Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 219 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
219பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 7
மாவலி வேள்வியில் மாணுரு வாய்ச் சென்று
மூவடி தா வென்று இரந்த இம் மண்ணினை
ஓரடி யிட்டு இரண் டாமடி தன்னிலே
தாவடி யிட்டானால் இன்று முற்றும் தரணி யளந்தானால் இன்று முற்றும்–2-10-7
மாவலி,Maavali - மஹாபலியினுடைய
வேள்வியில்,Velviyil - யாக பூமியிலே
மாண் உரு ஆய் சென்று,Maan Uru Aai Sendru - பிரமசாரி ரூபியாய் எழுந்தருளி
மூ அடி தா என்று,Moo Adi Thaa Endru - (என் அடியாலே) மூன்றடி (நிலம்) கொடு என்று
இரந்து,Erandhu - யாசித்துப் பெற்ற
இம் மண்ணினை,Em Manninai - இந்தப்பூமியை
ஓர் அடி இட்டு,Or Adi Ittu - (அளந்து தன் வசப்படுத்தத் தொடங்கின வளவிலே) (பூமிப் பரப்படங்கலும் தனக்குள்ளே யாம்படி) ஓரடியைப் பரப்ப வைத்து (அளந்து)
இரண்டாம் அடி தன்னிலே,Erandam Adi Thannilae - இரண்டாவது அடியைக் கொண்டு அளக்கத் தொடங்கின வளவிலே
தாலி அடி இட்டானால்,Thaali Adi Ittaanal - மேலுலகங்களடங்கலும் தனக்குள்ளே யாம்படி) தாவி அடி யிட்ட கண்ண பிரானால்
இன்று முற்றும்,Indru Mutrum - இப்போது முடியா நின்றோம்;
தரணி அளந்தானால்,Dharani Alandhaanal - (தேவேந்திரனாகிய ஒரு ஆச்ரிதனுக்காக இப்படி) லோகத்தை அளந்தவனாலே
இன்று முற்றும்.,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்;