Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 371 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
371பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 1
ஆசை வாய்ச் சென்ற சிந்தையராகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி
வாச வார் குழலாளென்று மயங்கி மாளு மெல்லைக் கண் வாய் திறவாதே
கேசவா புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
பேசு வாரவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரமன்றே–4-5-1
ஆசை வாய்,Aasai Vaai - (தனக்கு) ஆசையுள்ள விதத்திலே
சென்ற,Senra - போர்ப் பாரத்த
சிந்தையார் ஆகி,Sindhaiyaar Aagi - நெஞ்சை யுடையாராய் கொண்டு
என் அன்னை,En Annai - என்னுடைய தாய்
என் அத்தன்,En Aththan - என்னுடைய தகப்பன்
என் புத்திரர் ,En Puththirar - என்னுடைய பிள்ளைகள்
என் பூமி,En Boomi - என்னுடைய நிலம்
வாச வார்,Vaasa Vaar - பரிமளம் வீசுகின்ற
என் குழளான,En Kuzhalaana - கூந்தலை யுடையவளான என் மனைவியான
என்று,Endru - என்று சொல்லிக் கொண்டு
மயங்கி,Mayangi - (அவர்கள் பக்கத்தில்) மோஹமடைந்து
மாளும் எல்லைக் கண்,Maalum Ellaik Kan - (பழூதே பல பகலும் போக்கினாலும்) சரம ஸமயத்தில்
வாய் திறவாதே,Vaai Thiravaadhe - வாய் திறந்து(அவர்கள் பேச்சை) சொல்லி யழையாமல்
கேசவா என்றும்,Kesavaa Endrum - கேசவனே என்றும்
புருடோத்தமா என்றும்,Purudhooththamaa Endrum - புருடோத்தமனே என்றும்
கேழல் ஆகிய கேடு இலீ என்றும்,Kezhal Aagiya Kedu Ili Endrum - ‘வராஹ ரூபியாய் அவதரித்தவனும் அழிவில்லாதவனுமான எம்பெருமானே! என்றும்
பேசுவார் அவர்,Pesuvaar Avar - சொல்லுவார்கள்
எய்திய,Eithiya - அடையக் கூடிய
பெருமை,Perumai - பெருமைகளே
பேசுவான் புகில்,Pesuvaan Pugil - பேசப் புக்கால்
நம் பரம் அன்று,Nam Param Andru - நம்மால் பேசித் தலை கட்டப் போவது