Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 437 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
437பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 5
தோட்டம் இல்லவள் ஆத் தொழு ஓடை துடவையும் கிணறும் இவை யெல்லாம்
வாட்ட மின்றி உன் பொன்னடிக் கீழே வளைப்பகம் வகுத்துக் கொண் டிருந்தேன்
நாட்டு மானிடத் தோடு எனக்கு அரிது நச்சுவார் பலர் கேழலொன் றாகி
கோட்டு மண் கொண்ட கொள்கையினானே குஞ்சரம் வீழக் கொம்பொசித் தானே–5-1-5
கேழல் ஒன்று ஆகி,Kezhal Ondru Aagi - ஒப்பற்ற வராஹ ரூபியாய்க் கொண்டு
கோடு,Kodu - (தனது) கோரப் பல் நுனியில்
மண் கொண்ட,Man Konda - பூமியைத் தாங்குகையாகிற
கொள்கையினாளே,Kolgaiyinalae - கால பாவத்ந யுடையவனே
குஞ்சரம்,Kunjcharam - (குவலயாபீடமென்ற) யானையானது
வீழ,Veezha - முடியும்படி
கொம்பு,Kombu - (அதன்) தந்தத்தை
ஓசித்தானே,Osiththaanae - முறித்தெறிந்தவனே!
தோட்டம்,Thottam - தோட்டமும்
இல்லவள்,Illaval - மனைவியும்
ஆ,Aa - பசுக்களும்
தொழு,Thozhu - மாட்டுத் தொழுவமும்
ஓடை,Odai - குளமும்
துடவையும்,Thudavaiym - விளை நிலமும்
கிணறும் இவை எல்லாம்,Kinarum Ivai Ellaam - கிணறுமாகிற இவை யெல்லா வற்றையும்
வாட்டம் இன்றி,Vaattam Inri - குறைவில்லாமல்
உன் பொன் அடி கீழே,Un Pon Adi Keezhae - அடியேன் உனது அழகிய திருவடியிலே
வளைப்ப வகுத்துக் கொண்டிருந்தேன்,Valaippa Vakuththu Kondirundhaen - திரள வகுத்துக் கொண்டிரா நின்றேன்
எனக்கு,Enakku - (எல்லாம் உன் திருவடியே என்றிருக்கிற) எனக்கு
நாடு மானிடத்தோடு,Naadu Maanidaththodu - நாட்டிலுள்ள மநுஷ்யரோடு
அரிது,Aridhu - (ஸஹ வாஸம் செய்வது) அஸஹ்யம்;
பலர்,Palar - பல பேர்
நச்சுவார்,Nachchuvaaar - (இந்த ஸஹவாஸத்தை) விரும்புவர்கள்