Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 400 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
400பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 10
மூன்றெழுத் ததனை மூன்றெழுத் ததனால் மூன்றெழுத் தாக்கி மூன் றெழுத்தை
ஏன்று கொண் டிருப்பார்க்கு இரக்கம் நன்குடைய எம் புரு டோத்தம னிருக்கை
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு வானான்
கான் தடம் பொழில் சூழ் கங்கையின் கரை மேல் கண்ட மென்னும் கடி நகரே–4-7-10
கான்,Kaan - கறு நாற்றம் கமழா நின்றுள்ள
தட,Thada - பெரிய
பொழில்,Pozhil - சோலைகளினால்
சூழ்,Soozh - சூழப் பெற்ற
கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடி நகர் ;,Gangaiyin Karaimeel Kandam Ennum Kadi Nagar - கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடி நகர் ;
மூன்று எழுத்ததனை,Moonru Ezhuthadhanai - அகார மகார ஸ்வரூபமான ‘ஓம்’ என்னும் பிரணவத்தை
மூன்று எழுத்தனால்,Moonru Ezhuthanaal - (‘நிருக்தம்’ என்று) மூன்றக்ஷராமன பெயரை யுடைத்தான நிர்வசக ப்ரியையாலே
மூன்று எழுத்து ஆகி,Moonru Ezhuthu Aagi - (மூன்று பதமாய் மூன்று அர்த்தத்துக்கு வாசகமாயிருக்கும்) மூன்றெழுத்தாகப் பிரித்து
மூன்று எழுத்தை,Moonru Ezhuthai - (அந்த) மூன்றெழுத்தை (பிரணவத்தை)
ஏன்று கொண்டிருப்பார்க்கு,Eenru Kondiruppaarkku - (தஞ்சமாக நினைத்து) அது ஸந்திக்குமவர்கள் பக்கலில்
இரக்கம் நன்கு உடைய,Erakkam Nanku Udaiya - சிறந்த கருணையையுடையவனும்
மூன்று அடி நிமிர்த்து,Moonru Adi Nimirththu - அந்த பிரணவத்தை நம பத்தோடும் நாராயண பத்தோடும் நாராயண பத்தோடுங்கூட்டி மூன்று பதமாக்கி (திருவஷ்டாக்ஷரமாக்கி)
மூன்றினில்,Moonrinil - (அந்த) மூன்று பதங்களிலும்
தோன்றி,Thonri - (ஆத்மாவினுடைய அநந்யார்ஹ சேஷத்துவம் அநந்ய போக்யத்துவமாகிற மூன்று ஆகாரங்களையும்) தோன்றுவித்து.
மூன்றினில்,Moonrinil - அந்த ஆகார த்ரயத்துக்கும் பிரதி ஸம்பந்தியாக
மூன்று உரு ஆனான்,Moonru Uru Aanaan - (காணும்) சேஷித்வம் ப்ராப்யத்வம் என்கிற மூன்று ஆகாரங்களை யுடையவனுமான
எம் புருடோத்தமன் இருக்கை,Em Purudhoaththaman Irukkai - ஸ்ரீபுருஷோத்தமப் பெருமான் எழுந்தருளி யிருக்குமிடம்.