திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 13 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
13பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) (ஸ்ரீ கிருஷ்ணாவதார கந்தமான ஸ்ரீ திருக் கோட்டியூரிலே அர்ச்சாவதார பர்யந்தமாக மங்களா சாசனம் பண்ணுகிறார் -வண்ண மாடத்தால்.) 1
வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக் கண்ணன் முற்றம் கலந்துஅள ராயிற்றே.–1-1-1
பதவுரை Show / Hide
வண்ணம்,Vannam - அழகு பொருந்திய
மாடங்கள்,Madangal - மாடங்களாலே
சூழ்,Soozh - சூழப்பட்ட
திருக்கோட்டியூர்,Thirukkottiyur - திருக்கோட்டியூரில் (எழுந்தருளியுள்ள)
கேசவன்,Kesavan - கேசவனென்ற திருநாமமுடையனாய்
நம்பி,Nambi - கல்யாணகுண பரிபூர்ணனான
கண்ணன்,Kannan - ஸ்ரீக்ருஷ்ணன்
இன் இல்,In il - (நந்தகோபருடைய) இனிய திருமாளிகையிலே
பிறந்து,Pirandhu - திருவவதிரித்தருளின வளவிலே,
எண்ணெய்,Enney - (திருவாய்ப்பாடியிலுள்ளார்) எண்ணெயையும்
சுண்ணம்,Sunnam - மஞ்சள் பொடியையும்
எதிர் எதிர் தூவிட,Ethir ethir thoovida - (ஸந்தோஷத்தாலே ஒருவர்க்கொருவர்) எதிர்த்துத்தூவ,
கண்டக்கினிய,Kandakkiniya - விசாலமாய்
நல்,Nal - விலக்ஷணமான
முற்றம்,Mutram - (நந்தகோபர் திருமாளிகையில்) திருமுற்றமானது
கலந்து,Kalandhu - (எண்ணெயும் மஞ்சள் பொடியும் துகையுண்டு) தன்னிலே சேர்ந்து
அளறு ஆயிற்று,Alaru aayitru - சேறாய்விட்டது.