Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 395 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
395பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 5
உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடராழியும் சங்கும்
மழுவொடு வாளும் படைக்கல முடைய மால் புருடோத்தமன் வாழ்வு
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப் பொழு தளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரை மேல் கண்ட மென்னும் கடி நகரே–4-7-5
எழுமையும்,Ezhumaiyum - ஏழு ஜந்மங்களிலும்
கூடி ஈண்டிட,Koodi Eendhida - சேர்ந்து திரண்ட
பாவம் எல்லாம்,Paavam Ellaam - பாவங்களை யெல்லாம்
இறைப் பொழுது அளவினில்,Eraip Pozhuthu Alavinil - க்ஷண காலத்துக்குள்ளே
கழுவிடும்,Kazhuvidum - போக்கி விடும்படியான
பெருமை,Perumai - பெருமையை யுடைய கங்கையின் கரை மேல்;
கண்டம் என்னும் கடி நகர்;,Kandam Ennum Kadi Nagar - ‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய சிறந்த நகரமானது
உழுவது ஓர் படையும்,Uzhuvadhu Or Padaiyum - உழுவதற்கு உரிய கருவியாகிய கலப்பையும்
உலக்கையும்,Ulakkaiyum - உலக்கையையும்
வில்லும்,Villum - ஸ்ரீசார்ங்கத்தையும்
ஒண் சுடர்,On Sudar - அழகிய தேஜஸ்ஸையுடைய
ஆழியும்,Aazhiyum - திரு வாழியையும்
சங்கும்,Sangum - ஸ்ரீபாஞ்ச ஜன்யத்தையும்
மழுவொடு,Mazhuvodu - கோடாலியையும்
வாளும்,Vaalum - நந்தக வாளையும்
படைக்கலம் உடைய,Padaikkalam Udaiya - ஆயுதமாக வுடையவனும்
மால்,Maal - ஸர்வேச்வரனுமான
புருடோத்தமன்,Purudhoaththaman - புருஷோத்தமப் பெருமான்
வாழ்வு,Vaazhvu - எழுந்தருளியிருக்குமிடம்