Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 392 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
392பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 2
சலம் பொதி யுடம்பின் தழலுமிழ் பேழ் வாய்ச் சந்திரன் வெங்கதிர் அஞ்ச
மலர்ந்தெழுந் தணவி மணி வண்ண வுருவின் மால் புரு டோத்தமன் வாழ்வு
நலம் திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும்
கலந்திழி புனலால் புகர் படு கங்கைக் கண்டமென்னும் கடி நகரே–4-7-2
நலம் திகழ்,Nalam Thigazh - (எம்பெருமானுடைய ஸ்ரீபாததீரத்தை வஹக்கின்றமையாலுண்டான) நன்மை விளங்கா நிற்கிற
ஜடையன்,Jadaiyan - ஜடையை யுடையவனான சிவபெருமானுடைய
முடி,Mudi - தலையில் (அணியப் பெற்றுள்ள)
கொன்றை மலரும்,Kondrai Malarum - (செந்நிறமுடைய) கொன்றைப் பூவோடும்
நாரணன்,Naaranan - (அச் சிவபிரானுக்குத் தலைவனான) நாராயணனுடைய
பாதத் துழாயும்,Paadath Thuzhaayum - திருவடிகளிற் பனைந்த (பசுமை நிறமுடைய) திருத்துழாயோடும்
கலந்து,Kalandhu - சேர்ந்து
இழி,Izhi - ஆகாயத்தில் நின்றும் பூமியில் இழிந்து வெள்ள மிடா நின்ற
புனலால்,Punalal - ஜலத்தினால்
புகர் படு,Pugar Padu - விளங்கா நின்றுள்ள
கங்கை,Gangai - கங்கைக் கரையிலுள்ள
கண்டமென்னும் கடிநகர்,Kandamennum Kadi Nagar - ‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய சிறந்த நகரமானது
சலம்,Sadam - ஜலத்தை
பொதி,Podhi - பொதிந்து கொண்டிருக்கிற
உடம்பின்,Udampin - வடிவை யுடைய
சந்திரன்,Sandhiran - சந்திரனும்
தழல்,Thazhal - நெருப்பை
உமிழ்,Umizh - உமிழா நின்றுள்ள
பேழ்,Pezh - பெரிய
வாய்,Vaai - கிரணங்களை யுடையவனாய்
வெம்,Vem - வெம்மையே இயல்வாக வுடையவான
கதிர்,Kathir - ஸூர்யனும்
அஞ்ச,Anja - அஞ்சும்படியாக
மலர்ந்து எழுந்து,Malarndhu Ezhundhu - மிகவும் பரம்பின சரீரத்தை யெடுத்துக் கொண்டு கிளர்ந்து
அணவு,Anavu - (அந்த சந்த்ர ஸூர்யர்களுடைய இருப்பிடத்தைச்) சென்று கிட்டின
மணி வண்ணன் உருவின்,Mani Vannan Uruvin - (நீலமணி போன்ற நிறம் பொருந்திய வடிவை யுடையவனும்
மால்,Maal - (அடியார் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான
புருடோத்தமன்,Purudhoaththaman - புருஷோத்தமன்
வாழ்வு,Vaazhvu - வாழுமிடம்