்கின்ற,Mulaikkindra - உண்டாகின்ற
முத்தே போல்,Mutthe pol - முத்தைப் போல
சொட்டு சொட்டு என்ன,Sottu sottu enna - சொட்டுச் சொட்டென்ற ஓசை யுண்டாகும்படி
துளிர்க்க துளிர்க்க,Thulirkkal thulirkkal - (அம்மாணிக்க மொட்டு) பல தரம் துளியா நிற்க
வந்து,Vandhu - ஓடி வந்து
என்னை,Ennai - என்னுடைய
புறம்,Puram - முதுகை
புல்குவான்,Pulkuvan - கட்டிக் கொள்வான்;
கோவிந்தன் என்னை புறம்புல்குவான்,Govindan ennai purampulkuvan - கோவிந்தன் என்னை புறம்புல்குவான்