திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 409 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
409பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 8
வல் லெயிற்றுக் கேழலுமாய் வாளெயிற்றுச் சீயமுமாய் எல்லை யில்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர் எல்லியம் போது இருஞ்சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி மல்லிகை வெண் சங்கூதும் மதிளரங்க மென்பதுவே–4-8-8
பதவுரை Show / Hide
வல் எயிறு கேழலும் ஆய்,Val Eyiru Kezhllum Aay - வலிவுள்ள பற்களையுடைய வராஹமாய்த் திருவவதரித்தும்,
வாள் எயிறு சீயமும் ஆய்,Vaal Eyiru Seeyamum Aay - ஒளியையுடைய பற்களையுடைய நரஸிம்ஹமாயத் திருவவதரித்தும்
எல்லை இல்லா தரணியையும் அவுணனையும் இடந்தான்,Ellai Illaa Dharaniyaiyum Avuṇanaiyum Idandhaan - ஹிரண்யாஸுரனையும் கிண்டருளின எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற)
ஊர்,Oor - திருப்பதியாவது
இரு சிறை வண்டு,Eru Sirai Vandu - பெரிய சிறகுகளையுடைய வண்டுகளானவை
எல்லியம் போது,Elliyam Podhu - அந்திப் பொழுதிலே
எம்பெருமான் குணம் பாடி,Emperumaan Gunam Paadi - பெரிய பெருமாளுடைய திருக் குணங்களைப் பாடிக் கொண்டு
மல்லிகை வெண் சங்கு ஊதும்,Malligai Ven Sangu Uudhum - மல்லிகைப் பூவாகிற வெளுத்த சங்கை ஊதா நிற்கப் பெற்றதும்
மதில்,Mathil - திருமதிள்களை யுடையதுமான
அரங்கம் என்பது,Arangam Enpathu - திருவாங்கமென்னுந் திருப்பதியாம்.