திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 57 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
57பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 4
சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக் காட்டும் காண் தக்க தறிதியேல் சந்திரா சலம் செய்யாதே மக்கட் பெறாத மலடனல்லையேல் வா கண்டாய்–1-4-4
பதவுரை Show / Hide
சந்திரா,Chandira - சந்திரனே!
சக்கரம்,Chakaram - திருவாழி ஆழ்வானை
கையன்,Kaiyan - திருக்கையிலணிந்த கண்ணபிரான்
ஒக்கலை மேல்,Okkalai mel - (என்) இடுப்பின்மேல்
இருந்து,Irundhu - இருந்துகொண்டு
தட கண்ணால்,Thada kannaal - விசாலமான கண்களாலே
மலர் விழித்து,Malar vizhiththu - மலரப் பார்த்து
உன்னையே,Unnaiye - உன்னையே
சுட்டிகாட்டும்,Suttikattum - குக்ஷ்த்துக் காட்டுகின்றான்;
தக்கது,Thakkadhu - (உனக்குத்) தகுதியானதை
அறிதியேல்,Aridhiyel - அறிவாயாகில் (அன்றியும்)
மக்கள் பெறாத,Makkal peraadha - பிள்ளை பெறாத
மலடன் அல்லையேல்,Maladan allaiyel - மலடன் அல்லையாகில்
சலம் செய்யாதே,Salam seyyadhe - கபடம் பண்ணாமல்
வா கண்டாய்,Vaa kandai - வந்து நில்கிடாய்.