Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 398 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
398பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 8
திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய்
அரசினை யவிய அரசினை யருளும் அரி புருடோத்தம னமர்வு
நிரை நிரை யாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்கு விட்டு இரண்டு
கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்ட மென்னும் கடி நகரே–4-7-8
நெடியன,Nediyana - நீண்டவையா யிரா நின்றுள்ள
யூபம்,Yoopam - (பசுக்கள் கட்டுகிற) யூப ஸ்தம்பங்களானவை
நிரை நிரை ஆக,Nirai Nirai Aaga - திரள் திரளாக
நிரந்தரம்,Nirandharam - இடை விடாமல்
ஒழுங்கு விட்டு,Ozhungu Vittu - நெடுக ஓடா நிற்பதும்
இரண்டு கரை புரை ,Erandu Karai Purai - இரு பக்கத்துக் கரைகளும் தம்மிலே ஒத்து
வேள்வி புகை கமழ்,Velvi Pugai Kamazha - யாக குண்டத்திலுண்டாகும் புகைகளால் பரிமளியா நிற்பதுமான
கங்கை,Gangai - கங்கைக் கரையில்
கண்டம் என்னும் கடி நகர்;,Kandam Ennum Kadi Nagar - ‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய சிறந்த நகரமானது
திரை பொரு,Thirai Poru - அலை யெறியா நின்றுள்ள
கடல் சூழ்,Kadal Soozh - கடலால் சூழப் பெற்ற
திண் மதிள்,Thin Mathil - திண்மையான மதிள்களை யுடைய
துவரை,Thuvaarai - த்வாரகைக்கு
வேந்து,Vendhu - தலைவனும்
தன்,Than - தன்னுடைய
மைத்துனன் மார்க்கு,Maiththunan Maarkku - மைத்துனன் மார்களான பாண்டவர்களுக்கு
ஆய்,Aay - பக்ஷபாதியாய் நின்று
அரசனை அவிய,Arasanai Aviya - துரியோதநாதி ராஜாக்களை அழியச் செய்து
அரசினை,Arasinai - ராஜ்யத்தை
அருளும்,Arulum - (அப்பாண்டவர்கட்குக்) கொடுத்தருளினவனும்
அரி,Ari - (ஸகல பாபங்களையும்) போக்குமவனுமான
புருடோத்தமன்,Purudhoaththaman - புருஷோத்தமப் பெருமாள்
அமர்வு,Amarvu - பொருந்தி யெழுந்தருளி யிருக்குமிடம்