Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 200 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
200பெரியாழ்வார் திருமொழி || (2-8 காப்பிடல்) - “உனக்கு ரக்ஷை யிடும்படி விலக்ஷணரான பிராமணர் சங்குகளில் நீரெடுத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்” என்று யசோதை சொல்லவும், கண்ணன் விளையாடப் போகவே, மீண்டும் ‘நீ பிராமணர்கள் ரக்ஷை யிடும்படி வராவிட்டாலும் நாற் சந்தியிலே செருக்குடன் விளையாடித் திரிதல் கூடாது. அது க்ஷுத்ர தேவதைகள் வஸிக்கிற இடமாகும். தாய் சொல்வதை இன்னுஞ் சிலகாமாவது கேள்; உனக்கு ரக்ஷை யிட விளக்கேற்றுகிறேன்; நீ அவ்விடத்தை விட்டு வரவேணும், என்கிறாள். இக்காலத்திலும், விளக்கேற்றிக் குழந்தைகளுக்குச் சுழற்றும் வழக்கமுளது. 9
இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார்
தருக்கேல் நம்பி சந்தி நின்று தாய் சொல்லு கொள்ளாய் சில நாள்
திருக் காப்பு நான் உன்னைச் சாத்தத் தேசுடை வெள்ளறை நின்றாய்
உருக்காட்டும் அந்தி விளக்கு இன்று ஒளி கொள்ள ஏற்றுகிறேன் வாராய் – 2-8 9
இருக்கொடு, Irukodu - (புருஷ ஸூக்தம் முதலிய) ருக்குக்களைச் சொல்லிக் கொண்டு
நீர், Neer - தீர்த்தத்தை
சங்கில், Sangil - சங்கத்திலே
கொண்டிட்டு, Kondittu - கொணர்ந்து
எழில், Ezhil - விலக்ஷணரான
மறையோர், Maraaiyor - ப்ராஹ்மணர் (உனக்கு ரக்ஷையிடுவதற்கு)
வந்து நின்றார், Vandhu nindraar - வந்து நிற்கிறார்கள்;
நம்பி, Nambi - தீம்பு நிறைந்தவனே!
சந்தி நின்று, Sandhi nindru - நாற்சந்தியிலே நின்று
தருக்கேல், Tharukkael - செருக்கித் திரியாதே
சில நாள், Sil naal - சில காலம்
தாய் சொல்லு, Thai sollu - தாய் வார்த்தையை
கொள்ளாய், Kollaay - கேட்பாயாக;
தேசு உடை வெள்ளறை நின்றாய், Desu udai vellarai nindraay - தேஜஸ்ஸை உடைய வெள்ளறை நின்றாய்!
இன்று, Indru - இப்போது
நான், Naan - நான்
திரு காப்பு, Thiru kaappu - அழகிய ரக்ஷையை
உன்னை சாத்த, Unnai saathu - உனக்கு இடுதற்காக
உருகாட்டும் அந்திவிளக்கு, Urukaatum andhivilakku - உன் திருமேனி வடிவத்தைக் காட்டுகின்ற அந்தி விளக்கை
ஏற்றுகேன் வாராய், Etruken vaaraay - ஏற்றுவேன் (இதைக்காண) கடுக வருவாயாக