Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 55 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
55பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 2
என் சிறுக் குட்டன் எனக்கோரின்னமுது எம்பிரான்
தன் சிறுக் கைகளால் காட்டிக் காட்டி யழைக்கின்றான்
அஞ்சன வண்ணனோடு ஆடலாட உறுதியேல்
மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்தோடி வா–1-4-2
மா மதீ !,Maa madhi - பெருமை பொருந்தியிரா நின்ற சந்திரனே!
எனக்கு,Enakku - (தாயாகிய) எனக்கு
ஓர் இன் அமுது,Or in amudhu - விலக்ஷணமாய் மதுரமாயிருப்பதொரு அம்ருதம் போன்றவனாய்
எம்பிரான்,Empiraan - எனக்கு உபகாரகனான
என் சிறுக் குட்டன்,En siruk kuttan - என் மகனான கண்ணன்
தன் சிறு கைகளால்,Than siru kaigalal - தன்னுடைய சிறிய கைகளால்
காட்டிக் காட்டி,Kaattik kaatti - பலகாலும் (உன்னையே) காட்டி
அழைக்கின்றான்,Azaikkindran - அழையா நின்றான்;
அஞ்சனம் வண்ணனோடு,Anjanam vannanodu - மை போன்ற வடிவை யுடைய இக் கண்ண பிரானோடு
ஆடல் ஆட,Aadal aada - விளையாட
உறுதியேல்,Urudhiyael - கருதினாயாகில்
மஞ்சில்,Manjil - மேகத்திலே
மறையாது,Maraiyaadhu - சொருகி மறையாமல்
மகிழ்ந்து ஓடி வா,Magizhndhu odi va - உகந்து ஓடி வா.