Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 393 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
393பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 3
அதிர்முக முடைய வலம்புரி குமிழ்த்தி அழலுமிழ் ஆழி கொண் டெறிந்து அங்கு
எதிர்முக வசுரர் தலைகளை யிடறும் எம் புரு டோத்தம னிருக்கை
சதுமுகன் கையில் சதுப் புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி
கதிர்முக மணி கொண்டிழி புனல் கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே–4-7-3
சதுமுகன் கையில்,Sadhumugan Kaiyil - சதுர்முக ப்ரஹ்மாவினுடைய கையிலும்
சதுப்புயன் தாளில்,Saduppuyan Thaalil - சதுப்புஜனான எம்பெருமானுடைய திருவடியிலும் (பின்பு)
சங்கரன் சடையினில்,Sankaran Sadaiyinil - சிவபெருமானுடைய ஜடையிலும்
தங்கி,Thangi - தங்கி,
கதிர்,Kathir - ஒளியுடையனவும்
மணி,Mani - ரத்னங்களை
கொண்டு,Kondu - கொழித்துக் கொண்டு
இழி,Ezhi - இழிகிற
புனல்,Punal - தீர்த்தத்தை யுடைய
கங்கை,Gangai - கங்கைக் கரையிலுள்ள
கண்டமென்னும் கடிநகர்;,Kandamennum Kadi Nagar - ‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய சிறந்த நகரமானது
அங்கு,Angu - உலகமளந்த அப்போது,
அதிர் முகம் உடைய,Adhir Mugam Udaiya - முழங்கா நின்ற முகத்தை யுடைய
வலம் புரி,Valam Puri - ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தை
குமிழ்த்தி,Kumizhthi - திருப் பவளத்தில் வைத்து ஊதியு“
அழலுமிழ்,Azhalumizh - நெருப்பை வீசா நின்றுள்ள
ஆழி கொண்டு எறிந்து,Aazhi Kondu Erindhu - திரு வாழியை யெடுத்து விட்டெறிந்தும்,
எதிர் முகம்,Edhir Mugam - (போர் செய்வதாக) எதிர்த்த முகத்தை யுடைய
அசுரர்,Asurar - அஸுரர்களுடைய
தலைகளை,Thalaigalai - தலைகளை
இடறும்,Edarum - உருட்டி யருளின
எம் புருடோத்தான் இருக்கை,Em Purudhoaththaan Irukkai - எமது புருடோத்தமனுடைய வாஸஸ்தலமாகும்.