திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 115 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
115பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 8
மூத்தவை காண முது மணற் குன்றேறி கூத்து உவந்தாடிக் குழலால் இசை பாடி வாய்த்த மறையோர் வணங்க இமையவர் ஏத்த வந்து என்னைப் புறம் புல்குவான் எம்பிரான் என்னைப் புறம் புல்குவான்–1-9-8
பதவுரை Show / Hide
மூத்தவை,Moothavai - வயசு சென்ற இடைச் சனங்கள்
காண,Kaana - காணும் படியாக
முது மணல் குன்று ஏறி,Mudhu manal kunru aeri - நெடுநாளாய் குவிந்து மேடாயிருந்த மணற்குன்றின்
வாய்த்த,Vaayththa - தன்னுடைய சேஷ்டிதத்தைக் காணும்படி கிட்டின
மறையோர்,Maraiyor - ப்ரஹ்ம ரிஷிகள்
வணங்க,Vananga - தன்னைக் கண்டு வணங்கவும்
இமையவர்,Imaiavar - தேவர்கள்
ஏத்த,Aetha - ஸ்தோத்ரஞ்செய்யவும்
குழலால் இசைபாடி,Kuzhalal isaipaadi - வேய்ங்குழலினால் ராகம் பாடிக் கொண்டும்
உவந்து,Uvandu - ஸந்தோஷித்து
கூத்து ஆடி,Koothu aadi - கூத்தாடியும் நின்று
வந்து என்னை புறம்புல்குவான்-;,Vandhu ennai purampulkuvan - வந்து என்னை புறம்புல்குவான்-;
எம்பிரான் என்னை புறம்புல்குமான்-,Emperaan ennai purampulkumaan - வந்து என்னை புறம்புல்குவான்-;