திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 38 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
38பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 16
விண் கொளமரர்கள் வேதனை தீர முன் மண் கொள் வசுதேவர் தம் மக னாய் வந்து திண் கொளசுரரைத் தேய வளர்கின்றான் கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே–1-2-16
பதவுரை Show / Hide
விண் கொள்,Vin kol - ஸ்வர்க்காதிலோகங்களை இருப்பிடமாகக் கொண்ட
அமரர்கள்,Amararagal - தேவதைகளுடைய
வேதனை தீர,Vedhanai theera - துன்பங்கள் தீரும்படி
முன்,Mun - முன்னே
மண்கொள்,Man kol - பூமியை இருப்பிடமாகக் கொண்ட
வசுதேவர் தம்,Vasudevar tham - வஸுதேவர்க்கு
மகனாய் வந்து,Maganaai vandhu - பிள்ளையாய் வந்து பிறந்து
திண்கொள்,Thin kol - வலிமைகொண்ட
அசுரர்,Asurar - அஸுரர்கள்
தேய,Theya - க்ஷயிக்கும்படி
வளர்கின்றான்,Valar kindraan - வளராநின்ற கண்ணனுடைய
கண்கள் இருந்த ஆ வந்து காணீரே,Kangal irundha aa vandhu kaaneere - கண்கள் இருந்த ஆ காணீர்!
கனம் வளையீர் வந்து காணீரே,Kanam valaiyeer vandhu kaaneere - கநக கங்கணத்தை யுடைய பெண்காள் வந்து காணீர்!!