திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 95 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
95பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 10
திரைநீர்ச் சந்திர மண்டலம் போல் செங்கண்மால் கேசவன் தன் திருநீர் முகத்துத் துலங்கு சுட்டி திகழ்ந்தெங்கும் புடை பெயர பெருநீர்த் திரை யெழு கங்கை யிலும் பெரியதோர் தீர்த்த பலம் தருநீர் சிறுச் சண்ணம் துள்ளம் சோரத் தளர்நடை நடவானோ–1-7-10
பதவுரை Show / Hide
செம் கண் மால்,Sem kan mal - சிவந்த கண்களையும் கரு நிறத்தையுமுடைய
கேசவன்,Kesavan - கேசவனென்னுந் திருநாமமுடைய இவன்,
திரை நீர்,Thirai neer - அலைகின்ற நீரையுடைய ஸமுத்திரத்தின் நடுவில்
சந்திரன் மண்டலம் போல்,Chandiran mandalam pol - (அசைந்து தோன்றுகிற) ப்ரதிபிம்ப சந்த்ர மண்டலத்தைப் போல
தன்,Than - தன்னுடைய
திரு நீர்,Thiru neer - அழகிய ஒளியை யுடைய
முகத்து,Mugathu - திருமுகத்திலே
துலங்கு,Thulangu - விளங்குகின்ற
சுட்டி,Sutti - சுட்டியானது
எங்கும்,Engum - எல்லா விடத்திலும்
திழ்ந்து,Thizhnthu - ப்ரகாசித்துக் கொண்டு
புடை பெயர்,Pudai peyar - இடமாகவும் வலமாகவும் அசையவும்
பெரு நீர்,Peru neer - சிறந்த தீர்த்தமாகிய
திரை எழு கங்கையிலும்,Thirai ezhu gangaiyilum - அலை யெறிகிற கங்கையிற் காட்டிலும்
பெரியது,Periyathu - அதிகமான
ஓர்,Or - ஒப்பற்ற
தீர்த்த பலம்,Theertha balam - தீர்த்த பலத்தை
தரும்,Tharum - கொடுக்கின்ற
நீர்,Neer - ஜலத்தை உடைத்தான
சிறு சண்ணம்,Siru sannam - சிறிய சண்ணமானது
துள்ளம் சோர்,Thullam sor - துளி துளியாகச் சொட்டவும்
தளர்நடை நடவான,Thalar nadai nadavano - இளநடையை நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.)