திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 341 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
341பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 4
ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர் தம் கோனார்க் கொழியக் கோவர்த்தனத்துச் செய்தான் மலை வானாட்டில் நின்று மா மலர்க் கற்பகத் தொத்திழி தேனாறு பாயும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-4
பதவுரை Show / Hide
வான் நாட்டில்,Vaan Naatil - ஸ்வர்க்க லோகத்திலுள்ள
மா மலர்,Maa Malar - பெரிய பூக்களை யுடைய
கற்பகம்,Karpagam - கல்ப வ்ருக்ஷத்தினுடைய
தொத்தில் நின்று,Thottil Ninru - பூங்கொத்தில் நின்றும்
இழி,Izhi - பெருகா நின்ற
தேன்,Then - தேனானது
ஆறு பாயும்,Aaru Paayum - ஆறாய்க் கொண்டு ஓடா நிற்கிற
தென்,Then - அழகை யுடைய திருமாலிருஞ்சோலை
ஆன் ஆயர்,Aan Aayar - பசுக்களுக்குத் தலைவரான இடையர்கள்
கூடி,Koodi - ஒன்று சேர்ந்து
அமைத்து,Amaiththu - (இந்திரனுக்காக) ஏற்படுத்தின
விழவை,Vizhavai - ஸமாராதனையை
அமரர் தம் கோனார்க்கு ஒழிய,Amarar Tham Konarkku Ozhia - (அந்த) தேவேந்திரனுக்குச் சேர வொட்டாமல் தடுத்து
கோவர்த்தனத்து,Govarthanathu - கோவர்த்தன மலைக்குச் (சேரும் படி)
செய்தான் மலை,Seithaan Malai - செய்தருளின கண்ண பிரானுடைய திருமலையாம்.