Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: பெரிய திருமொழி, திருமங்கையாழ்வார் (105 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
0பெரிய திருமொழி - தனியன் || கலிகன்றி என்று திருநாமம் கொண்டவர், கவிகளில் ஸூர்யன் போல் ப்ரகாசிப்பவர், அடியேன் அஞ்ஞாந இருளைத் தம் ஒளிமிக்க சொற்களால் முற்றிலும் அகற்றிய ஞானக் கதிரவனான திருமங்கை ஆழ்வாரை த்யானிக்கிறேன் 23
கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோகதிவாகரம்
யஸ்ய கோபி: ப்ரகாஸாபி ஆவித்யம் நிஹதம் தம:
யஸ்ய, yasya - யாரொருவருடைய
ப்ரகாஸாபி, prakasapi - ஒளி படைத்ததான
கோபி, gopi - கிரணம் (சூர்யகிரணம்), இவ்விடத்தில் திருமங்கை ஆழ்வாரின் ஒளி படைத்த பாசுரங்கள்
ஆவித்யம், avidyam - அக்ஞானத்தாலே ஏற்பட்டதான, அக்ஞான ப்ரயுக்தம் (அறிவின்மையாகிற)
தம, tama - அந்தகாரம் (இருளானது), உள் இருட்டானது
நிஹதம், nihatham - போக்கபட்டதோ அப்படிபட்டவராய்
கலித்வம்ஸம், kalithvamsam - கலி தோஷத்தை போக்கக்கூடியவரான
லோக திவாகரம், loka divakaram - நாட்டாருக்கு சூரியனான
கவிம், kavim - பரகால கவியை
கலயாமி, kalayami - த்யானம் பண்ணுகிறேன் (நன்றியோடு நினைக்கிறேன்)
0பெரிய திருமொழி - தனியன் || திருமங்கையாழ்வாரையும் அவரது திவ்வியாயுதத்தையும் வாழ்த்துகிறது இது. (எப்பெருமானது வைபவங்களைப் பொறாத பாவிகளைக் கண்டித்து ஒழிப்பவரும், கலி தோஷம் நீங்கும்படி உலகை வாழ்விப்பவரும், திருக்குறையலூரைத் திருவவதாரஸ்தலமாக வுடையவரும், மங்கைநகர்க்கு அரசருமான திருமங்கையாழ்வார் பல்லாண்டு பல்லாண்டாக வாழவேணும். அவரது திருக்கையிலே திகழ்வதும் எம்பெருமானை வெருட்டித் திருமந்திரோபதேசம் செய்வித்துக் கொண்டதுமான வேலும் வாழி என்றதாயிற்று) 24
வாழிபரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ்வேந்தன் -வாழியரோ
மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர்மான வேல்
பரகாலன், parakalan - சத்ருக்களுக்கு ம்ருத்யு போன்று இருப்பவர்
வாழி, vazhi - வாழ்ந்தருள வேண்டும்
கலிகன்றி, kalikanri - கலியினால் வரும் தோஷத்தை போக்குபவரான
வாழி, vazhi - திருமங்கையாழ்வார் வாழி
குறையலூர், kuraiyalur - திருக்குறையலூரிலே
வாழ், vazh - நித்யவாஸம் பண்ணும் (எம்போதும் இருக்கக்கூடிய)
வேந்தன், venthan - அரசன், வேந்தன், ராஜாவானவர்
வாழி, vazhi - வாழி
மாயோனை, maayonai - வயலாளி மணவாளன் கண்ணன் (ஆச்சரியமான குணத்தை உடைய ஸர்வேஸ்வரன் அவனிடத்தே)
வாள்வலியால், valvaliyal - தன் வாளின் வலிமையைக் காட்டி
மந்திரம், mandiram - பெரிய திருமந்திரத்தை
கொள், kol - உபதேசிக்கபெற்றவராய்
மங்கையர், mangaiyar - திருமங்கையில் உள்ளாருக்கு
கோன், kon - நிர்வாககராய்
தூயேன், thuyen - உள்ளும் புறமும் ஒக்க சுத்தியையுடையவரான ஆழ்வாருடைய
சுடர், sudar - ஒளியையுடைத்தாய்
மானம், maanam - மிகப்பெரியதான
வேல், vel - வேலானது
வாழி, vazhi - வாழ்ந்திடுக
0பெரிய திருமொழி - தனியன் || திருமங்கையாழ்வாருடைய ஸ்ரீஸூக்திகளின் பெருமை சொல்லுகிறது இது (இவருடைய ஸ்ரீஸூக்திகளை ஓதி உணர்ந்தால் மனனக மலங்களெல்லாம் அற்று ஹ்ருதயம் நிர்மலமாகும்; இந்த ஸ்ரீஸூக்திகளை ஓதுமவர்களுக்கு ”அண்டமாள்வதாணை” என்றபடி பரமபதம் ஸித்தமாதலால் ஸம்ஸாரத்தை அடியறுப்பவையாம் இவை; எழுத்து, சொல், பொருள், யாப்பு, அலங்காரம் என்று தமிழ் நூல்களிற் சொல்லப்பட்டுள்ள இலக்கணங்களுக்கு இலக்கியமாம் இவை; ஸகலவேதங்களிலும் சொல்லப்பட்டுள்ள அர்த்தங்கள் இவ்வாழ்வாருடைய ஸ்ரீஸூக்திகளில் சுருங்கக் காணலாயிருக்கையாலே வேதஸாரமுமாம் இவை; இந்த ஸ்ரீஸூக்திகள் அவதரித்தபின்பு பாஹ்யகுத்ருஷ்டி மதங்களெல்லாம் மாண்டுபோயினவாதலால் பரசமயப் பஞ்சுக்கு அனலின் பொறியாம் இவை) 25
நெஞ்சுக்கிருள்கடி தீபம் அடங்காநெடும்பிறவி
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழநன்னூல் துறைகள்
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்
பஞ்சுக்கனலின்பொறி பரகாலன் பனுவல்களே!
பரகாலன், parakalan - ப்ரதிபக்ஷத்துக்கு (வேதத்திற்கு புறம்பானது) காலானான ஆழ்வார் அருளிச்செய்த
பனுவல்கள், panuvalgal - பாட்டுக்களானவை
நெஞ்சுக்கு, nenjukku - மனதில் இருக்கிற
இருள், irul - இருட்டை, அக்ஞானத்தை
கடி, kadi - போக்கவல்ல
தீபம், deepam - விளக்காயும்
அடங்கா, adanga - எதுக்கும் அடங்காத
நெடும், nedum - நெடுகிபோகிற
பிறவி, piravi - பிறப்பாகிற
நஞ்சுக்கு, nanjukku - விஷத்துக்கு
நல்ல, nalla - உயர்ந்த
அமுதம், amudham - ச்லாக்யமான அம்ருதமாயும்
நல், nal - விலக்ஷனமான
தமிழ்நூல்துறைகள், tamizhlnoolthuraigal - திராவிட சாஸ்திர மார்க்கமான
அஞ்சுக்கு, anjukku - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி (பஞ்சுலக்ஷனம்), 5 அடையாளங்களுக்கும்
இலக்கியம், ilakkiyam - லக்ஷ்யமாயும்
ஆரணம், aaranam - வேதத்தின்
சாரம், saaram - சாரமாயும்
பரசமய, parasamaya - இதர மதங்களான
பஞ்சுக்கு, panjukku - பருத்திக்கு
அனலின்பொறி, analinpori - நெருப்புப் பொறியாக இருக்கும் பரகாலனுடைய பாசுரங்கள்
0பெரிய திருமொழி - தனியன் || எம்பார் என்னுமாசிரியர் எம்பெருமானார் திருவடிகளிலே வந்து வணங்கிப் பிரார்த்திக்கின்றார் ( ஸ்வாமிந்! தேவரீரையொழிய வேறுயாரும் அடியோங்களுக்குப் புகலாவாரில்லை ; தத்துவ நூல்களில் எங்களுக்கு உண்டான எவ்வளவோ ஸம்சயங்களை இதுவரையில் தேவரீர் போக்கியருளி மஹோபகாரம் செய்திருக்கிறது. அதெல்லாம் பெரிதல்ல; திருமங்கையாழ்வாருடைய திவ்யஸூக்திகளை எவ்வளவு ச்ரமப்பட்டுக் கண்டபாடஞ் செய்தாலும் மறப்பின் மிகுதியாலே தரிக்கமுடியாமல் வருந்துகிற எங்களுக்கு எப்படியாவது அந்த ஸ்ரீஸூக்திகளையெல்லாம் தரிக்கும்படியான மனவுறுதியை அருள் செய்யவேணும்) 26
எங்கள் கதியே இராமாநுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா ! – பொங்குபுகழ்
மங்கையர்கோன் ஈந்த மறை ஆயிரம் அனைத்தும்
தங்கு மனம் நீ எனக்குத் தா!
எங்கள் கதியே, engal kathiye - எங்களுக்கு அடைக்கலமாய் இருக்குமவரே
இராமாநுச , Ramanuja - இராமாநுஜன் என்னும் திருநாமத்தையுடையவராய்
முனியே, muniye - ஆத்மாக்களின் ரக்ஷனத்தை மனனம் பண்ணுபவரே
சங்கை, sangai - வேத சாஸ்திரத்தில் இருக்கும் ஐயங்களை எல்லாம்
கெடுத்து, keduthu - போக்கி
ஆண்டு, aandu - எல்லாரையும் அடிமை கொண்டவரான
தவராசா, thavarasa - எதிராஜரே
பொங்கு, pongu - மிகுந்த
புகழ், pugazh - பெருமையுடைய
மங்கையர்கோன், mangaiyarkon - திருமங்கையில் உள்ளாருக்கு ராஜாவான திருமங்கையாழ்வார்
ஈந்த, eendha - அருளிச்செய்த
மறை, marai - வேத ரூபமான
ஆயிரம் அனைத்தும், ayiram anaithum - ஆயிரம் பாட்டாக இருக்கும் பெரிய திருமொழி பிரபந்தமும், அனைத்தும்
தங்கு மனம், thangu manam - தரித்திருக்கும்படியான மனதை
நீ எனக்கு தா, nee enakku tha - அடியேனுக்கு, தேவரீர் தந்தருள வேண்டும்
0பெரிய திருமொழி - தனியன் || ஸர்வேச்வரனைத் தனிவழியிலே வழிபறிக்க வேணுமென்று முயற்சி கொண்டு திருவரசடியிலே மறைந்திருந்த திருமங்கைமன்னனே!, வேற்படை யேந்திய திருக்கையாலே அடியேனுடைய பாவங்களைக் கண்டித்தொழிக்கவேணு மென்றதாயிற்று. 27
மாலைத் தனியே வழி பறிக்க வேணுமென்று
கோலிப்பத விருந்த கொற்றவனே!
வேலை அணைத்து அருளும் கையால் அடியேன் வினையை
துணித் தருள வேணும் துணிந்து
Maalai, மாலை - சர்வேஸ்வரனான வயலாளி மணவாளனை
Thaniye vazhi, தனியே வழி - தனி வழியிலே
Parikka venum, பறிக்க வேணும் - கொள்ளையடித்துவிட வேண்டும்
Enru koli, என்று கோலி - முயன்று, ஆசைப்பட்டு
Padha virunda, பத விருந்த - (அரச மரத்தடியிலே) பதுங்கி இருந்த
Kotravane, கொற்றவனே - அரசனான திருமங்கை மன்னனே
Velai, வேலை - வேல் என்னும் ஆயுதத்தை
Anaithu arulum, அணைத்து அருளும் - அணைக்கும்படியான
Kaiyaal, கையால் - திருக்கையாலே
Adiyen, அடியேன் - சேஷபூதனான என்னுடைய
Vinaiyai, வினையை - பாபங்களை
Thunindhu, துணிந்து - துணிவையுற்று
Thunith tharula venum, துணித் தருள வேணும் - வெட்டிக் களைந்தருள வேண்டும்
948பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) (அநாதிகாலம் விஷயப்ரவணராய் எம்பெருமானை மறந்திருந்த இவ்வாழ்வார், நிர்ஹேதுகமான பகவத்கிருபையால் திருவஷ்டாக்ஷர மஹாமந்திரத்தைப் பெற்று ஸ்வரூபமுணர்ந்து திருந்தினராதலால், அந்த மஹா மந்திரத்தின் (உள்ளீடான ஸ்ரீ நாராயண நாமத்தின்) சிறப்பை விரித்துரைத்துக்கொண்டு, தாம் நெடுங்காலமாக பகவத் விஷயத்தை மறந்து அநர்த்தப்பட்டபடியையும் இப்போது உஜ்ஜீவிக்கப் பெற்றபடியையும் பலருமறியப் பேசுகிறார்) 1
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-1
வாடினேன், Vaadinen - கீழ்க் கழிந்த காலமெல்லாம் வாடிக் கிடந்தேன்;
வாடி, Vaadi - அப்படி வாடியிருந்ததனால்
மனத்தால் வருந்தினேன், Manathal varundhinen - மனவருத்தமடைந்தேன்;
பெரு துயர் இடும்பையில், Peru thuyar idumbaiyil - அளவற்ற துக்கங்களுக்கு இருப்பிடமான ஸம்ஸாரத்திலே
பிறந்து கூடினேன், Pirandhu koodinen - பிறந்து (அந்த ஸம்ஸாரத்திலேயே) பொருந்தப் பெற்றேன்;
கூடி, Koodi - அப்படி ஸம்ஸாரியாய்க் கிடந்ததனால்
இளையவர் தரும் கலவியே கருதி, Ilaiyavar tharum kalaviye karudhi - இளமை தங்கிய பெண்கள் தரக்கூடிய சிற்றின்பத்தை ஆசைப்பட்டு
அவர் தம்மோடு ஓடினேன், Avar thammodu odinen - அந்தப்பெண்கள் போன வழியையே பற்றி ஓடினேன்;
ஓடி, Odi - இப்படி ஓடித்திரியுமிடத்து;
உய்வது ஓர் பொருளால், Uyvadhu or porulal - ஆத்மோஜ்ஜீவநத்துக்கு உறுப்பான எம்பெருமான் திருவருளாலே
உணர்வு எனும் பெரு பதம் திரிந்து, Unarvu enum peru padham thirindhu - ஞானமென்கிற ஒரு சிறந்த ஸ்தானத்தில் அடிவைத்து
நாடினேன், Naadinen - நன்மை தீமைகளை ஆராயப் புகுந்தேன்;
நாடி, Naadi - அப்படி ஆராயுமளவில்
நாராயணா என்னும் நாமம் நான் கண்டு கொண்டேன், Narayana enum naamam naan kandu konden - திருவஷ்டாக்ஷர மஹா மந்த்ரத்தை நான் லபிக்கப்பெற்றேன்.
949பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) (இப்பாட்டிலும் முன்னடிகளால் பூர்வாவஸ்தையில் அநுதாபத்தையும், பின்னடிகளால் உத்தராவஸ்தையில் ஆநந்தத்தையும் பேசுகிறார்) 2
ஆவியே அமுதே என நினைந்து உருகி அவரவர் பணை முலை துணையா
பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுது போய் ஒழிந்தன நாள்கள்
தூவிசேர் அன்னம் துணையோடும் புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என்
நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் –1-1-2
ஆவியே என, Aaviye ena - ‘எனக்கு உயிர் போன்றவளே!‘ என்றும்
அமுதே என, Amudhe ena - ‘எனக்கு அம்ருதம் போல் இனியவளே!’ என்றும் (இப்படிப் பலவாறாகச் சொல்லி வாய் பிதற்றிக்கொண்டு)
நினைந்து உருகி, Ninaindhu urughi - சிற்றின்பங்களை நினைத்து நினைத்து மனமுருகி
அவர் அவர், Avar avar - பலபல பெண்டுகளுடைய
பணைமுலை, Panaimulai - பருத்த முலைகளையே
துணை ஆ, Thunai aa - ரக்ஷகமாகக்கொண்டு
பாவியேன், Paaviyen - பாபியான நான்
உணராது, Unaraadhu - ஸ்வரூபஜ்ஞானம் பெறாததன் பயனாக
எத்தனை பகலும் பழுது போய் ஒழிந்தன, Eththanai pagalum pazhuthu poy olindhena - ஐயோ! எத்தனை காலம் வீணாகக் கழிந்தன;
எத்தனை நாட்கள் பழுது போய் ஒழிந்தன, Eththanai naatkal pazhuthu poy olindhena - அந்தோ எத்தனை நாள்கள் பாழாய்க் கழிந்தன! (காலமெல்லாம் பாழாகப் போயிற்றே!)
தூவிசேர் அன்னம், Thoovisaar annam - இறகுகளையுடைய அன்னப்பறவைகள்
துணையொடும் புணரும், Thunaiyodum punarum - பேடையோடு புணருமிடமாய்
புனல் சூழ், Punal soozh - நீர்நிலங்கள் சூழ்ந்ததான
குடந்தையே, Kudandhaye - திருக்குடந்தையையே
தொழுது, Thozhudhu - ஸேவித்து
உய்ய, Uyya - உஜ்ஜீவிக்கும்படியாக
நாராயணா என்னும் நாமம் என்நாவினால் நான் கண்டு கொண்டேன், Narayana enum naamam ennavinal naan kandu konden - திருவஷ்டாக்ஷர மஹா மந்த்ரத்தை எனது நாவிலே உரைத்துக் கொள்ளப் பெற்றேன்
950பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) (பகவத் விஷயானுபவத்தாலே மிகவும் இனிதாகச் செல்ல வேண்டிய காலமெல்லாம் பாழாய்க் கழிந்தனவே யென்கிற அநு தாபமே மீண்டும் மேலிட்டு உள்ளடங்காத துக்கந் தோன்றப் பேசுகிறார்) 3
சேமமே வேண்டித் தீ வினை பெருக்கித் தெரிவைமார் உருவமே மருவி
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழிந்தன கழிந்த வந்நாள்கள்
காமனார் தாதை நம்முடை யடிகள் தம்மடைந்தார் மனத்திருப்பார்
நாமம் நானுய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-3
சேமமே வேண்டி, Semame vendi - நன்மையையே அபேக்ஷித்திருந்தும் (அதற்கு உறுப்பாக வினை செய்யாமல்)
தீ வினை பெருக்கி, Thi vinai perukki - துஷ்கருமங்களை அதிகமாகச் செய்து
தெரிவைமார் உருவமே மருவி, Therivaimaar uruvame maruvi - ஸ்திரீகளுடைய வடிவழகையே பேணி
கழிந்த அந்நாள்கள், Kazhintha annaalkal - கீழே கழிந்த நாள்களானவை
ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய் ஒழிந்தன, Oomanar kanda kanavilum pazhudhu aay ozhindhana - ஊமை கண்ட கனவிலுங் காட்டில் வீணாகக் கழிந்து போயின
காமனார் தாதை, Kaamanar thaadhai - மன்மதனுக்குப் பிதாவும்
நம்முடை அடிகள், Nammudai adigal - நமக்கு ஸ்வாமியும்
தம் அடைந்தார் மனத்து இருப்பார், Tham adainthaar manathu iruppaar - தம்மைப் பற்றினவர்களுடைய நெஞ்சில் நீங்காதிருப்பவருமமான பெருமாளுடைய
நாமம், Naamam - திருநாமமாகிய
நாராயணா என்னும் நாமம், Narayana enum naamam - நாராயண நாமத்தை
நான் உய்ய, Naan uyya - நான் உஜ்ஜீவிக்கும்படியாக
நான் கண்டு கொண்டேன், Naan kandu konden - நான் காணப் பெற்றேன்
951பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) (‘நாம் எல்லார்க்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்’ என்று ஆசைப்பட வேண்டியது போய் எல்லாரிலும் நாம் மேற்பட்டிருக்க வேண்டும்; நாமே வெற்றி பெற்று எல்லாரும் நமக்குத் தோற்றிருக்க வேண்டும்’ என்று ஆசைப்பட்டுக் கிடந்தேன்; கையிலிருந்து ஒரு காசு நழுவிப் போனாலும் ஸர்வஸ்வமும் இழந்தாற் போல் அது தவித்துக் கிடந்தேன்; மாதர்களோடு புணர்ந்து வாழ்வதற்கு மேற்பட வாழ்ச்சியேயில்லையென்று துணிந்து கிடந்தேன் ; ஒன்றிலும் நிலைத்து நிற்கமாட்டாமல் கண்டவிடங்களிலும் சபலமாய்த் திரியும் நெஞ்சை யுடையேனான நான் என் செய்வது ! எப்படி உஜ்ஜீவிப்பது !! என்று தடுமாறிக் கிடந்தவளவிலே எம்பெருமானுடை நிர்ஹேதுகக் கிருபையாலே இன்று நன்றாக உஜ்ஜீவிக்க வழி ஏற்பட்டது என்றாராயிற்று.) 4
வென்றியே வேண்டி வீழ் பொருட்கிரங்கி வேற்கணார் கலவியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-4
வென்றியே வேண்டி, Vendriye vendi - வெற்றியையே விரும்பியும்
வீழ் பொருட்கு இரங்கி, Veezh porutku irangi - நச்வரமான பொருள்களைப் பற்றிக் கரைந்தும்
வேல் கணார் கலவியே கருதி, Vel kanar kalaviye karudhi - வேல் போன்ற கண்களையுடைய மாதர்களின் கலவியை ஆசைப்பட்டும் (ஆக இப்படிகளாலே)
நின்ற ஆ நில்லா நெஞ்சினை உடையேன், Nindra aa nilla nenjinai udaiyen - நின்றபடி நில்லாத [சஞ்சலமான] நெஞ்சை யுடையேனான நான்
என் செய்கேன், En seiken - என்ன பண்ணுவேன்?
அன்று, Andru - முன்னொரு காலத்து
நெடு விசும்புஅணவும் பன்றி ஆய், Nedu visumbu anavum panri aay - நெடிய ஆகாசத்தை அளாவி வளர்ந்த மஹா வராஹஸ்வரூபியாய்
பாரகம் கீண்ட, Paragam keenda - பூ மண்டலத்தை உத்தரித்த
பாழியான், Paazhiyaan - மிடுக்கையு டையனாய்
ஆழியான், Aazhiyaan - ஸ்ரீ ஸுதர்சந பாணியான ஸர்வேச்வரனுடைய
அருளே, Arule - க்ருபையினாலே
நான் நன்று உய்ய, Naan nanru uyya - நான் செவ்வையாக உஜ்ஜீவிக்கும்படி
நாராயணா என்னும் நாமம் நான் கண்டு கொண்டேன், Narayana enum naamam naan kandu konden - நாராயணா என்னும் நாமம் நான் கண்டு கொண்டேன்
952பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) (உலகில் திருடப்படும் பொருளின் தாரதம்மியத்திற்கு ஏற்பவும் பொருளுடையவனது யோக்யதையின் தாரதம்மியத்திற்கு ஏற்பவும் பாபத்திலும் தாரதம்மியமுண்டு; விறகு திருடினவனுடைய பாபத்திற்காட்டில் ரத்னம் திருடினவனுடைய பாபம் பெரிது; சூத்ரனுடைய பொருளைத் திருடின பாபத்திற்காட்டில் பிராமணனுடைய பொருளைத் திருடின பாபம் பெரிது. நான் திருடின பொருளும் சிறந்தது, அப்பொருளுடையவனும் ஸர்வோத்தமன் ; சிறந்தரத்னத்தினும் மேற்பட்டதான ஆத்மவஸ்துவை அபஹரித்தேன்; அந்த வஸ்துவோ ஸர்வோத்தமனான எம்பெருமானுடையது. ஆகையாலே – ‘இதற்கு மேற்பட்ட பாபமில்லை’ என்னலாம்படியான கொடிய பாபத்திற்குக் கொள்கலமான களவைச் செய்தவனாயினேன். இப்போது நானிருக்கிறபடியைப் பாருங்கள்; ஸ்ரீமந்நாராயண நாமத்தை அநுஸந்திக்க வேணுமென்று நினைக்கும்போதே எனது ஹருதயம் நீர்ப்பண்டமாக உருகுகின்றது; அத்திருநாமத்தை வாய்விட்டுச் சொல்லத் தொடங்கினால் குரல் தழதழத்துப் போகிறது; ஆநந்தக் கண்ணீர் உடம்பெங்கும் முத்துமாலையிட்டாற்போலே பெருகுகின்றது. இப்படியாயிருந்து கொண்டு அஹோராத்ரமும் நான் நாராயண நாமந்தன்னையே கதறுபவனாயினேன் என்றாராயிற்று.) 5
கள்வனேன் ஆனேன் படிறு செய்திருப்பேன் கண்டவா திரி தந்தேனேலும்
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கமைந்தேன் சிக்கெனத் திருவருள் பெற்றேன்
உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பெலாம் கண்ண நீர் சோர
நள்ளிருளளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா வென்னும் நாமம் –1-1-5
கள்வனேன் ஆனேன், Kalvanen aanen - (கீழ்க்கழிந்த காலமெல்லாம்) ஆத்மாபஹாரக் கள்வனாகி
படிறு செய்து இருப்பேன், Padiru seydhu iruppen - பலபல தீமைகளைச் செய்பவனாகி
கண்டவா திரிதந்தேனேலும், Kandava thirithandhenelum - (இப்படி) மனம்போன படியே திரிந்துழன்றேனாயினும் (இன்று)
தெள்ளியேன் ஆனேன், Thelliyen aanen - தெளிவு பெற்றவனானேன்
திருஅருள்சிக்கன பெற்றேன், Thiru arul sikkana petren - பகவத் கிருபையைத் திண்ணிதாக லபிக்கப் பெற்றேன்
செல் கதிக்கு அமைந்தேன், Sel gathikku amaindhen - போகவேண்டிய நல்வழிக்கு ஆளானேன்
உள்எலாம் உருகி, Ul elam urugi - ஹ்ருதய மடங்கலும் நீர்ப்பண்டமாகிக்
குரல் தழுத்தொழிந்தேன், Kural thazhuthozindhen - குரல் தழுதழுக்கப்பெற்று
கண்ண நீர் உடம்பு எலாம் சோர, Kanna neer udambu elam sora - ஆநந்த பாஷ்பமானது சரீரம் நிறையப்பெருகப்பெற்று
நள் இருள் அளவும் பகல் அளவும், Nal irul alavum pagal alavum - அஹோராத்ர விபாகமின்றி ஸர்வகாலத்திலும்
நாராயணா என்னும் நாமம் நான் அழைப்பன், Narayana enum naamam naan azhaippan - நாராயணா நாமத்தைச்சொல்லி நான் கதறா நிற்பன்
953பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) (திருமந்திரத்தின் அர்த்தத்தை ஒருபடி அநு ஸந்திப்பதாயிருக்கும் இப்பாட்டு. மாதா பிதா ப்ராதா நிவாஸச் சரணம் ஸுஹ்ருத் கதிர் நாராயண என்று ஸுபாலோபநிஷத்திலே சொன்ன அர்த்தத்தை அநுஸந்திக்கிறார். எனக்குப் பல உபகாரங்கள் பண்ணினவனும், எனக்குத் தந்தையும், எனக்கு எல்லா உறவுமுறையும், விரோதிகளைப் போக்கி என்னை ஆண்டவனும், என்னுடைய ஜீவித ஸர்வஸ்வமும், ஸங்கல்பத்தாலல்லாமல் சரமாரி பொழிந்து ராக்ஷஸவர்க்கங்களைக் கிழங்கெடுத்தவனுமான ஸர்வஸ்வாமி எழுந்தருளியிருக்கிற பரமபோக்யமான தஞ்சைமாமணிக்கோயிலைத் தொழுது ‘ஸர்வவித பந் துவும் அவனே” என்கிற அர்த்தத்துக்கு வாசகமான திருநாமத்தைக் காணப் பெற்றேன் என்றாராயிற்று.) 6
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கரசு என்னுடை வாணாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுத்த வெம் மண்ணல்
வம்புலாம் சோலை மா மதிள் தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-6
நம்பிகாள், Nambikaal - பகவத் குணாநுபவத்தால் நிறைந்திருக்கின்ற பாகவதர்களே!
எம்பிரான், Embiraan - எமக்கு உபகாரகனும்
எந்தை, Enthai - எமக்குத் தந்தையும்
என்னுடைய சுற்றம், Ennudaiya sutram - எனக்கு ஸகலவித பந்துவும்
எனக்கு அரசு, Enakku arasu - என்னை ஆண்டவனும்
என்னுடைய வாழ்நாள், Ennudaiya vaazhnaal - என்னுடைய ப்ராண பூதனும்
அரக்கர் வெருக்கொள அம்பினால், Arakkar verukkola ambinaal - ராக்ஷஸர் அஞ்சும்படியாக அம்புகளினால்
நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல், Nerukki avar uyir sekutha em annal - தகர்த்து அவர்களது உயிரைமுடித்த அஸ்மத்ஸ்வாமியுமான ஸர்வேச்ரனுடைய
வம்பு உலாம் சோலை, Vambu ulaam solai - பரிமளம் வீசுகின்ற சோலைகளையும்
மாமதிள், Maamadhil - பெரிய மதிள்களையும் உடைத்தான
தஞ்சை மாமணிக்கோயிலே வணங்கி, Thanjai maa manikkoyile vanangi - தஞ்சை மாமணிக் கோயிலையே ஸேவித்து
நான் உய்ய, Naan uyya - (உங்களைப் போலே) நானும் உஜ்ஜீவிக்கும் படியாக
நாராயணா என்னும் நாமம் கண்டு கொண்டேன், Narayana enum naamam kandu konden - நாராயணா என்னும் நாமம் கண்டு கொண்டேன்
954பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) (நூல்களைக் கற்றுக் கவிபாடும் வல்லமை பெற்றவர்கள் உபயோகமற்றக்ஷத்ர மநுஷ்யர்களை வீணேசிறப்பித்துக்கூறிக் கவிபாடுவதுண்டே; அன்னவர்களை நோக்கி வெறுத்து, ஐயோ! நீங்கள் வாக்குப்படைத்ததற்கு இதுவோ ப்ரயோஜனம்; க்ருபணனைக் கல்பவ்ருக்ஷமென்பதும், நிரக்ஷரகுக்ஷியான மூடனை ப்ருஹஸ்பதியென்பதும், தெருத்திண்ணையில் தங்கவும் இடந்தராமல் துரத்தித்தள்ளுமவனை ஸர்வரக்ஷகனென்பதும் ஆகவிப்படி பொய்யுரை கூறுவதேயோ நீங்கள் கற்ற கல்விக்குப் பயனாவது!; கவிபாடுகைக்குப் பாங்கான ஊரும் ஆறும் பேருமுடையனான பெருமானை நான் காட்டித் தருகிறேன், வாருங்கள்; திருக்குடந்தையாராவமுதனை வாயாரப் புகழ்ந்து உஜ்ஜீவித்துப் போங்கள்; இதுவே உங்களுக்கு நான் உபதேசிக்கும் சிறந்த அர்த்தம் - என்கிறார்.) 7
இற்பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னதோர் தன்மை என்று உணரீர்
கற்பகம் புலவர் களைகண் என்று வுலகில் கண்டவா தொண்டரைப் பாடும்
சொற் பொருளாளீர் சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடந்தையே தொழுமின்
நற்பொருள் காண்மின் பாடி நீர் உய்ம்மின் நாராயணா வென்னும் நாமம் –1-1-7
இல் பிறப்பு அறியீர், Il pirappu ariyeer - இல்வாழ்க்கை நடத்துகிறபடியையும் குடிப்பிறப்பையும் அறியாதவர்களாயும்
இவர் அவர் என்னீர், Ivar avar enneer - இப்போது ஸம்பந்நராயிருக்கும் இவர்கள் முன்பு தரித்ரராயிருந்தவர்கள் என்று அறியாதவர்களாயும்
இன்னது ஓர் தன்மை என்று உணரீர், Innadhu or thanmai endru unareer - ‘இவர்களுடைய தன்மை இப்படிப் பட்டது’ என்று அறியாதவர்களாயும்
உலகில் தொண்டரை, Ulagil thondarai - உலகில் பிறர்க்கு இழிதொழில் செய்து ஜீவிக்கும் நீசர்களை
கற்பகம் என்று, Karpagam endru - கல்ப வ்ருக்ஷம்போல் ஸர்வஸ்வதானம் செய்பவரென்றும்
புலவர் என்று, Pulavar endru - ஸர்வஜ்ஞரென்றும்
களைகண் என்று, Kalaikan endru - ரக்ஷகர் என்றும் (ஆகவிப்படி)
கண்டவா பாடும், Kandavaa paadum - மனம் போனபடி (சிறப்பித்துக்கூறிக்) கவிபாடுகின்ற
சொல்பொருள் ஆனீர், Solporul aaneer - சொல்லும் பொருளும் நன்கறிந்த மஹாகவிகளே!
சொல்லுகேன், Solluken - உங்களுக்கு ஹிதஞ்சொல்லுகிறேன்
வம்மின், Vammin - நீசரைக் குறித்துக் கவிபாடுவதை விட்டு இப்படி வாருங்கள்
புனல் சூழ் குடந்தையே தொழுமின், Punal soozh Kudanthaiye thozhumin - நீர் சூழ்ந்த திருக்குடந்தையை ஸேவியுங்கள்
நாராயணா என்னும் நாமம் பாடி நீர் உய்ம்மின், Narayana enum naamam paadi neer uymin - நாராயணா நாமத்தைப் பாடி நீங்கள் உஜ்ஜீவித்துப் போங்கள்
நல் பொருள் காண்மின், Nal porul kaanmin - உங்களுக்கு நான் உபதேசிக்கும் சிறந்த அர்த்தம் இதுவே காணுங்கள்
955பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) (ஓர் ஆசிரியன் திருவடிகளிலே சென்று பணிந்து குனிந்து கேட்டவனல்லேனாகையாலே ஒரு சாஸ்த்ர ஞானமும் எனக்கில்லை ; நெஞ்சை ஒரு நொடிப்பொழுதாகிலும் நல்விஷயத்திலே செலுத்தின னல்லேன் ; செவி வாய் கண் மூக்கு உடலென்னுமைம்புலன்கள் விரும்புகின்ற சப்தாதி விஷயங்களிலேயே நெஞ்சைச் செலுத்திப் போந்தவனாதலால் அறிவு கேடனாய் ஹிதசிந்தை பண்ணப்பெற்றிலேன்; எனக்கொரு நன்மை ஸம்பாதியாதவளவேயன்றி உலகத்திலுள்ள பிராணிகளையெல்லாம் ஹிம்ஸிக்கும் வழியைச் சிந்தித்தும் திரிந்தேன்; எல்லாரையும் ஹிம்ஸித்து நான் வயிறு வளர்க்கும் வழியையே நோக்கினேன். இப்படி நான் இருந்தது நேற்றுவரையில் ; இன்று இந்த நிலைமைகளெல்லாம் தவிர்ந்து நல்வீடு சேர்ந்து உஜ்ஜீவிக்க வேண்டிய வழியைச் சிந்தித்து, இக்கரையில் நின்றும் அக்கரையிலே கொண்டு தள்ள வல்லதொரு திருநாமத்தைத் துணையாகப் பற்றினேன்.) 8
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை பெரு நிலத்தாருயிர்க்கு எல்லாம்
செற்றமே வேண்டித் திரி தருவேன் தவிர்ந்தேன் செல்கதிக்கு உய்யுமாறு எண்ணி
நல் துணையாகப் பற்றினேன் அடியேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-8
கலைகள், Kalaigal - சாஸ்த்ரங்களை
கற்றிலேன், Kattrilen - கற்றறிந்தவன் அல்லேன்
ஐம்புலன் கருதும் கருத்துள், Aimpulan karuthum karuthul - பஞ்சேந்திரியங்கள் விரும்புகின்ற விஷயங்களிலே
மனதைத் திருத்தினேன், Manathai thiruthinen - நெஞ்சைச் செலுத்திக் கிடந்தேன்
அதனால், Adhanaal - இப்படி இருந்ததனாலே
பேதையேன், Pethaiyen - அவிவேகியான நான்
நன்மை பெற்றிலேன், Nanmai petrilen - ஒரு நன்மையும் பெறாதவனாயினேன்
பெரு நிலத்து ஆர், Peru nilathu aar - பெரிய இப்பூமியிலேயுள்ள
உயிர்க்கு எல்லாம், Uyirku ellaam - பிராணிகளுக்கு எல்லாம்
செற்றமே வேண்டி, Settrame vendi - தீங்கு செய்வதையே புருஷார்த்தமாகக் கொண்டு
திரிதருவேன், Thiritharuven - (அதுவே போதுபோக்காகத்) திரிந்து கொண்டிருந்தேன்
தவிர்ந்தேன், Thavirnthen - (இப்படி நெடுங்காலம் கெட்டுப் போனேனாகிலும்), இன்று பகவத் கடாக்ஷத்தாலே இக்கொடுமைகளெல்லாம் தவிரப்பெற்றேன்
அடியேன், Adiyen - தாஸனாகப் பெற்ற நான்
செல்கதிக்கு உய்யும் ஆறு எண்ணி, Selkathikku uyyum aaru enni - செல்ல வேண்டிய நல்வழியை நண்ணி உஜ்ஜீவிக்கும்படியைச் சிந்தித்து
நாராயணா என்னும் நாமம், Narayana ennum namam - நாராயணா நாமத்தை
நல் துணை ஆக பற்றினேன், Nal thunai aaga patrinen - நல்ல ஸஹாயமாகக் கைக்கொண்டேன்
956பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) (நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் ” என்று பலகால் அருளிச் செய்கின்ற ஆழ்வாரை நோக்கிச் சிலர் ‘நீர் ஆதரித்துப் போருகிற இத்திருநாமம் என்ன பலனைத் தரக்கூடியது?’ என்று கேட்க, இது தரமாட்டாத பலனே உலகில் இல்லை யென்கிறார்.) 9
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயராயின வெல்லாம்
நிலம் தரும் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளோடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் யாயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-9
நாராயணா என்னும் நாமம், Narayana ennum namam - நாராயண நாமமானது (தன்னை அநுஸந்திக்கு மவர்கட்கு)
குலம் தரும், Kulam tharum - உயர்ந்த குலத்தைக் கொடுக்கும்
செல்வம் தந்திடும், Selvam thandhidum - ஐச்வரியத்தை அளிக்கும்
அடியார் படு துயர் ஆயின எல்லாம், Adiyaar padu thuyar aayina ellaam - அடியவர்கள் அனுபவிக்கிற துக்கம் என்று பேர்பெற்றவை எல்லாவற்றையும்
நிலம் தரம் செய்யும், Nilam tharam seiyum - தரை மட்டமாக்கிவிடும்
நீள் விசும்பு அருளும், Neel visumbu arulum - பரமபதத்தைக் கொடுக்கும்
அருளொடு, Arulodu - எம்பெருமானுடைய கிருபையையும்
பெரு நிலம், Peru nilam - கைங்கரியமாகிற மஹா பதவியையும்
அளிக்கும், Alikkum - உண்டாக்கும்
வலம் தரும், Valam tharum - (பகவதநுபவத்துக்குப் பாங்கான) சக்தியைக் கொடுக்கும்
மற்றும், Matrum - இன்னமும் வேண்டிய நன்மைகளை எல்லாம்
தந்திடும், Thandhidum - செய்து கொடுக்கும்
பெற்ற தாயினும், Petra thaayinum - பெற்று வளர்க்கும் தாயைக் காட்டிலும்
ஆயின செய்யும், Aayina seiyum - ஹிதங்களைச் செய்து கொடுக்கும் (ஆக இப்படி)
நலம் தரும் சொல்லை நான், Nalam tharum sollai naan - வேண்டிய நன்மைகளைத்தருமதான நாராயண நாமத்தை
கண்டு கொண்டேன், Kandu konden - அடியேன் லபிக்கப் பெற்றேன்
957பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) (இது திருநாமப்பாட்டு எனப்படும். கலியன் சொன்ன இப்பாசுரங்கள் வழியாக நாராயணா வென்னும் நாமத்தை எப்போதும் அநுஸந்தியுங்கள்; பாவங்களெல்லாம் பறந்தோடிப்போம் - என்று தலைக்கட்டுகிறார்.) 10
மஞ்சுலாம் சோலை வண்டு அறை மா நீர் மங்கையார் வாள் கலி கன்றி
செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை இவை கொண்டு சிக்கெனத் தொண்டீர்
துஞ்சும் போது அழைமின் துயர்வரில் நினைமின் துயரிலீர் சொல்லிலும் நன்றாம்
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா வென்னும் நாமம் –1-1-10
மஞ்சு உலாம் சோலை வண்டு, Manju ulaam solai vandu - மேகங்கள் உலாவுகின்ற சோலைகளையுடையதும்
வண்டுஅறை மா நீர், Vandu arai maa neer - வண்டுகள் படிந்து ஒலிசெய்கின்ற சிறந்த தீர்த்தத்தை உடையதுமான
மங்கையார், Mangaiyaar - திருமங்கையென்னும் நாட்டிலே உள்ளவர்கட்குத் தலைவரும்
வாள், Vaal - வாளை உடையவருமான
கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார்
செம் சொலால் எடுத்த, Sem solaal edutha - செவ்விய சொற்களைக்கொண்டு அருளிச்செய்த
தெய்வம், Dheivam - திவ்யமான
நல்மாலை இவை, Nal malai ivai - இந்த நல்ல சொல் மாலையை
சிக்கென கொண்டு, Sikkena kondu - நாவிலே த்ருடமாகக்கொண்டு
தொண்டீர், Thondir - பாகவதர்காள்!
துஞ்சும் போது அழைமின், Thunjum pothu azhaimin - சரீரம் முடியுங் காலத்தில் இத்திருநாமங்களைச் சொல்லுங்கோள்
துயர்வரில் நினைமின், Thuyarvaril ninaimin - மற்றும் துக்கங்களுண்டான போதும் இவற்றையே நினையுங்கோள்
துயர்இலீர் சொல்லிலும் நன்று ஆம், Thuyar ileer sollilum nanru aam - துக்கமொன்று இல்லாதவர்கள் இவற்றை அநுஸத்தித்தாலும் நன்மையாகும்
நாராயணா என்னும் நாமம், Narayana ennum namam - நாராயண நாமமானது
நம்முடை வினைக்கு, Nammudai vinaikku - நமது பாபங்களை முடிப்பதற்கு
நஞ்சு தான் கண்டிர், Nanju thaan kandir - விஷமேயாமென்பது தின்ணம்
958பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (வாலியை வதை செய்தருளின பெருமான் இனிதாக எழுந்தருளியிருக்குமிடமான இமயமலையினுள் பரம போக்யமாக அமைந்துள்ள திருப்பிரிதியைச் சென்று சேருமாறு நெஞ்சை நோக்கிக் கூறுகின்றார்.) 1
வாலி மா வலத்தொருவன துடல் கெட வரிசிலை விளைவித்து அன்று
ஏல நாறு தண் தடம் பொழில் இடம் பெற இருந்தநல்லிமயத்துள்
ஆலி மா முகிலதிர் தர வருவரை அகடுற முகடேறி
பீலி மா மயில் நடம் செய்யும் தடம் சுனைப் பிரிதி சென்று அடை நெஞ்சே -1-2-1
நெஞ்சே, Nenje - மனமே!
அன்று, Anru - ஸ்ரீராமாவதாரத்தில், சுக்ரீவன் சரணம் புகுந்தவன்று
வாலி, Vaali - வாலி என்னும் பெயரையுடையவனாய்
மா, Maa - மிக்க
வலம், Valam - பலம் பொருந்திய
ஒருவனது, Oruvanathu - ஒப்பற்றவனுடைய
உடல், Udal - சரீரம்
கெட, Keda - சிதறும்படி
வரி, Vari - அழகிய
சிலை, Silai - சார்ங்கம் (வில்)
வளைவித்து, Valaivithu - சரங்கள் பாயும் படி வளைத்து, (இன்று)
ஏலம், Elam - பரிமளம், வாசனை
நாறு, Naaru - வீசுகின்ற
தண், Than - குளிர்ந்து
தடம், Thadam - பரந்த
பொழில், Pozhil - தோட்டங்களிலே
இடம்பெற இருந்த, Idampera irundha - விசாலமாக ஸர்வேஸ்வரன் எழுந்தருளியிருக்கிற
நல் இமயத்துள், Nal Imayathul - விலக்ஷனமான இமாச்சலத்திலே
ஆலி மா முகில், Aali maa mugil - சிறு துளிகள் தெரிக்கிற பெரிய மேகங்கள்
அதிர்தர, Athirthara - அதிர முழங்கிக்கொண்டு
பீலி மா மயில், Peeli maa mayil - கணமான தோகையுடைய பெரிய மயில்களானவை
அருவரை, Aruvarai - தாவி ஏற வலிதான மலைகளிலே
அகடு உற, Agadu ura - கீழ் வயிறு தழுவும்படியாக
முகடு ஏறி, Mugadu eri - அவற்றின் சிகரங்களிலே ஏறி
நடம் செய்யும், Nadam seiyum - ஆடா நிற்பதாய்
தடம் சுனை, Thadam sunai - பரந்த சுனைகளுடைய
பிருதி, Pirudhi - திருப்பிருதி என்கிற திவ்யதேசத்தை
சென்று அடை , Sendru adai - சென்று சேர்ந்திடு
959பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (ஸுக்ரீவ மஹாராஜருடைய துயரைத் தொலைத்த விருத்தாந்தத்தைக் கீழ்ப்பாட்டில் அநுஸந்தித்தார். அந்த ஸுக்ரீவனுடைய படைத் துணையால் இராமபிரான் தன் துயரைத் தொலைத்துக் கொண்ட விருத்தாந்தத்தை இப்பாட்டில் அநுஸந்திக்கிறார்.) 2
கலங்க மாக்கடல் அரிகுலம் பணி செய்ய அருவரை யணை கட்டி
இலங்கை மா நகர் பொடி செய்தவடிகள் தாம் இருந்த நல்லிமயத்து
விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன வேழங்கள் துயர் கூர
பிலம் கொள் வாள் எயிற்று அரியவை திரிதரு பிரிதி சென்றடை நெஞ்சே –1-2-2
நெஞ்சே, Nenje - மனமே!
மா கடல், Maa kadal - மஹா ஸமுத்தரமானது
கலக்க, Kalakka - கலங்கும்படி
அரி குலம் பணி செய்ய, Ari kulam pani seiya - வானர ஸமூஹம் கைங்கரியம் பண்ண
அரு வரை, Aru varai - அசைக்க முடியாத பெரிய மலைகளைக் கொண்டு
அணை கட்டி, Anai katti - ஸேது கட்டி
மா இலங்கை நகர், Maa Ilangai nagar - பெரிய லங்காபுரியை
பொடி செய்த, Podi seitha - பொடிபடுத்திய
அடிகள் தாம், Adigal thaam - ஸர்வஸ்வாமி
இருந்த, Irundha - எழுந்தருளியிருக்கப்பெற்ற
நல் இமயத்து, Nal Imayathu - நல்ல ஹிமவானில்
விலங்கல் போல்வன விறல், Vilangal polvana viral - மலை போன்றவையாய் மிருக்கையுடையவையாய்
இரு சினத்தன, Iru sinathana - மிக்க கோபத்தை யுடையவையான
வேழங்கள், Vezhangal - யானைகள்
துயர்கூர, Thuyarkoora - துன்பப்படும்படியாக
பிலம் கொள், Bilam kol - குகைகளை இருப்பிடமாகக் கொண்டிருக்கிற
வாள் எயிறு, Vaal eyiru - வாள் போன்ற பற்களையுடைய
அரி அவை, Ari avai - சிங்கங்களானவை
திரிதரு, Thiritharu - திரியுமிடமாகிய
பிரிதி, Pirithi - திருப்பிரிதியை
சென்றுஅடை, Sendru adai - சென்று சேர்ந்திடு
960பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (ஶீதாபிராட்டிக்காக இலங்கையைப் பாழ் படுத்தினமையைச் சொன்னார் கீழ்ப்பாட்டில். நப்பின்னைப் பிராட்டிக்காகச் செய்ததொரு செயலைச் சொல்லுகிறார் இதில்) 3
துடி கொள் நுண்ணிடைச் சுரி குழல் துளங்கெயிற்று இளம் கொடி திறத்து ஆயர்
இடி கொள் வெங்குரலின விடை யடர்த்தவன் இருந்த நல்லிமயத்து
கடிகொள் வேங்கையின் நறு மலர் அமளியின் மணி யறை மிசை வேழம்
பிடியினோடு வண்டிசை சொலத் துயில் கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-3
நெஞ்சே, Nenje - மனமே!
துடி கொள் நுண் இடை, Thudi kol nun idai - உடுக்கைபோன்ற ஸூக்ஷ்மமான இடையையும்
சுரிகுழல், Surikuzhal - சுருண்ட கூந்தலையும்
துளங்கு எயிறு, Thulangu eyiru - பளபளவென்று விளங்குகின்ற பற்களையும் உடையவளாய்
இள கொடி திறத்து, Ila kodi thirathu - இளங்கொடி போன்றவளான நப்பிள்ளைப் பிராட்டிக்காக
ஆயர், Aayar - இடையர்களுடையவையாய்
இடி கொள் வெம் குரல் இனம் விடை, Idi kol vem kural inam vidai - இடிபோல் வெவ்விய குரலை யுடைவையாய் கூட்டமாக வந்தவையான ஏழு ரிஷபங்களை
அடர்த்தவன், Adarthavan - வலியடக்கின பெருமான்
இருந்த, Irundha - எழுந்தருளியிருக்கப் பெற்ற
நல் இமயத்து, Nal Imayathu - நல்ல இமயமலையினுள்
வண்டு இசை சொல, Vandu isai sola - வண்டுகள் இசைபாடா நிற்க
மணி அறை மிசை, Mani arai misai - இந்திரநீல மணிமயமான பாறைகளின் மேலே
கடிகொள் வேள்கையின் நறுமலர் அமளியில், Kadikol velkaiyin narumalar amaliyil - வேங்கைமரத்தினது மணம் மிக்க புஷ்பமயமான படுக்கையிலே
வேழம், Vezham - யானையானது
பிடியினோடு, Pidiyinodu - தன் பேடையோடுகூட
துயில்கொளும், Thuyilkolum - உறங்குமிடமான
பிரிதி, Piridhi - திருப்பிரிதியை
சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக
961பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (நரஸிம்ஹ மூர்த்தியாகத் திருவவதரித்து இரணியன் மார்வைப்பிளந்த பெருமிடுக்குத்தோற்ற எழுந்தருளியிருக்குமிட மென்கிறது இதில்.) 4
மறம் கொள் ஆள் அரி யுருவென வெருவர ஒருவனதகல் மார்வம்
திறந்து வானவர் மணி முடி பணி தர இருந்த நல்லிமயத்துள்
இறங்கி ஏனங்கள் வளை மருப்பி இடந்திடக் கிடந்து அருகு எரி வீசும்
பிறங்கு மா மணி யருவி யொ இழிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-4
நெஞ்சே!, Nenje! - மனமே!
மறம் கொள் வெருவர, Maram kol veruvara - சீற்றங்கொண்ட
ஆள் அரி உரு என, Aal ari uru ena - நரசிங்க மூர்த்தி என்று பிரஸதாவமெடுத்த மாத்திரத்திலே
வெருவர, Veruvara - உலகம் அஞ்சி நடுங்கும்படியாக (நரஸிம்ஹாவதாரஞசெய்து)
ஒருவனது, Oruvanathu - வீரரில் ஒப்பற்றவனான இரணியனுடைய
அகல் மார்வம், Agal maarvam - விசாலமான மார்பைப்
திறந்து, Thirandhu - பிளந்து
வானவர் (அந்த விடாய்தீர), Vaanavar (antha vidaaytheera) - (இப்படி இரணியனைக் கொன்ற மஹோபகாரத்தில் ஈடுபட்ட)தேவர்கள்
மணி முடி பணிதர, Mani mudi panithara - மணிமயமான கிரிடங்களணிந்த தலையாலே வணங்கும்படியாக
இருந்த, Irundha - என்பெருமான் எழுந்தருளி யிருக்கப் பெற்ற
நல் இமயத்துள், Nal Imayathul - விலக்ஷணமான இமயமலையின் கண்,
ஏனங்கள், Yenangal - பன்றிகளானவை
இறங்கி, Irangi - தலை குனிந்து
வளை மருப்பு, Valai maruppu - வளைந்த கொம்புகளாலே
இடந்திட, Idanthida - (மணிப்பாறைகளைப்) பிளக்க (பிளந்ததனால் பெயர்ந்து)
அருகு கிடந்து எரி வீசும் பிறங்கு மா மணி, Arugu kidandhu eri veesum pirangu ma mani - ஸமீபத்திலிருந்து கொண்டு, தீ வீசுகின்ற ப்ரகாசம் மிக்க சிறந்த மணிகளானவை
அருவியொடு, Aruviyodu - மலையருவிகளோடுகூட
இழிதரு, Izhitharu - இழியுமிடமான
பிரிதி, Piridhi - திருப்பிரிதியை
சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக
962பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (அவதாரங்களுக்கு அடியாகத் திருப்பாற்கடலிலே வந்து கண்வளர்ந்தருளுகிறபடியை அநுஸந்தித்துப் பேசுகிறார் இதில்.) 5
கரை செய் மாக்கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த
அரை செய் மேகலை யலர் மகள் அவளோடும் அமர்ந்த நல்லிமயத்து
வரை செய் மாக்களிர் இள வெதிர் வளர்முளை அளை மிகு தேன் தோய்த்து
பிரச வாரி தன்னிளம் பிடிக்கருள் செய்யும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-5
நெஞ்சே, Nenje - மனமே!
கனை கழல் தொழுது ஏத்த, Kanai kazhal thozhuthu etha - (ஆபரணங்கள் பூண்டதனால்) ஒலிசெய்கின்ற திருவடிகளை
அமரர்கள், Amarargal - தேவர்கள்
தொழுது ஏத்த, Thozhuthu etha - ஸேவித்துத் துதிக்கும்படியாக
கரை செய் மா கடல் கிடந்தவன், Karai sei maa kadal kidanthavan - தனக்குத்தானே கரை செய்து கொண்டிருக்கிற பெரிய கடலிலே (க்ஷீரஸாகரத்தில்) பள்ளி கொண்ட பெருமான்
அரை செய் மேகலை அலர் மகளவளொடும் அமர்ந்த, Arai sei megalai alar magalavalodum amarndha - திருவரையிலே சாந்தப்பட்ட மேகலையை யுடையளான பெரிய பிராட்டியோடு கூட எழுந்தருளியிருக்கப்பெற்ற
நல் இமயத்து, Nal imayathu - நல்ல இமயமலையின் கண்
வரைசெய் மா களிறு, Varaisei maa kaliru - மலைபோற் பெரிய ஆண் யானைகளானவை
இள வெதிர், Ila vethir - இளமூங்கிலைகளுடைய
வளர் மூளை, Valar moolai - ஓங்கி வளர்ந்த முளைகளை(பிடுங்கி)
அளை மிகு தேன் தோய்த்து, Alai migu then thoiththu - முழைஞ்சுகளிலே மிகுதியாகவுள்ள தேனிலே தோய்த்து
பிரசம் வாரி, Pirasam vaari - (அந்த) தேன்வெள்ளத்தை
தன் இள பிடிக்கு, Than ila pidikku - தனது இளையபேடைக்கு
அருள் செயும், Arul seiyum - கொடுக்குமிடமான
பிரிதி, Pridhi - திருப்பரிதியை
சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக
963பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (தேவர்களுக்காக ஸ்ரீவைகுண்டத்தைவிட்டுத் திருப்பாற்கடலிலே வந்து கண்வளர்ந்த எம்பெருமான் அக்கடலளவும் போக மாட்டாத மனிசர்க்கும் அநுகூலமாக இமயமலையிலேவந்து எழுந்தருளியிருக் கிறானென்பது தோன்ற அருளிச்செய்கிறார்) 6
பணங்கள் ஆயிரம் யுடைய நல்லரவணைப் பள்ளி கொள் பரமா வென்று
இணங்கி வானவர் மணி முடி பணி தர இருந்த நல்லிமயத்து
மணம் கொள் மாதவி நெடும் கொடி விசும்புற நிமிர்ந்தவை முகில் பற்றி
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டிசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-6
நெஞ்சே, Nenje - மனமே!
வானவர், Vaanavar - தேவர்கள்
இணங்கி, Inangi - திரளாகக் கூடி
பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு அணை பள்ளி கொள் பரமா என்று, Panangal aayiram udaiya nal aravu anai palli kol parama endru - ‘ஆயிரம் படங்களையுடைய திருவனந் தாழ்வானாகிற சயனத்திலே பள்ளி கொண்டருளும் பரமபுருஷனே!’ என்று சொல்லி,
மணி முடி பணி தர இருந்த நல்இமயத்து, Mani mudi pani thara irundha nal imayathu - மணி முடிகளாலே வணங்கும் படி எம்பெருமான் எழுந்தருளி யிருக்கப் பெற்ற நல்ல இமயமலையின் கண்,
மணம் கொள் நெடு மாதவி கொடி அவை, Manam kol nedu Madhavi kodi avai - பரிமளமுள்ளவையும் நீண்டவை யுமான குருக்கத்திக் கொடிகளானவை
விசம்பு உற நிமிர்ந்து, visumbu ura nimirndhu - ஆகாசத்தளவுஞ் சென்று நிமிர்ந்து
முகில் பற்றி பிணங்கு, Mugil patri pinangu - மேகங்களைப் பற்றிக்கொண்டு அவற்றோடு சண்டைபோடுவதனாலே
பூ, Poo - புஷ்பிக்கப்பெற்ற
பொழில், Pozhil - (குருக்கத்திச்)சோலைகளிலே
வண்டு நுழைந்து, Vandu nuzhaindhu - வண்டுகள் (மதுவைப் பருகப்) பிரவேசித்து
இசை சொலும், Isai sollum - இசைபாடுமிடமான
பிரிதி, Piridhi - திருப்பிரிதியை
சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக
964பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (இமயமலையின் தாழ்வரைகளிலே மேக மண்டலத்தளவும் ஓங்கி வளர்ந்த வேங்கைமரங்கள் மிளகு கொடிகளாலே தழுவப்பெற்றுநிற்கும்; வெளி நிலங்களிலுள்ள சிறு மலைகளிலே கொடிய வேங்கைப் புலிகள் திரியாநிற்கும். இப்படி எங்கும் வேங்கை மயமாகவேயிராநின்ற இமய மலையின் கண் தேவர்கள் வந்து செங்கழுநீர் செண்பகம் இருவாட்சி பாதிரி புன்னை குருக்கத்தி கருமுகை தாமரை என்னப்படுகிற எண்வகைப் புஷ்பங்களையும் தடாகங்களிலிருந்து கொணர்ந்து ஸமர்ப்பித்து ஸஹஸ்ரநாமங்களைச் சொல்லிக்கொண்டே நமஸ்கரிக்குமிடமாகிய திருப்பிரிதியைச் சென்று சேர் நெஞ்சே) 7
கார்கொள் வேங்கைகள் கனவரை தழுவிய கறி வளர் கொடி துன்னி
போர் கொள் வேங்கைகள் புனவரை தழுவிய பூம் பொழில் இமயத்துள்
ஏர் கொள் பூஞ்சுனைத் தடம் படிந்து இனமலர் எட்டும் இட்டு இமையோர்கள்
பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-7
நெஞ்சே, Nenje - மனமே!
கனம் வரை, Kanam varai - அழகிய தாழ்வரைகளில்
கார்கொள் வேங்கைகள், Kaarkol vengaikal - மேக மண்டலத்தை ஆகரமித்து வளர்ந்த வேங்கை மரங்களை
தழுவிய, Thazhuviya - தழுவிக்கொண்டிரா நின்ற
கறிகொடி, Karikodi - மிளகுகளின் கொடிகளானவை
துன்னி வளர், Thunni valar - நெருங்கிப் படரப்பெற்றதும்
புனம் வரை, Punam varai - கொல்லை நிலங்களிலுள்ள சிறுமலைகளிலே
போர்கொள் வேங்கைகள் தழுவிய, Porkol vengaikal thazhuviya - யுத்தத்திற்கு ஸித்தமான வேங்கைப் புலிகள் ஸஞ்சரிக்கப்பெற்றதுமாய்
பூ பொழில், Poo pozhil - அழகிய சோலைகளை யுடையதான
இமயத்துள், Imayathul - இமயமலையின் கண்
இமையோர்கள், Imaiyorkal - தேவர்கள்
ஏர் கொள் பூ சுனை தடம் படிந்து, Er kol poo sunai tadam padinthu - அழகிய புஷ்பங்களையுடைய தடாகங்களின் துறைகளிலே தீர்த்தமாடி
இனம் மலர் எட்டும் இட்டு, Inam malar ettum ittu - சிறந்த எட்டுவகைப் பூக்களையும் கொண்டு ஸமர்ப்பித்து
பேர்கள் ஆயிரம், Perkal aayiram - ஸஹஸ்ர நாமங்களையும்
பரவி நின்று, Paravi ninru - வாய்வந்தபடி சொல்லி
அடி தொழும், Adi thozhum - எம்பெருமான் திருவடிகளைப் பணியுமிடமான
பிரிதி, Pridhi - திருப்பரிதியை
சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக
965பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (இமயமலையில் சோலைகள் செறிந்து கிடக்குமாதலால் ‘ இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியா” என்னுமாபோலே பகற்போது காணமுடியாமல் இரவு காலமே விஞ்சி எங்கும் இருள் மூடிக்கிடக்கும். அப்படி இருள் மூடிக்கிடக்கிற மலையின் குஹைகளிலே பாம்புகளானவை ஆஹாரம் பெறாமல் பெரும்பசியோடே பெருமூச்சு விட்டுக்கொண்டு கிடக்கும். அப்படிப்பட்ட இமயமலையின்கண். அமரர்கள் வந்து சேர்ந்து ‘பரமபுருஷா!, ஸகல ஜகத்காரண பூதா!!, காளமேகச்யாமளா!!!” என்றிப்படி அநுஸந்தித்துக்கொண்டு நான்முகக்கடவுளை முன்னிட்டு வணங்குமிடமாகிய திருப்பிரிதி யைச் சென்று சேர் நெஞ்சே!) 8
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை இரும்பசியது கூர
அரவம் ஆவிக்குமகம் பொழில் தழுவிய அருவரை யிமயத்து
பரமனாதி எம்பனி முகில் வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள்
பிரமனோடு சென்று அடி தொழும் பெரும் தகைப் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-8
நெஞ்சே, Nenje - மனமே!
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை, Iravu koornthu irul perugiya varai muzhai - இராப்பொழுதே விஞ்சி இருள் அதிகரிக்கப்பெற்ற மலை முழஞ்சுகளிலே
இரு பசியது கூர, Iru pasiyathu koora - பெரும்பசி உண்டாக
அரவம், Aravam - மலைப்பாம்புகளானவை
ஆவிக்கும், Aavikum - பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிற
அகம் பொழில் தழுவிய, Agam pozhil thazhuviya - உட்சோலைகளோடு கூடிய
அரு வரை இமயத்து, Aru varai Imayathu - ஏறமுடியாத தாழ்வரையையுடைய இமயமலையின் கண்,
இமையோர்கள், Imaiyorkal - தேவர்கள்
பிரமனோடு சென்று, Brahmanodu sendru - நான்முகனோடு கூடச் சென்று
பரமன் என்று எண்ணி நின்று, Paraman endru enni ninru - பரமபுருஷனே! என்றும்
ஆதி என்று, Aadhi endru - ஆதி மூலமே ! என்றும்
எம் பனிமுகில் வண்ணன் என்று, Em panimukil vannan endru - குளிர்ந்த மேகம் போன்ற நிறத்தையுடைய எம்பெருமானே! என்றும்
எண்ணி நின்று, Enni ninru - அநுஸந்தித்துக் கொண்டு
அடி தொழும், Adi thozhum - திருவடிகளை வணங்குதற்குரிய
பெரு தகை, Peru thagai - பெருந்தன்மை பொருந்திய
பிரிதி, Pridhi - திருப்பிரிதியை
சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக
966பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (ஆயிரந் திருநாமங்களையும் வாயாலே சொல்லி அவற்றி துடைய அர்த்தங்களையும் அநுஸந்திப்பவர்களுக்கு எவ்விதமான துன்பமும் வந்து சேராத படியாக நித்யாநந்தத்தைக் கொடுத்து அருள் செய்கின்ற பரம புருஷன் எழுந்தருளியிருக்கப்பெற்ற இமயமலையின்கண் தாதுகள் நிறைந் திருக்கிற அசோகமலர் விகத்தால் அப்போ துண்டாகு மழகு நெருப்பு ஜ்வலிக்கிறாப்போலிருக்கும். வண்டுகளானவை அப்புஷ்பவிகாஸ சோபையைப் பார்த்து ‘இவை அசோகமலர்’ என்பதை மறந்து ‘இது நெருப்பு’ என்று ப்ரமிக்கும். அவற்றுக்கு இந்த ப்ரமம் நித்தியப்படியாகச் செல்லும். முதல் நாள் ‘இது நெருப்பு’ என்று ப்ரமித்து, பிறகு ஆராய்ந்து ‘நெருப்பு அல்ல, அசோகமலராமிவை’ என்று நிச்சயித்து அதிலே போயி ருந்தும் மறுநாளும் பழையபடியே ப்ரமித்து அதனருகு செல்ல அஞ்சியிருக்கும். இப்படி அச்சமும் அச்சங்கழிதலும் மாறாமல் செல்லப்பெற்ற திருப்பிரிதியைச் சென்று சேர் நெஞ்சே!) 9
ஓதி யாயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல்
ஏதும் இன்றி நின்று அருளும் நம் பெரும் தகை இருந்த நல்லிமயத்து
தாது மல்கிய பிண்டி விண்டலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-9
நெஞ்சே, Nenje - மனமே!
ஆயிரம் நாமங்கள், Aayiram Naamangal - ஸஹஸ்ர நாமங்களை
ஓதி, Odhi - எப்போதும் சொல்லிக் கொண்டு
உணர்ந்தவர்க்கு, Unarnthavarkku - (அத்தாலே, ஸர்வேச்வரனே ரக்ஷகனென்று) விவேகம் பெற்றவர்களுக்கு
உறுதுயர் அடையாமல், Uruthuyar Adaiyaamal - உண்டாகக்கூடிய துன்பமொன்றும் உண்டாகாதபடியாகவும்
ஏதம் இன்றி, Aedham Inri - பாவமொன்றும் இல்லாதபடியாகவும்
நின்று அருளும், Nindru Arulum - எப்போதும் க்ருபை செய்கின்ற
நம் பெருந்தகை, Nam Perunthagai - நம் ஸ்வாமியானவன்
இருந்த, Irundha - எழுந்தருளி யிருக்குமிடமான
நல் இமயத்து, Nal Imayathu - நல்ல இமயமலையின் கண்
தாது மல்கிய, Thaathu Malkiya - தாதுகள் மிக்கிருக்கிற போதுண்டான
பிண்டி, Pindi - அசோக மலர்கள்
விண்டு அலர்கின்ற, Vindu Alargindra - விரிந்து அலருகிற
தழல்புரை எழில், Thazhalpurai Ezhil - நெருப்புப் போன்ற அழகை
பேதை வண்டுகள் நோக்கி, Pedhai Vandugal Nokki - அறிவில்லாத வண்டுகள் பார்த்து
எரி என, Eri Ena - நெருப்பென்று நினைத்து
வெருவரு, Veruvaru - பயப்படுமிடமான
பிரிதி, Pridhi - திருப்பிரிதியை
சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக
967பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (ஆழ்வாருடைய சொல்மாலையாகிய இத் திரு மொழியினது அருமையான இனிய இசையைப் பாடவல்ல விலக்ஷண பாகவதர்களுக்கு மஹாபாபங்களொன்றும் கிட்டமாட்டா என்று தலைக் கட்டுகிறார்) 10
கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிட களிறு என்று
பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி எம்பெருமானை
வரி கொள் வண்டு அரை பைம் பொழில் மங்கையர் கலியனதொலி மாலை
அரியவின்னிசை பாடு நல்லடியவர்க்கு அருவினை யடையாவே –1-2-10
கரியமாமுகில் படலங்கள் அவை, Kariyamamukil Padalangal Avai - கறுத்த மஹாமேகங்களின் கூட்டங்களானவை
கிடந்து, Kidandhu - (நீர்க்கனத்தாலே திரிய மாட்டாமல்) ஓரிடத்திலே இருந்து கொண்டு
முழங்கிட, Muzhangida - கர்ஜிக்க, (அந்த கர்ஜனையைக் கேட்டு)
பெரிய மாசுணம், Periya Maasunam - பெரிய மலைப்பாம்புகளானவை
களிறு என்று, Kaliru Endru - (நமக்கு இரையாம்படி) யானைகள் (வருகின்றன) என்று நினைத்து
வரை என பெயர்தரு, Varai Ena Peyartharu - மலை பேர்ந்தாற் போலே பெயர்ந்து கிட்ட வருமிடமான
பிரிதி, Pridhi - திருப்பிரிதியிலே (எழுந்தருளியிருக்கிற)
எம்பெருமானை, Emperumaanai - எம்பெருமானைக் குறித்து
வரிகொள் வண்டு அறை பை பொழில் மங்கையர், Varikol Vandu Arai Pai Pozhil Mangaiyar - அழகிய வண்டுகள் ஒலிக்கின்ற விசாலமான சோலைகளையுடைய திருமங்கையிலே உள்ளவர்கட்குத் தலைவரான
கலியனது, Kaliyanathu - ஆழ்வாருடைய
ஒலிமாலை, Olimaalai - சொல்மாலையாகிய இத் திரு மொழியினது
அரிய இன் இசை பாடும், Ariya In Isai Paadum - அருமையான இனிய இசையைப் பாடவல்ல
நல் அடியவர்க்கு, Nal Adiyavarkku - விலக்ஷண பாகவதர்களுக்கு
அரு வினை அடையா, Aru Vinai Adaiyaa - மஹாபாபங்களொன்றும் கிட்டமாட்டா
968பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) (முற்றமுத்து.) சரீரத்துக்கு எவ்வளவு கிழத்தனம் வரக்கூடுமோ அவ்வள வும் வந்து, நடந்து செல்லமாட்டாமல் ஒரு கோலைக் கையிலே அவலம்ப மாகப் பிடித்துக்கொண்டு முதுகு கூனிட்டுப் போகவே முன்னடியை நோக்கி வளைந்து, முறிந்துபோன காலைக்கொண்டு நடக்கமுடியாதது போல ஓரடி யும் எடுத்து வைக்கமாட்டாமல் தடுமாறி, தடி பிடித்துக்கொண்டும் நடக்க மாட்டாமல் திடீரென்று தரையிலே விழுந்திருந்துகொண்டு பெருமூச்சு விட்டு இப்படியாக ச்ரமப்படுகிற காலம் வந்துவிட்டால் பதரிகாச்ர மயாத்ரையை நெஞ்சால் நினைக்கவும் முடியாதே; ஆகையால் அப்படிப்பட்ட கெட்ட நிலைமை வருவதற்கு முன்னே ஸ்ரீபதரியைச் சென்று வணங்குவோம் வாருங்க ளென்று அன்பர்களை அழைக்கிறார் போலும். 1
முற்ற மூத்துக் கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை யூடு உயிரை
வற்ற வாங்கி யுண்ட வாயான் வதரி வணங்குதுமே –1-3-1
முற்ற மூத்து, Mutra Moothu - பூர்த்தியாகக் கிழத்தனமடைந்து
கோல் துணை ஆ, Kol Thunai Aa - ஊன்றுகோலை ஸஹாயமாகக் கொண்டு கூன் முதுகிட்டு
முன் அடி நோக்கி வளைந்து, Mun Adi Nookki Valaindhu - முன்காலைக் கவிழ்ந்து நோக்குமாபோலே
இற்ற கால்போல் தள்ளி, Itra Kaalpol Thalli - முறிந்த கால்போலே தடுமாறி
மெள்ள இருந்து, Mella Irundhu - மஹாப்ரயாஸத்தோடே உட்கார்ந்து
இளையா முன், Ilaiyaa Mun - இவ்விதமாகக் கஷ்டங்களையடைவதற்கு முன்னே,
பெற்ற தாய்போல் வந்த, Petra Thaaypol Vanda - பெற்ற தாயான யசோதையின் வடிவுகொண்டு (தன்னைக் கொல்ல) வந்த
பேய்ச்சி, Peychchi - பூதனையினுடைய
பெரு முலை ஊடு, Peru Mulai Oodu - பெரிய முலையின் வழியாக
உயிரை, Uyirai - அவளது உயிரை
வற்ற வாங்கி உண்டவாயன், Vattu Vaangi Undavayan - நிச்சேஷமாக உறிஞ்சி உண்ட திருப்பவளத்தை யுடையனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற
வதரி, Vadhari - ஸ்ரீபதரியை
வணங்குதும், Vananguthum - வணங்குவோம்.
969பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) [முதுகுபற்றி.)கிழத்தனத்தில் நாலடி நடந்தாலும் பலஹீனத் தால் முதுகு நோகும்; ஒருகையாலே முதுகைப்பிடித்துக்கொள்ள வேண்டிய தாகும் ; முன் பக்கமாக வளைந்து விழாமைக்காக ஒரு தடியை ஊன்றிக்கொள்ள வேண்டியதாகும்; 2
முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன்னொரு கோலூன்றி
விதிர் விதிர்த்துக் கண் சுழன்று மேற்கிளை கொண்டு இருமி
இது வென்னப்பர் மூத்தவாறு என்று இளையவர் ஏசாமுன்
மது வுண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே –1-3-2
கை தலத்தால், Kai Thalathaal - ஒரு கையாலே
முதுகு பற்றி, Mudhugu Patri - முதுகைப் பிடித்துக்கொண்டும்
முன் ஒரு கோல் ஊன்றி, Mun Oru Kol Oonri - (மற்றொருகையாலே) முன்னே ஒரு கொம்பை ஊன்றிக் கொண்டும்
விதிர்விதிர்த்து, Vithirvithirthu - (உடல்) நடுங்கியும்
கண் சுழன்று, Kan Suzhndru - (லொக்குலொக்கென்ற) பெரிய த்வநியைக்கொண்டு இருமியும்
இளையவர், Ilaiyavar - இளம்பெண்கள் (மோவாய்த் கட்டையில் கையை வைத்துக்கொண்டு)
அப்பர் மூத்த ஆறு இது என் என்று ஏசா முன், Appar Mootha Aaru Ithu En Endru Aesa Mun - “இந்தப் பெரியவர் கிழத்தன மடைந்த விது என்ன விசித்திரம்!” என்று சொல்லிப் பரிஹஸிப்பதற்கு முன்னே,
மது உண் வண்டு, Madhu Un Vandu - பூவில் தேனைப் பருகுகின்ற வண்டுகள்
பண்கள் பாடும், Pangkal Paadum - இசை பாடப்பெற்ற
வதரி, Vadhari - ஸ்ரீபதரியை
வணங்குதும், Vananguthum - வணங்குவோம்
970பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) (உறிகள்போல்.)சரீரத்தில் நரம்புகளானவை இளமைப்பருவத்தில் மறைந்து கிடக்கும்; முதுமையில் சரீரம் பசையற உலர்ந்தபடியாலே அந்த நரம்புகள் உறிகள் போலே நீண்ட கொத்துக் கொத்தாகக் கிளம்பி விளங்கும் அதற்குத் தகுதியாக மாம்ஸம் க்ஷணமாகி மனமும் நலிவுபடும். இப்படிப்பட்ட நிலைமையிலும் ஓரிடத்தில் வெறுமனே கிடக்கமாட்டாதே தாம்பும் தடியுமாகப் புறப்பட்டு எங்கேயாவது போகத் தொடங்குவர்கள். 3
உறிகள் போல் மெய்ந்நரம்பு எழுந்து ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி
நெறியை நோக்கிக் கண் சுழன்று நின்று நடுங்கா முன்
அறிதியாகில் நெஞ்சம் அன்பாய் ஆயிர நாமம் சொல்லி
வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே –1-3-3
மெய் நரம்பு, Mei Narambu - சரீரத்திலுள்ள நரம்புகள்
உறிகள் போல் எழுந்து, Urigal Pol Ezhunthu - உறிகளைப் போலே மேலே கிளம்பித் தோன்றும்படியாக
ஊன் தளர்ந்து, Oon Thalarndhu - மாம்ஸம் கட்டுக்குலைந்து
உள்ளம் எள்கி, Ullam Elgi - நெஞ்சும் சிதிலமாகி
நெறியை நோக்கி கண் சுழன்று, Neriyai Nookki Kan Suzhndru - நடந்து செல்லவேண்டிய வழியை நோக்கினவாறே கண்கள் சுழலமிட்டு
நின்று, Ninru - போகமாட்டாதே ஸ்தம்பித்து நின்று
நடுங்கா முன், Nadunga Mun - நடுங்கும்படியான காலம் வருவதற்கு முன்னே,
நெஞ்சம், Nenjham - ஓ மனமே!
அறிதி ஆகில், Aridhi Aakil - நீ விவேகியாகில்
அன்பு ஆய், Anbu Aayi - பக்தி பூண்டு
ஆயிரம் நாமம் சொல்லி, Aayiram Naamam Solli - (எம் பெருமானது)  திருநாமங்களை யெல்லாம் சொல்லிக் கொண்டு,
வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதும், Veri Kol Vandu Pangkal Paadum Vadhari Vananguthum - பரிமளம் மிக்க வண்டுகள் இசைபாடப்பெற்ற ஸ்ரீபதரியை வணங்குவோம் வா.
971பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) (பீளைசோர.)கிழத்தனத்தில் கண்கள் சுருங்கிப்போய் அவற்றில் நின்று பிளிச்சை பெருகவும், பித்தம் மேலிட்டுத் தலைசுற்றித் தள்ளம்பாறி நடக்கவும் நேர்தல் இயல்வு. அப்படி நேர்ந்தகாலத்து வதரி வணங்குதல் முடி யாத காரியமா தலால் அப்படி நேருவதற்கு முன்னமே அதனை வணங்குதல் நன்று . . 4
பீளை சோர கண் இடுங்கி பித்தெழ முத்து இருமி
தாள்கள் நோவ தம்மில் முட்டி தள்ளி நடவா முன்
காளையாகி கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான்
பாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே –1-3-4
கண் இடுங்கி பீளை சோர, Kan Idungi Peelai Soora - கண்கள் பசையற்றுப் பிளிச்சை பெருகவும்
பித்து எழ, Piththu Ezh - பித்தம் மேலிடும்படியாகவும்
மூத்து, Moothu - கிழத்தனமடைந்து
இருமி, Irumi - (க்ஷயரோகத்தாலே) இருமிக் கொண்டு
தாள்கள் தம்மில் முட்டி நோவ, Thaalgal Thammil Mudi Nova - கால்கள் ஒன்றோடொனறு தாக்கி நோகும்படியாக
தள்ளி நடவாமுன், Thalli Nadava Mun - தடுமாறி நடப்பதற்கு முன்னே-,
அன்று, Anru - முன்னொரு காலத்தில்
காளை ஆகி, Kaalai Aagi - இளம்பிள்ளையா யிருந்துகொண்டு
கன்று மேய்த்து, Kandru Meyththu - கன்றுகளை மேய்த்து
குன்று எடுத்து நின்றான், Kundru Eduthu Nindraan - (அவற்றுக்கு நேர்ந்த மழைத் தீங்கை யொழிப்பதற்குக்) கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்து நின்ற எம்பெருமானது
வாளை பாயும் தண்தடம் சூழ்ந்த, Vaalai Paayum Thanthadam Soozhntha - வாளை மீன்கள் குதித்துப் பாய்கின்ற குளிர்ந்த குளங்கள் சூழ்ந்த
வதரி, Vadhari - ஸ்ரீபதரியை
வணங்குதும், Vananguthum - வணங்குவோம்.
972பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) (ஸம்ஸாரிகளுடைய காலக்ஷேபக்ரமத்தைப் பேசுகிறார். உடலில் வலிவு இருந்தகாலத்தில் ஒரு நல்ல காரியம் பண்ணியறியார்கள் ; விஷய போகங்கள் செய்வதற்கு எவ்வளவு நிஷித்த காரியங்கள் செய்ய வேணுமோ அவ்வளவும் செய்து தீருவர்கள்; இப்படியாக யௌவனபருவத் தைக் கழித்துவிட்டுக் கிழத்தனத்தில் வந்தவாறே அப்போதாவது இழந்த நாளைக்கு அநுதாபப்பட்டு ஏதாவது நன்மை தேடிக்கொள்ள விரும்புவார்களோ; அது கிடையாது;) 5
பண்டு காமரர் ஆனவாறும் பாவையர் வாய் அமுதம்
உண்டவாறும் வாழ்ந்தவாரும் ஒக்க உரைத்து இருமி
தண்டு காலா ஊன்றி ஊன்றித் தள்ளி நடவா முன்
வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே –1-3-5
பண்டு, Pandhu - இளம்பிராயத்தில்
காமர் ஆன ஆறும், Kaamar Aana Aarum - மாதர்கள் விரும்புதற்குத்தாம் உரியராக இருந்தபடியையும்
பாவையர்வாய் அமுதம் உண்ட ஆறும், Paavai Arvaai Amudham Unda Aarum - அம்மாதர்களுடைய வாயமுதத்தைப் பருகினபடியையும்
வாழ்ந்த ஆறும், Vaazhntha Aarum - சிற்றின்பங்களில் அழிந்தபடியையும்
ஒக்க உரைத்து இருமி, Okka Uraiththu Irumi - சொல்லுவது இருமுவது, மறுபடியும் சொல்லுவது இருமுவது ஆக இப்படியாகி
தண்ட காலா, Thanda Kaala - தடியைக் காலாகக்கொண்டு
ஊன்றி ஊன்றி, Oonri Oonri - (அசக்தியினால் ஓரிடத்திலேயே) பலதடவை ஊன்றி
தள்ளி, Thalli - தடுமாறி
நடவாமுன், Nadavaamun - நடக்க நேருவதற்கு முன்னே
வண்டு பாடும் தண் துழாயான், Vandu Paadum Than Thuzhaayaan - (மதுவுக்காக வந்து) வண்டுகள் பாடுகிற திருத்துழாய் மாலையை யுடையனான எம்பெருமானது
வதரி, Vadhari - ஸ்ரீபதரியை
வணங்குதும், Vananguthum - வணங்குவோம்
973பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) (கிழத்தனத்தில் ஒருவார்த்தை சொல்ல ஆரம்பிக்கும்போதே தட்டித் தடுமாறிக் குதலைச் சொல்லாக வரும் ; அத்தோடு கூடவே கபமும் வந்து விழும் ; கூடவே இருமலும் வந்து சேரும் ; ஆக இவ் வளவால் சரீரமானது இன்னமும் அதிகமாக பலஹீனப்பட்டுவிடும்.) 6
எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி இருமி இளைத்து உடலம்
பித்தர் போலே  சித்தம் வேறாய் பேசி அயரா முன்
அத்தன் எந்தை யாதி மூர்த்தி ஆழ் கடலைக் கடைந்த
மைத்த சோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே –1-3-6
எய்த்த சொல்லோடு, Eyththa Sollodu - பலஹீனமான பேச்சுடனே
ஈளை ஏங்கி, Eilai Aengi - கோழைவந்து தங்கப் பெற்று
இருமி, Irumi - இருமி
உடலம் இளைத்து, Udalam Ilaitthu - சரீரம் மெலிந்து
பித்தர் போல, Piththar Poala - பைத்தியம்பிடித்தவர்கள்போல
வேறு சித்தம் ஆய் பேசி, Veeru Siththam Aayi Paesi - விகாரப்பட்ட மனமுடையராய் வார்த்தை சொல்லி
அயரா முன், Ayara Mun - தளருவதற்கு முன்னே-,
அத்தன், Aththan - ஸர்வஸ்வாமியாய்
எந்தை, Endhai - எமக்குத் தந்தையாய்
ஆதிமூர்த்தி, Aadhimurthi - உலகத்திற்கு மூலக்கடவுளாய்
ஆழ் கடலை கடைந்த, Aazh Kadalai Kadaindha - (ஒரு காலத்தில் தேவர்களுக்காக) ஆழ்ந்த கடலைக் கடைந்தவனாய்
மைத்த ஜோதி, Maiththa Jothi - மைபோல் சாமமான புகரையுடையனான
எம்பெருமான், Emperumaan - எம்பெருமானுடையதான
வதரி  வணங்குதும், Vadhari Vanangudhum - ஸ்ரீபதரியை வணங்குவோம்.
974பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) (உலகில் விசித்திரமானதொன்றைப் பார்க்கும்போ தும் விகாரமானதொன்றை பார்க்கும்போதும் கண்கூசி அப்பப்ப! என்று மெய் சிலிர்த்துக் கூறுவது வழக்கம். கிழவர்கள் தண்டுகாலாவூன்றியூன்றித் தள்ளி நடந்துகொண்டு, தாம் நெடுநாள் பழகின மின்னிடை மடவார் வீதியேறச் சென்றவாறே அளவு கடந்த கிழத் தன விகாரங்களைக்கண்டு அந்த மாதர்கள் ‘அப்பப்ப!’ என்று தங்களுக்குள்ளே அதிசயித்து, ‘உலகில் எல்லாரும் கிழத் தனமடைவதுண்டு; இதென்னடோயப்பா! ‘இப்படிப்பட்ட கிழத்தனம் எங்குங் கண்டதில்லை. மிகவும் பொல்லாத கிழத்தனமாயிருக்கின்றதே இது;’ என்று சொல்லிச் சிரிப்பர்கள் ; அவ்வளவோடு நில்லாமல் அண்டைவீட்டுக் காரிகளை யழைத்து ‘உங்கள் எஜமானர் வந்திருக்கிற அழகைப்பாருங்கள் ‘ என்று காட்டியும் சிரிப்பர்கள் ; அப்படிப்பட்ட பரிஹாஸங்களுக்கு ஆளாவ தற்கு முன்னே வதரி வணங்குதல் நன்று.) 7
பப்ப வப்பர் மூத்த வாறு பாழ்ப்பது சீத் திரளை
ஒப்ப ஐக்கள் போத வுந்த உந்தமர் காண்மின் என்று
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் சிரியா முன்னம்
வைப்பும் நங்கள் வாழ்வு மானான் வதரி வணங்குதுமே –1-3-7
சீத் திரளை ஒப்ப, Seeth Thiralai Oppa - சீயின் திரட்சிபோல
ஐக்கள், Aikkal - கோழையானது
போத உந்த, Podha Unda - மிகவும் அதிகரிக்க, (அந்த நிலைமையைக் கண்டு)
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம், Seppu Ner Men Kongai Nallaar Thaam - செப்புப் போன்ற மெல்லிய முலைகளையுடைய மங்கைமார்கள்
பப்ப அப்பர்மூத்த ஆறு பாழ்ப்பது, Pappa Apparumootha Aaru Paazhppadhu - “அப்பப்ப! இந்த சாமியார் கிழத்தன மடைந்த விதம் மிகவும் பொல்லாது” (என்று தங்களில் சொல்லிக்கொண்டும்)
உம் தமர் காண்மின் என்று, Um Thamar Kaanmin Endru - “அடீ!உங்களோடு உறவுள்ள ஐயங்காரைப் பாருங்கள்” என்று(அயற்பெண்களோடே ஏளனமாகச் சொல்லியும்)
சிரியாத முன்னம், Siriyaadha Munnam - சிரிப்பதற்கு முன்னமே-,
நங்கள் வைப்பும் வாழ்வும் ஆனான் வதரி வணங்குதும், Nangal Vaippum Vaalvum Aanaan Vadhari Vanangudhum - நமக்கு நிதி போன்றவனும் நம்மை வாழ்விப்பவனுமான எம்பெருமானது ஸ்ரீபதரியை வணங்குவோம்.
975பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) (முற்ற மூத்துக் கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து சென்று குறடேறும்போதே, சீ சீ, நட, நட” என்று துரத்தியடிப்பர்கள் ; வாசலை விடமாட்டாத சாபல்யத்தாலே ‘அம்மா! நான் உள்ளே வரவில்லை; தெருத்திண்ணையிலேயே கிடந்து போகிறேன்’ என்று விநயமாகச் சொல்லி உட்காரப் பார்த்தவளவில், ஈங்கிரேல்மின்’ என்று வெருட்டுவர்கள்;) 8
ஈசி போமின் ஈங்கு இரேன் மின் இருமி இளைத்தீர்
உள்ளம் கூசி யிட்டீர் என்று பேசும் குவளை யம் கண்ணியர் பால்
நாசமான பாசம் விட்டு நன்னெறி நோக்கல் உறில்
வாச மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே –1-3-8
இருமி இளைத்தீர், Irumi Ilaiththir - “(ஐயங்கார்களே!) இருமலும் இளைப்புமாக ஆனீர்கள்;
உள்ளம் கூசியிட்டீர், Ullam Koosiyitthir - நெஞ்சு கூசப் பெற்றீர்கள்;
போமின், Pomin - அப்பால் ஒழிந்து போங்கள்
ஈ சி, Ee See - சீ சீ ;
ஈங்கு இரேல்மின், Eengu Irelmin - இங்கே இருக்கக்கூடாது;”
என்று பேசும், Endru Pesum - என்றிப்படி அவமரியாதையாகப் பேசுகிற
குவளை அம் கண்ணியர் பால், Kuvazhai Am Kanniyar Paal - கருநெய்தல் போன்ற அழகிய கண்ணையுடைய மாதர்களிடத்து
நாசம் ஆன பாசம் விட்டு, Naasam Aana Paasam Vittu - ஸ்வரூபநாசத்தை விளைக்க வல்ல ஆசாபாசத்தை விட்டுத் துலைத்து
நல் நெறி நோக்கல் உறில், Nal Neru Nookkal Uruil - நல்வழி போகப்பார்க்கும் பக்ஷத்தில்
வாசம் மல்கு தண்துழாயான் வதரி வணங்குதும், Vaasam Malku Thanthuzhaiyan Vadhari Vananguthum - பரிமளம் மிக்குக் குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடைய எம்பெருமானது ஸ்ரீபதரியை வணங்குவோம்.
976பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) (கருமேந்திரியங்களென்றும் ஜ்ஞானேந்திரியங்க ளென்றும் இந்திரியங்கள் இருவகைப்படும். வாய் கை கால் குதம் குறி என்பன கருமேந்திரியங்கள்; நாக்கு மூக்கு கண் காது உடல் என்பன ஞானேந்திரியங்கள். இவை யெல்லாம் சிதிலமாவது கிழத்தனத்தில். கண் தெரியாதபடியும் காது கேளாதபடியும் அடியெடுத்து வைக்க முடியாதபடியும் கிழத்தனம் அதி கரித்து ஒரு மூலையிலே கிடந்து கண்டபடி பிதற்ற நேருங்காலத்தில் வதரியை ஸ்மரிக்கத்தான் யோக்யதை ஏது? அப்போதைக் கிப்போதே வதரிவணங்குதல் நன்று .) 9
புலன்கள் நைய மெய்யில் மூத்துப் போந்திருந்த உள்ளம் எள்கி
கலங்க  வைககள் போத உந்திக் கண்ட பிதற்றா முன்
அலங்கலாய தண் துழாய் கொண்டு ஆயிர நாமம் சொல்லி
வலம் கொள் தொண்டர் பாடி யாடும் வதரி வணங்குதுமே –1-3-9
மெய்யில், Meiyil - சரீரத்தில்
புலன்கள் நெய்ய, Pulangkal Neyya - செவி வாய் கண் முதலிய இந்திரியங்களெல்லாம் சிதிலமாம்படி
மூத்து, Moothu - கிழத்தன மடைந்து
போந்து இருந்து, Pondhu Irundhu - (நால்வரிருக்குமிடத்தில் தலை காட்டக்கூசி ஏகாந்த ஸ்தலத்திலே) போயிருந்து
உள்ளம் எள்கி கலங்க, Ullam Elgi Kalanga - நெஞ்சு விகாரப்பட்டுக் கலங்க
ஐக்கள் போத உந்தி, Aikkal Podha Unthi - கோழைகளை அதிகமாக உமிழ்ந்து கொண்டு
கண்ட, Kanda - நெஞ்சில் தோன்றின வற்றை யெல்லாம்
பிதற்றா முன், Pithatra Mun - பிதற்றுவதற்கு முன்னே,-
வலம் கொள் தொண்டர், Valam Kol Thondar - சிறந்த பக்தர்கள்
அலங்கல் ஆய தண் துழாய் கொண்டு, Alangal Aaya Than Thuzhai Kondu - மாலையாகத் தொடுக்கப்பட்ட குளிர்ந்த திருத்துழாயைக் கையிற் கொண்டு
ஆயிரம் நாமம் சொல்லி, Aayiram Naamam Solli - ஸஹஸ்ரநாமங்களை அநுஸகத்தித்துப்
பாடி ஆடும், Paadi Aadum - பாடுதலும் ஆடதலும் செய்யப்பெற்ற,
வதரி வணங்குதும், Vadhari Vananguthum - ஸ்ரீபதரியை வணங்குவோம்
977பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) (இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டுகிற பாசுரம் இது.) 10
வண்டு தண்  தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை
கொண்டு தொண்டர் பாடி யாடக் கூடிடில் நீள் விசும்பில்
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே –1-3-10
வண்டு, Vandu - வண்டுகளானவை
தண்  தேன் உண்டு வாழும் வதரி, Than Then Undu Vazhume Vadhari - குளிர்ந்த தேனைப் பருகிக் களித்து வாழுமிடமான ஸ்ரீபதரியில் எழுந்தருளியிருக்கிற
நெடு மாலை, Nedu Maalai - ஸர்வேச்ரன் விஷயமாக,
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன், Kandal Veli Mangai Vendan Kalyan - தாழைகளை வேலியாகக் கொண்ட திருமங்கைக்குத் தலைவரான ஆழ்வார்
ஒலி, Oli - அருளிச்செய்த
மாலை கொண்டு, Malai Kondo - இந்தச் சொல் மாலையைக் கொண்டு
தொண்டர், Thondar - பக்திமான்கள்
பாடி ஆட கூடிடில், Paadi Aada Koodidil - பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் அநுபவிக்கப் பெற்றால்
அவர்க்கு, Avarkku - அப்படிப்பட்ட மஹான்களுக்கு
நீள் விசும்பில் அண்டம் அல்லால், Neel Visumbil Andam Allal - பரமகாசத்திலேயுள்ள பரம பதத்தைத் தவிர
மற்று ஓர் ஆட்சி அறியோம், Mattru Oru Aatchi Ariyom - வேறொரு லோகமாளப் பெறுதல் இல்லை.
978பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) (ஸ்ரீதேவி பூதேவிகட்காக அரிய பெரிய காரியஞ்செய்த மஹாநுபாவன் எழுந்தருளியிருக்குமிடம் ஸ்ரீபதரிகாச்ரமம் என்கிறார்.) 1
ஏனம் முனாகி யிரு நிலம் இடந்து அன்று இணை யடி யிமையவர் வணங்க
தான வனாகம் தரணியில் புரளத் தடஞ்சிலை குனித்த வென் தலைவன்
தேனமர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வ நன்னறு மலர் கொணர்ந்து
வானவர் வணங்கும் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-1
முன் அன்று, Mun Anru - முன்னொரு காலத்தில்
இணை அடி, Inai Adi - (தனது) உபய பாதங்களைத்
இமையவர் வணங்க, Imaiyavar Vananga - தேவர்கள் வந்து வணங்குமாறு
ஏனம் ஆகி, Enam Aagi - மஹாவராஹரூபியாகி
இரு நிலம் இடந்து, Iru Nilam Idanthu - விசாலமான பூ மண்டலத்தைக் கோட்டு நுனியாற் குத்தி யெடுத்தவனாயும்,
தானவன் ஆகம், Thanavan Aagam - இராவணணுடைய சரீரமானது
தரணியில் புரள, Tharaniyil Purala - பூமியிலே (செத்துப்) புரளும்படி
தடசிலை குனித்த, Thadasilai Kunitha - பெரிய வில்லை வளைத்தவனாயுமிருக்கிற
என் தலைவன், En Thalaivan - அஸ்மத் ஸ்வாமி
வானவர், Vaanavar - தேவர்கள்,
தேன் அமர் சோலை கற்பகம் பயந்த, Then Amar Solai Karppagam Payantha - தேன் நிறைந்த நந்தனவனத் திலேயுள்ள கல்ப வ்ருக்ஷங்கள் கொடுத்த
தெய்வம் நல் நறு மலர், Deivam Nal Naru Malar - திவ்யமாய் நல்ல மணம் மிக்க பூக்களை
கொணர்ந்து, Konarnthu - கொண்டு வந்து ஸமர்ப்பித்து
வணங்கும், Vanangum - வணங்குமிடமாய்
கங்கையின் கரை மேல், Gangaiyin Karai Mel - கங்கையின் கரையிலுள்ள தான
வதரி ஆச்சிரமத்து, Vadhari Aachiramatthu - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே
உள்ளான், Ullaan - எழுந்தருளியிருப்பவன்.——
979பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) (பெருமாளையும் பிராட்டியையும் பிரிப்பதற்கு மாயமான் வடிவுகொண்டு வந்த மாரீசனை ஒழித்தபடியையும், ஆச்ரிதனான ஸுக்ரீவனுக்கு விரோதியான வாலியை ஒழித்தபடியையும் முன்னடிகளில் அருளிச் செய்கிறார்.) 2
கானிடை யுருவைச் சுடுசரம் துரந்து கண்டு முன் கொடும் தொழில் உரவோன்
ஊனுடை யகலத்தடு கணை குளிப்ப உயிர் கவர்ந்துகந்த வெம் மொருவன்
தேனுடைக் கமலத் தயனொடு தேவர் சென்று சென்று இறைஞ்சிட பெருகு
வானிடை முது நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யா ச்சிராமத்துள்ளானே –1-4-2
கானிடை, Kaanidai - காட்டிலே
உருவை, Uruvai - (மாரீசனாகிய) மாயா மிருகததை
முன் கண்டு, Mun Kandu - கண்ணெதிரில் பார்த்து
சுடு சரம் துரந்து, Sudu Saram Thurandhu - (அதன் மேல்) தீக்ஷ்ணமான பாணத்தைப் பிரயோகித்தவனும்
கொடு தொழில் உரவோன், Kodu Thozhil Uravon - கொடுமையான தொழிலை யுடையனாய் பலசாலியான வாலியினுடைய
ஊன் உடை அகலத்து, Oon Udai Akalathu - மாம்ஸமான மார்விலே
அடு கணை குளிப்ப, Adu Kanai Kulippa - தீக்ஷ்ணமான பாணத்தை அழுத்தி
உயிர் கவர்ந்து, Uyir Kavarndhu - (அவனது பிராணனை அபஹரித்து
உகந்த, Ugantha - மகிழ்ந்தவனுமான
எம் ஒருவன், Em Oruvan - விலக்ஷணனான அஸ்மத்ஸ்வாமி (எவ்விடத்திலுள்ளா னென்றால்)
தேன் உடை கமலத்து அயனொடு, Then Udai Kamalathu Ayanodu - தேனையுடைய(திருநாபிக்) கமலத்தில் பிறந்த பிரமனோடு கூட
தேவர், Thevar - மற்றுமுள்ள தேவர்களும்
சென்று சென்று, Sendru Sendru - பலகால் வந்து
இறைஞ்சிட, Iraichida - வணங்கப் பெற்றதும்
பெருகு வானிடை முது நீர் கங்கையின் கரைமேல், Perugu Vaanidai Muthu Neer Gangaiyin Karameel - பெருகுகின்ற புராதனமாக ஆகாசகங்கைக் கரைமீது உள்ளதுமான
வதரி ஆச்சிராமத்து, Vadhari Aachiramaathu - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே
உள்ளான், Ullaan - எழுந்தருளியிருக்கிறான்.
980பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) (ஒருவரால் அழிக்க வொண்ணாத லங்கா புரியும் அதற்கும் அகழாகி ரக்ஷகமாயிருந்த தெற்கு ஸமுத்ரமும், இராவணனும், அவனுக்குத் துணையாயிருந்த ராக்ஷஸஜாதியடங்கலும் நாசமடையும்படி தனது கொடுமையான பராக்கிரமத்தைச் செலுத்திக் காரியஞ்செய்த ராஜாதி ராஜன் எழுந்தருளியிருக்குமிடம் வதரியாச்சிரமம்.) 3
இலங்கையும் கடலும் அடலருந்திப் பின் இரு நிதிக் கிறைவனும் அரக்கர்
குலங்களும் கெட முன் கொடும் தொழில் புரிந்த கொற்றவன் கொழும்  சுடர் சுழன்ற
விலங்கலில் உரிஞ்சி மேல் நின்ற விசும்பில் வெண் துகில் கொடி யென விரிந்து
வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-3
முன், Mun - ஸ்ரீராமாவதாரத்தில்
இலங்கையும், Ilankaiyum - லங்காபுரியென்ன
கடலும், Kadalum - (அதற்கு அகழான) தெற்கு ஸமுத்ரமென்ன
அடல் அருதுப்பின் இரு நிதிக்கு இறைவனும், Adal Aruthuppin Iru Nidhikku Iraivanum - ஒருவராலும் வெல்ல முடியாத பலத்தையுடையனாய்ப் பெரிய நிதிகளுக்கு ஸ்வாமியான ராவணனென்ன
அரக்கர் குலங்களும் கெட, Arakkar Kulangalum Keda - ராக்ஷஸஜாதியென்ன ஆகிய இவையெல்லாம் ஒழியும்படியாக
கொடுதொழில் புரிந்த கொற்றவன், Koduthozhil Purindha Kotravan - கடுமையான காரியங்களைச் செய்தருளின மஹாப்ரபு (எவ்விடத்திலுள்ளா னென்றால்)
கொழு சுடர் சுழன்ற விலங்கவில் உரிஞ்சி, Kozhu Sudar Suzhandra Vilangavil Urinji - ஸூர்யன் சுழன்று வரப்பெற்ற (மேரு) மலை வரைக்கும் சென்று முட்டி
மேல் நின்ற விசும்பில், Mel Nindra Visumbil - மேலேயிருக்கிற ஆகாசத்திலே
வெண் கொடி துகில் என விரிந்து, Ven Kodi Thugil Ena Virinthu - வெளுத்த த்வஜபடமென்ன லாம்படி பரந்து
வலந்தரும், Valantharum - (வேகத்தாலே) மிடுக்கையுடையதும்
மணி நீர், Mani Neer - அழகிய தீர்த்தத்தை யுடையதுமான
கங்கையின், Gangaiyin - கங்கைநதியினுடைய
கரை மேல், Karai Mel - கரையின்மேலுள்ள
வதரியாச்சிராமத்து, Vathariyachiramatthu - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே
உள்ளான், Ullaan - எழுந்தருளியிருப்பவன்.
981பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) (நெஞ்சே! இப்போது உனக்கு உறுதியாக ‘ஒரு நல்வார்த்தை சொல்லுகிறேன் கேள். அதுயாதெனில்; தொண்டர்களுடைய ‘விரோதியைப் போக்கிப் பரமபதத்தை அளிக்கின்ற பேரருளாளன் ஸ்ரீ பதரிகாச்ரமத்தில் எழுந்தருளியிராநின்றான்; அங்கே சென்று அவனை நீ வணங்கி உஜ்ஜீவிக்கக்கடவை ; இதுவே உனக்கு நான் உரைக்கும் உறுதிச்சொல்.) 4
துணி வினி யுனக்குச் சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு
பிணி யொழித்தமரர் பெரு விசும்பு அருளும் பேரருளாளன் எம்பெருமான்
அணி மலர்க் குழலாரரம்பையர் துகிலும் ஆரமும் வாரி வந்து அணி நீர்
மணி கொழித்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே –1-4-4
மனமே, Maname - நெஞ்சமே!,
இனி உனக்கு துணிவு சொல்லுவன், Ini Unakku Thunivu Solluvan - இதுமுதலாக உனக்கு இருக்க வேண்டிய உறுதியைச் சொல்லுகிறேன் (கேள்);
தொண்டர்கள் தமக்கு, Thondargal Thamakku - ஆச்ரிதர்களுக்கு
பிணிஒழித்து, Pinizhil - வியாதிகளைப்போக்கி
அமரர் பெரு விசும்பு அருளும், Amarar Peru Visumbu Arulum - நித்ய ஸூரிகளுடையதான பரமபதத்தை (அவர்கட்கு) அளித்தருளாநின்ற
பேர் அருள் ஆளன், Per Arul Alan - பரமதயாளுவான
எம்பெருமான், Emperuman - ஸர்வேச்வரனை
தொழுது எழு, Thozhudhu Ezhuthu - வணங்கி உஜ்ஜீவிக்கக் கடவை;
அணி நீர், Ani Neer - (கங்கையிலுள்ள) அழகிய ஜலமானது
மலர் அணி குழலார் அரம்பையர், Malar Ani Kuzhalar Arampaiyar - புஷ்பங்களை யணிந்த கூந்தலையுடைய அப்ஸரஸ் ஸ்த்ரீகளினுடைய
துகிலும், Thugilum - சேலைகளையும்
ஆரமும், Aaramum - ஹாரங்களையும்
வாரி வந்து, Vaari Vandu - திரட்டிக்கொண்டுவந்தும்
மணி கொழித்து, Mani Kozhithu - ரத்னங்களைத் தள்ளிக்கொண்டு வந்தும்
இழிந்த, Izhintha - ப்ரவஹிக்கப்பெற்ற
கங்கையின், Gangaiyin - கங்காநதியினுடைய
கரை மேல், Karai Mel - கரைமேலுள்ள
வதரி ஆச்சிரமத்து, Vadhari Aachiramatthu - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே
உள்ளான், Ullaan - எழுந்தருளியிருக்கிறான்.
982பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) (கீழ்ப்பாட்டில் “ அணிமலர்க்குழலாராம் பையர் துகிலும் ஆரமும் வாரிவந்து ” என்ற சொற்போக்கில் கண்ணபிரானுடைய திருவிளையாடல் ஆழ்வார்க்கு நினைவுக்கு வாவே, மற்றொரு க்ருஷ்ண சேஷ் டித்த்தை ஸ்மரித்துப்பேசுகிறார் இதில்) 5
பேய் இடைக்கிருந்து வந்த மற்றவள் பெரு முலை சுவைத்திட பெற்ற
தாய் இடைக்கிருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த வென் தலைவன்
சேய் முகட்டுச்சி யண்டமும் சுமந்த செம் பொன் செய் விலங்கலில் இலங்கு
வாய் முகட்டிழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-5
வந்த, Vandha - (யசோதையின் வேஷங்கொண்டு)வந்தவளான
பேய், Pei - பூதனையினுடைய
இடைக்கு இருந்து, Idaikku Irundhu - இடுப்பிலேயிருந்துகொண்டு
அவள்தன், Avalthan - அப்பேய்மகளுடைய
பெரு முலை, Peru Mulai - பெரிய முலையை
சுவைத்திட, Suvaiththida - ருசிபார்த்து உண்ண
பெற்ற தாய், Petra Thaai - (அதைக்கண்ட) யசோதையானவள்
இடைக்கு இருத்தல்அஞ்சுவன் என்று தளர்ந்திட, Idaikku Iruththal Anjuvan Endru Thalarndhida - (‘நான் இனி இவனை) இடுப்பிலே எடுத்துக் கொள்ள அஞ்சுகிறேன்’ என்று சொல்லிக் கூசும்படியாக
வளர்ந்த, Valarntha - வளர்ந்தவனான
எம் தலைவன், Em Thalaivan - அஸ்மத் ஸ்வாமி
சேய் முகடு உச்சி, Seyy Mugadu Uchi - உயர்ந்த கொடுமுடியின் உச்சியிலே
அண்டம் சுமந்த, Andam Sumandha - அண்டத்தைச் சுமக்கிற
செம் பொன் செய்விலங்கலில், Sem Pon Seyvilangalil - மேரு பர்வதத்திலே
இலங்கு, Ilangu - விளங்குகின்ற
வாய்முகடு, Vaay Mugadu - விசாலமான சிகரத்தில் நின்றும்
முன் இழிந்த, Mun Izhintha - ப்ரவஹிக்கின்ற
கங்கையின், Gangaiyin - கங்கைநதியினுடைய
கரை மேல், Karai Mel - கரைமீதுள்ள
வதரியாச்சிராமத்து, Vathariyachiramatthu - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே
உள்ளான், Ullaan - எழுந்தருளியிருப்பவன்.
983பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) (கண்ணபிரான் தொட்டிற்பருவத்திற் செய்த சேஷ்டித் மொன்றைக் கீழ்ப்பாட்டி லருளிச்செய்தார்; யௌவனப்பருவத்திற் செய்ததோர் செயலைச் சொல்லுகிறாரிதில்.) 6
தேரணங்கல்குல் செழும் கயல் கண்ணி திறத்து ஒரு மறத் தொழில் புரிந்து
பாரணங்கிமிலேறேழு முன்னடர்த்த பணி முகில் வண்ணன் எம்பெருமான்
காரணம் தன்னால் கடும் புனல் கயத்த கரு வரை பிள வெழக் குத்தி
வாரணம் கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-6
தேர் அணங்கு அல்குல், Ther Anangu Alkul - தேர்போன்று அழகிய நிதம்பத்தை யுடையளும்
செழுகயல் கண்ணி திறத்து, Sezhugayal Kanni Thirathu - அழகிய கயல்போன்ற கண்களையுடையளுமான நப்பின்னைக்காக
ஒரு மறத்தொழில் புரிந்து, Oru Marathozhil Purinthu - கோபம் மிக்க செயலைச்செய்து
பார் அணங்குஇமில், Paar Anangumil - பூமியிலுள்ளாரெல்லாரும் நடுங்கும்படியான முசுப்பையுடைய
ஏறு ஏழும் முன் அடர்த்த, Eru Ezhum Mun Adarttha - ஏழு எருதுகளையும் கண்முன்னே வலியடக்கின
பனி முகில் வண்ணன், Pani Mukil Vannan - குளிர்ந்த மேகம்போன்ற வடிவையுடையனான
எம்பெருமான், Emperuman - எம்பெருமான் (எங்கே எழுந்தருளியிருக்கிறானென்றால்)
காரணம் தன்னால், Kaaranam Thannal - பகீரதப்ரயத்நமாகிற காரணத்தினால்
கடு புனல் கயத்த, Kadu Punal Kayattha - வேகமாகப் பெருகுகின்ற ஜலம் நிறைந்த பள்ளங்களையுடையதும்
கரு வரை பிளவுஎழ குத்தி, Karuvarai Pilavuezha Kuththi - பெரியதொருமலைபிளந்துபோம்படி (அம்மலையை) உடைத்துக்கொண்டு
வாரணம் கொணர்ந்த, Vaaranam Konarntha - (அங்குள்ள) யானைகளைத் தள்ளிக் கொண்டுவந்து ப்ரவஹித்ததுமான
கங்கையின், Gangaiyin - கங்காநதியினுடைய
கரைமேல், Karaimeel - கரையின்மீதுள்ள
வதரியாச்சிராமத்து உள்ளான், Vathariyachiramaithu Ullaan - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே உள்ளான்.
984பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) (திருமால் தேவர்களின் பிரார்த்தனைக் கிணங்கிக் கடல்கடைந் தருளின காலத்து, கடையப்பட்ட அக்கடலினின்று ஐராவதயானை, உச்சைச்ச்ரவஸ் என்னுங் குதிரை, விஷம், சந்திரன், கல்ப வ்ருக்ஷம், அமுதம் முதலியன உண்டாயினவென்று புராணங்கள் கூறும். அவற்றில் தேவேந்திரனுக்கு ஐராவதயானையையும் அமிருதத்தையும் தேவர்கட் குத் தலைவனாயிருக்கும் ஸாம்ராஜ்யத்தையும் கொடுத்தருளி, அந்தரங்க அடியவர்களான நமக்குத் தன்னையே கொடுத்தருளி உபகரித்த எம்பெருமான் வதரி யாச்சிரமத்துள்ளான்;) 7
வெந்திறல் களிறும் வேலை வாய் அமுதும் விண்ணோடு விண்ணவர்க்கு அரசும்
இந்திரர்க்கு அருளி எமக்கும் ஈந்து அருளும் எந்தை எம்மடிகள் எம்பெருமான்
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிர முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே –1-4-7
வேலை வாய் வெம்திறல் களிறும், Velaivai Vemthiral Kalirum - கடலில் நின்றுமுண்டான மிக்க மிடுக்கையுடைய ஐராவதமென்கிற யானையையும்
அமுதும், Amudhum - அம்ருதத்தையும்
விண்ணொடு, Vinnodu - ஸ்வர்க்கலோகத்தையும்
விண்ணவர்க்கு அரசும், Vinnavarkku Arasum - தேவர்களுக்கெல்லாம் அரசனாயிருக்குந் தன்மையையும்
இந்திரற்கு அருளி, Indhirarku Aruli - இந்திரனுக்குக் கொடுத்தருளி
எமக்கும் ஈந்தருளும், Emakkum Eendharulum - நமக்கும் வேண்டிய அருளைச் செய்கிற
எந்தை எம் அடிகள் எம்பெருமான், Endhai Em Adigal Emperumaan - ஸர்வேச்வரன் (எங்கே எழுந்தருளியிருக்கிறானென்னில்)
அந்தரத்து  அமரர், Andharathu Amarar - ஸ்வர்க்கத்திலுள்ள தேவர்களெல்லோரும்
அடி இணை வணங்க ஸேவித்துப், Adi Inai Vananga Seviththu - எம்பெருமானுடைய திருவடிகளை ஸேவித்துப் பிரார்த்திக்க
ஆயிரம் முகத்தினால் அருளி, Aayiram Mukathinaal Aruli - (அவர்களது வேண்டுகோளின்படி) பலமுகமாகப் பிரவஹிக்கும்படி (கங்கையை நோக்கி) நியமித்தருள
மந்தரத்து இழிந்த, Mandarathu Izhintha - (அவ்வண்ணமாகவே) மந்தர மலையினின்றும் பெருகின
கங்கையின் கரை மேல், Gangaiyin Karai Mel - கங்கையின் கரைமீதுள்ள
வதரியாச்சிராமத்து உள்ளான், Vathariyachiramaithu Ullaan - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே உள்ளவன்.’
985பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) (மாரீசனாகிற மாயமான் மேலே அம்பு எய்து அதனை முடித்தவனும், பரமபக்தனான ப்ரஹ்லாதனுக்குக் கொடுமையியற்றி மஹாத்ரோஹியான ஹிரண்யகசிபுவின் மார்பைப் பிளந்தொழித்தவனும், பிரமனால் சிவனுக்கு நேர்ந்த ப்ரஹ்மஹத்திசாபத்தைத் தொலைத்தருளினவனுமான எம்பெருமான் வதரியாச்சிரமத்துள்ளான்.) 8
மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த மன்னவன் பொன்னிறத்து உரவோன்
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனைத்
தான் முனிந்திட்ட வெந்திறல் சாபம் தவிர்த்தவன் தவம் புரிந்து உயர்ந்த
மா முனி கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே –1-4-8
ஒருகால், Orukal - (பஞ்சவடியில் எழுந்தருளியிருந்த) ஒரு ஸமயத்தில்
மான் முனிந்து, Maan Muninthu - மாரிசமாயமானின் மேற் சீறி
வரி சிலை வளைத்த மன்னவன், Vari Silai Valaitha Mannavan - அழகிய வில்லை (அந்த மான் மேலே) வளைத்தெறிந்த செருக்கனாயும்
பொன் நிறத்து உரவோன், Pon Nirathu Uravon - பொன்போன்ற நிறத்தையுடைய ஹிரண்யனென்னுமொரு பலிஷ்டனுடைய
ஊன் முனிந்து, Oon Muninthu - உடலை ஒழித்து விடுவதாகச் சீற்றங்கொண்டு
அவனது உடல் இரு பிளவு ஆ, Avanathu Udal Iru Pilavu Aa - அவ்வசுரனுடைய சரீரம் இரண்டு பிளவாம்படி
உகிர் நுதி மடுத்து, Ukir Nuthi Maduthu - நகங்களின் நுனியை (அவ்வுடலில்) அழுத்தினவனாயும்,
அயன் தான் அரனை முனிந்து, Ayan Thaan Aranai Muninthu - நான்முகக் கடவுள் சிவன் மேல் சீறி
இட்ட, Itta - (அவனுக்குக்) கொடுத்த
வெம் திறல் சாபம் தவிர்த்தவன், Vem Thiral Saapam Thavirnthavan - மிகவும் க்ரூரமான சாபத்தைப் போக்கினவனாயுமுள்ள எம் பெருமான் (எங்குள்ளானெனில்;)
தவம் புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த, Thavam Purinthu Uyarndha Maa Muni Konarntha - தபஸ்விகளில் தலைவரான பகீரதர் கொண்டுவந்த
கங்கையின் கரைமேல், Gangaiyin Karameel - கங்கையின் கரைமீதுள்ள
வதரியாச்சிராமத்து உள்ளான், Vathariyachiramaithu Ullaan - ஸ்ரீபதரிகாச்ரமத்திலுளன்.
986பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) (ஸகல பதார்த்தங்களையும் பிரளயங் கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்து நோக்கினவனும் உபயவிபூதி நாதனு மான எம்பெருமான் வதரியாச்சிரமத்துள்ளான்.) 9
கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க் குரை கடல் உலகுடன் அனைத்தும்
உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த உம்பரும் ஊழியும் ஆனான்
அண்டமூடறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கவனி யாளலமர பெருகு
மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-9
கொண்டல், Kondal - மேகங்களையும்
மாருதங்கள், Marudhangal - வாயுஸமூஹத்தையும்
குலம் வரை, Kulam Varai - குலபர்வதங்களையும்
தொகு நீர் குரை கடல், Thogu Neer Kurai Kadal - நீர் நிறைந்து கோஷம் செய்கிற கடல்களையும்
உலகு அனைத்தும், Ulaku Anaithum - மற்றுமெல்லா வுலகங்களையும்
உடன் உண்ட மா வயிற்றோன், Udan Unda Maa Vayittron - ஏககாலத்தில் அமுதுசெய்த பெரிய திருவயிறுடையனும்,
ஒண் சுடர் ஏய்ந்த உம்பரும் ஊழியும் ஆனான், On Sudar Ayndha Umbarum Oozhiyum Aanaan - சந்திரஸூர்யர்கள் பொருந்தியிருக்கிற மேலுலகத்திற்கும் காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகனுமான எம்பெருமான் (எங்குளன் எனில்)
அன்று, Anru - பகீரதன் கங்கையை அவதரிப்பித்த அப்போது
அண்டம் ஊடு அறுத்து, Andam Oodu Aruththu - ப்ரஹ்மலோகத்தை இடைவெளி யாக்கிக்கொண்டு
அந்தரத்து இழிந்து, Antharathu Izhindhu - ஆகாசத்தில் வந்திழிந்து
அங்கு, Angu - அங்கு நின்றும்
அவனியாள் அலமர பெருகும், Avaniyal Alamara Perugum - பூமி நடுங்கும்படியாக (பூமியிலே) ப்ரவஹித்ததும்
மண்டு மா மணி நீர், Mandhu Maa Mani Neer - நெருங்கி நிறைந்து தெளிந்த ஜலத்தை யுடையதுமான
கங்கையின் கரை மேல், Gangaiyin Karai Mel - கங்கையின் கரைமேலுள்ள
வதரியாச்சிராமத்து உள்ளான், Vathariyachiramaithu Ullaan - ஸ்ரீபதரிகாச்ரமத்திலுள்ளான்.
987பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) (இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டும் பாசுரம் இது.) 10
வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானை
கரும் கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் கலியன் வாயொலி செய்த பனுவல்
வரம் செய்த வைந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகுடன் மருவி
இரும் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் இமையவராகுவர் தாமே –1-4-10
வரும் திரை மணி நீர் கங்கையின் கரை மேல், Varum Thirai Mani Neer Gangaiyin Karai Mel - (பெரிய வேகத்தோடு) வருகிற அலைகளை யுடைத்தாய் தெளிந்த ஜலத்தை யுடைத்தான
கங்கையின் கரை மேல், Gangaiyin Karai Mel - கங்கையின் கரை மேலே
வதரியாச்சிராமத்து உள்ளானை, Vathariyachiramaithu Ullanai - ஸ்ரீபதரிகாச்ரமத்தில் எழுந்தருளியிருக்கிற
கரு முந்நீர் கடல் வண்ணனை, Karum Munneer Kadal Vannana - கறுத்த மூன்று வகைப்பட்ட நீரையுடைய கடல் போன்ற நிறத்தனான ஸ்ரீமந் நாராயனனை.
எண்ணி, Enni - அநுஸந்தித்து
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
வாய் ஒலி செய்த, Vaai Oli Seitha - திருவாய்மலர்ந்தருளிய
பனுவல், Panoval - பாசுரமாய்
வரம் செய்த, Varam Seitha - சிறந்ததான
ஐந்தும் ஐந்தும், Aindhum Aindhum - இப்பத்துப்பாசுரங்களையும்
வல்லார்கள் தாம், Vallargal Thaam - ஓதவல்லவர்கள்
வெண் குடை கீழ், Ven Kudai Keel - வெண் கொற்றக் குடையின் கீழ் வாழ்ந்து கொண்டு
இரு கடல் உலகம் ஆண்டு, Iru Kadal Ulagam Aandu - பெரிய கடல்சூழ்ந்த இப்பூமியை ஆண்டபின்
உடன், Udan - அடுத்தபடியாக
வானவர் உலகு மருவி, Vaanavar Ulagu Maruvi - ப்ரஹ்மலோக நிர்வாஹகராக இருந்து
இமையவர் ஆகுவர், Imaiyavar Aaguvar - (அதன் பிறகு) நித்யசூரியளாகவும் ஆவர்கள்.
988பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) (கலையுங்கரியும்.) நெஞ்சே! நீ ஸ்ரீஸாளக்ராமமென்னும் திவ்ய தேசத்தை அடைந்திடு. 1
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் –1-5-1
கலையும் கரியும் பரிமாவும், Kalaiyum Kariyum Parimavum - மான்களும் யானைகளும் குதிரைகளுமாகிய மிருகங்கள்
திரியும் கானம் கடந்துபோய், Thiriyum Kaanam Kadandupoy - திரியுமிடமான காட்டைத் தாண்டிச்சென்று
சிலையும் கணையும் துணை ஆக, Silaiyum Kanaiyum Thunai Aaga - வில்லும் அம்பும் துணையாகக்கொண்டு
வென்றி செருகளத்து சென்றான், Vendri Serugalathu Senraan - (தனக்கு) வெற்றியை விளைக்கவல்ல போர்க்களத்திலே எழுந்தருளினவனும்,
அலை நீர், Alai Neer - அலைக்கின்ற நீரையுடைய கடலிலே
மலை கொண்டு, Malai Kondu - மலைகளாலே
அணை கட்டி, Anai Katti - ஸேது கட்டி
மதிள் நீர் இலங்கை, Mathil Neer Ilangai - மதிலையும் ஸமுத்ரத்தையும் காப்பாக உடைத்தான இலங்கையிலுள்ள
வாள் அரக்கர் தலைவன், Vaal Arakkar Thalaivan - வாளை ஆயதமாகக் கொண்ட இராவணனுடைய
பத்து தலை, Paththu Thalai - பத்துத்தலைகளையும்
அறுத்து உகந்தான், Aruththu Ugandhaan - அறுத்துத்தள்ளி (ஆச்ரித விரோதி தொலைந்தானென்று) திருவுள்ள முகந்தவனுமான எம்பெருமானுடைய திவ்ய தேசமாகிய
சாளக்கிராமம், Saalakkiraamam - ஸ்ரீஸாளக்ராமத்தை
நெஞ்சே அடை, Nenjee Adai - மனமே!, சென்று சேர்.
989பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) (நெஞ்சே! சாளக்கிராமத்தைச் சென்று சேர்; அத்திவ்யதேசம் யாருடையது? —) 2
கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மாந்தேரும் காலாளும்
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடிவாய்ச் சரம் துரந்தான்
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும்
தடம் சூழ்ந்து எங்கும் அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-2
கடம் சூழ் கரியும், Kadham Soozh Kariyum - மதஜலத்தையுடைய யானைகளும்
பரிமாவும், Parimavum - குதிரைகளும்
ஒலி மா தேரும், Oli Maa Therum - ஒலியையுடைய மஹாரதங்களும்
காலாளும், Kaalalum - காலாட்களும்
உடன் சூழ்ந்து, Udan Soozhndhu - ஒன்றாகத் திரண்டு
எழுந்த, Ezhundha - கிளர்ந்து தோற்றின
கடி இலங்கை, Kadi Ilangai - அரணையுடைத்தான லங்கை
பொடி ஆ, Podi Aa - பொடிபடும்படியாக,
வடி வாய், Vadi Vaai - கூர்மையான வாயையுடைய
சரம், Charam - அம்புகளை
துரந்தான், Durandhaan - பிரயோகித்தவனான இராமபிரான் (எழுந்தருளியிருக்குமிடமான)
இரு விசும்பில் இமையோர், Iru Visumbil Imaiyoor - விசாலமான ஸ்வர்க்கத்திலுள்ள தேவர்கள்
இடம் எங்கும் சூழ்ந்துவணங்க, Idam Engum Soozhnthuvanang - பூமியெங்கும் வந்துபரவி ஆச்ரயிக்கத்தக்கதாய்
மணம் கமழும் தடம் சூழ்ந்து, Manam Kamazhum Thadam Soozhndhu - புஷ்பவாஸனைகள் வீசுகின்ற தடாகங்களாலே சூழப்பட்டு
எங்கும் அழகுஆய, Engum Azhagu Aa - எல்லாப்பக்கங்களிலும் அழகையுடைத்தாயிருக்கிற
990பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) (பண்டைநான் மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும், பிண்டமாய்விரிந்த பிறங்கொளியனலும் பெருகிய புனலொடு நிலனும், கொண்டல் மாருதமும் குரைகடலேழும் ஏழுமாமலைகளும் விசும்பும், அண்டமுந்தானாய் நின்ற வெம்பெருமான் -(பெரிய திருமொழி 5-7-1) என்னுமா போலே ஜகத்ஸ்வரூபியாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறார் ஒன்றரையடிக ளால்.) 3
உலவு திரையும் குல வரையும் ஊழி முதலா வெண் திக்கும்
நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விரலாழி
வலவன் வானோர் தம் பெருமான் மருவா வரக்கர்க்கு எஞ்ஞான்றும்
சலவன் சலம் சூழ்ந்து அழகாய சாள்க்கிராமம் அடை நெஞ்சே –1-5-3
உலவு திரையும், Ulavuthiraiyum - உலாவுகின்ற அலைகளையுடைய கடலும்
குலம் வரையும், Kulam Varaiyum - குலபர்வதங்களும்
ஊழி முதலா எண்திக்கும், Oozhi Muthalaa Enthikkum - காலம் முதலாகவுள்ள ஸகலபதார் த்தங்களும் எட்டுத்திசைகளும்
நிலவும் சுடரும் இருளும் ஆய் நின்றான், Nilavum Sudarum Irulum Aay Nindraan - சந்திரனும் ஸூர்யனும் இருட்டும் ஆகிய இப்பொருள்களுக்கெல்லாம் அந்தர்யாமியாயிருப்பவனும்
வென்றி விறல், Vendri Viral - வெற்றியையும் மிடுக்கையுமுடைய
ஆழி வலவன், Aazhi Valavan - திருவாழியை வலத் திருக்கையிலே யுடையவனும்
வானோர் தம் பெருமான், Vaanoor Tham Perumaan - தேவாதிதேவனும்
மருவா அரக்கர்க்கு, Maruvaa Arakkarkku - (தன்னை) ஆச்ரயியாத ராக்ஷஸர்கள் விஷயத்தில்
எஞ்ஞான்றும் சலவன், Enjnjaanrum Salavan - எப்போதும் நன்மை செய்யாதவனுமாகிய எம்பெருமான் (எழுந்தருளியிருக்குமிடமாய்)
சலம் சூழ்ந்து அழகு ஆய, Salam Soozhndhu Azhagu Aay - நீர் நிலங்களால் சூழப்பட்டு அழகு பொருந்தியதான
991பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) (‘ஊரகம்’ என்கிற சொல் ஊர் என்று விகாரப்பட்டதாகக்கொண்டு ஊரகமென்கிற திவ்ய தேசத்தைத் தனக்கு இருப்பிடமாகவுடையவன் என்று பொருளுரைப்பது ஒருவழி.) 4
ஊரான் குடந்தை யுத்தமன் ஒரு கால் இரு கால் சிலை வளைய
தேரா வரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வரு புனல் சூழ்
பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டறைகின்ற
தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-4
ஊரான், Ooraan - திருவூரகமென்னும் திவ்யதேசத்தை இருப்பிடமாகவுடையவனும்
குடைந்தை உத்தமன், Kudaindhai Uththaman - திருக்குடைந்தையிலே எழுந்தருளியிருக்கிற புருஷோத்தமனும்,
ஒருகால், Orukaal - முன்னொரு காலத்தில்
சிலை இருகால் வளையதேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான், Silai Irukaal Valaiyathera Arakkar Ther Vellam Setraan - வில்லினுடைய இரண்டு நுனிகளையும் வளைத்து அவிவேகிகளான ராக்ஷஸர்களுடைய சேனைத் தொகையைச் சிதைத்தவனும்
வற்றா வருபுனல் சூழ் பேரான், Vatraa Varupunal Soozh Peraan - ஒருநாளும் வற்றாமல் மேன்மேலும் பெருகி வருகின்ற காவிரிநீர் சூழ்ந்த திருப்பேர்நகரில் கண்வளர்ந்தருள்பவனும்
பேர்ஆயிரம் உடையான், Peraayiram Udaiyaan - ஸஹஸ்ரநாமங்களை யுடையவனும்
பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான், Pirangu Sirai Vandu Araikindra Thaaran - நெருங்கி யிருக்கிற சிறகுகளை யுடைய வண்டுகள் ஆரவாரிக்கின்ற (திருத்துழாய்) மாலையையுடை யவனுமான எம்பெருமான்
தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம், Tharaa Vayal Soozhntha Saalakkiraamam - தாரா என்னும் நீர்ப்பறவைகள் நிறைந்திருக்கிற வயல்களாலே சூழப்பட்ட ஸ்ரீஸாளக்ராமத்தை
992பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) (அடுத்தார்த்தெழுந்தாளவள். பிலவாய் விட்டலற அவள் மூக்கை அயில் வாளால் விடுத்தான் என்று! சூர்ப்பணகையின் மூக்கறுத்தமை சொல்லுகிறது.) 5
அடுத்தார்த்து எழுந்தாள் பில வாய் விட்டலற அவள் மூக்கயில் வாளால்
விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான் நண்ணார் முன்
கடுத்தார்த்து எழுந்த பெரு மழையைக் கல் ஓன்று ஏந்தி இன நிரைக் காத்
தடுத்தான் தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-5
அடுத்து ஆர்த்து எழுந்தாள், Aduthu Aarthu Ezhundhaal - மேல் விழுந்து வந்துகிட்டி ஆரவாரஞ்செய்து கிளர்ந்தவளான சூர்ப்பணகை.
பிலம் வாய் விட்டு அலற, Pilaam Vaai Vittu Alara - பிலம்போன்ற வாயைத்திறந்து கொண்டு கதறும்படியாக
அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான், Aval Mookku Ayil Vaalal Viduththaan - அவளுடைய மூக்கை கூர்மையான வாளாலே (இளையவனைக் கொண்டு) அறுத்தவனும்
விளங்கு சுடர் ஆழி, Vilangu Sudar Aazhi - பிரகாசிக்கின்ற ஒளியையுடைய திருவாழியையுடையவனும்
விண்னோர் பெருமான், Vinnor Perumaan - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும்
கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையை நண்ணார்முன் இனம் நிரைக்காகல் ஒன்று ஏந்திதடுத்தான், Kaduthu Aarthu Ezhundha Peru Mazhaiyai Nannaarmun Inam Niraikkaakal Ondru Aendhidaththaan - வேகத்துடன் ஆரவாரஞ்செய்துகொண்டு கிளர்ந்து வந்த  கனத்த மழையை எதிரிகளான இந்திராதிகளின் கண்ணெதிரில் பசுக்கூட்டங்களை ரக்ஷிப்பதற்காக, (கோவர்த்தனமென்கிற) ஒரு மலையை ஏந்தித்தடுத்தவனுமான எம்பெருமான்(எழுந்தருளியிருக்கிற)
தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம், Thadam Soozhndhu Azhagaaya Saalakkiraamam - தடாகங்களால் சூழப்பெற்று அழகாயிருக்கிற ஸாளக்ராமத்தை
993பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) (கண்ணபிரானுக்குத் தயிர் பால் வெண்ணெய் முதலியன எப்படி போக்யமாயிருந்தனவோ, அப்படியே, தன்னைக் கொல்ல வந்த பூதனையின் உயிரும் போக்யமாயிருந்ததென்பது தோன்ற அருளிச் செய்கிற அழகு காண்மின்.) 6
தாயாய் வந்த பேய் உயிரும் தயிரும் விழுதும் உடன் உண்ட
வாயான் தூய வரி யுருவில் குறளாய்ச் சென்று மா வலியை
ஏயான் இரப்ப மூவடி மண்ணின்றேதா வென்று உலகு ஏழும்
தாயான் காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-6
தாய் ஆய் வந்த பேய் உயிரும், Thaai Aay Vandha Pei Uyirum - தாய்வடிவு கொண்டு வந்த பூதனையின் உயிரையும்
தயிரும் விழுதும், Thayirum Vizhudhum - தயிரையும் வெண்ணெயையும்
உடன் உண்ட வாயான், Udan Unda Vaayaan - ஒன்றுசேர்த்து அமுதுசெய்தவனும்,
ஏயான், Eayaan - (யாசிப்பதற்குத்) தகாதவனானதான்
தூய வரி உருவின் குறள் ஆய்மாவலியை சென்று, Thuya Vari Uruvin Kural Aaymaavaliyai Sendru - பரிசுத்தமும் ஸுந்தரமுமான ரூபத்தையுடையவாமநனாகி மாவலியிடம் சென்று
இன்றே மூ அடி மண் தா என்று இரப்ப, Indrae Moo Adi Mann Thaa Endru Irappa - இப்போதே (எனக்கு) மூன்றடி நிலம் கொடுஎன்று யாசிக்க,
உலகு ஏழும் தாயான், Ulaku Ezhum Thaayaan - எல்லாவுலகங்களையும் தாவியளந்து கொண்டவனும்
காயா மலர் வண்ணன் சாளக்கிராமம், Kaaya Malar Vannan Chaalakkiraamam - காயாம்பூப்போன்ற நிறமுடையனுமான எம்பெருமான் எழுந்தரு ளியிருக்கிற ஸாளக்கிராமத்தை
994பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) (ஏனோரஞ்ச வெஞ்சமத்துள்.) கீழ்ப்பாட்டில் ”உலகேழும் தாயான் என்று ஸர்வலோக வ்யாபகத்வம் சொன்னவுடனே, முன்பு ப்ரஹ்லாதன் எம்பெருமான் ஸர்வ வ்யாபகன் என்று சொன்னதும் இரணியன் அதை மறுத்துச் சொன்னதும் முதலிய கதைகள் நினைவுக்கு வந்து ஹிரண்ய வத வ்ருத்தாந்தத்தை அருளிச் செய்கிறாரிதில். 7
ஏனோர் அஞ்ச வெஞ்சமத்துள் அரியாய்ப் பாரிய விரணியனை
ஊனார கலம் பிளவெடுத்த ஒருவன் தானே யிரு சுடராய்
வானாய்த் தீயாய் மாருதமாய் மலையாய் அலை நீர் உலகனைத்தும்
தானாய் தானுமானான் தன் சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-7
ஏனோர் அஞ்ச, Eynoor Anja - சத்துருக்களான அசுரர்கள் பயப்படும்படியாக
அரி ஆய், Ari Aay - நரசிங்கமூர்த்தியாகி
பரிய இரணியனை, Pariya Iraniyanai - தடித்த சரீரத்தை யுடையனான ஹிரண்யனை
வெம் சமத்துள், Vem Samaththul - கடுமையான போர்க்களத்திலே
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்தஒருவன், Oon Aar Akalam Pilavu Eduththoruvan - மாம்ஸம் நிறைந்த மார்பு கிழியும்படி செய்த வொருவனும்,
தானே, Thaaney - இப்படி செய்தருளினவன் தானே
இரு சுடர்ஆய், Iru Sudar Aay - சந்த்ர ஸூர்யர்களாயும்
வான் ஆய், Vaan Aay - ஆகாசமாயும்
தீ ஆய், Thee Aay - அக்நியாயும்
மாருதம் ஆய், Maarudham Aay - காற்றாயும்
மலை ஆய், Malai Aay - மலைகளாயும்
அலை நீர் உலகு அனைத்தும் தான் ஆய், Alai Neer Ulagu Anaiththum Thaan Aay - கடல் ஆழ்ந்த உலகங்கள் யாவுமாய் இருப்பவனும்
தானும் ஆனான் தன் சாளக்கிராமம், Thaanum Aanaan Than Chaalakkiraamam - அஸாதாரணமான திவ்யமங்கள விக்ரஹத்தையுடையனுமான எம்பெருமானுடைய ஸாளக்ராமத்தை
995பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) (வெந்தாரென்பும்.) சிவபிரானுடைய ஆபரணங்களையும் அலங் காரங்களையும் பேசுகிறார். 8
வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர்
சந்தார் தலை கொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன் தான் சென்று என்
எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கமுது நீர் திரு மார்வில்
தந்தான் சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-8
வெந்தார் என்பும், Venthaar Enbum - செத்து வெந்துபோன ப்ரேதங்களின் எலும்புகளையும்
சுடு நீறும், Sudu Neerum - சுட்ட சாம்பலையும்
மெய்யில் பூசி, Meiyyil Poosi - சரீரத்தில் தரித்துக்கொண்டு
சந்து ஆர் ஓர் தலைகையகத்து கொண்டு, Sandhu Aar Oor Thalaikayakththu Kondu - சந்துகள் நிறைந்த ஒரு மண்டையோட்டைக் கையிலே எடுத்துக்கொண்டு
உலகு ஏழும் திரியும், Ulagu Ezhum Thiriyum - எல்லாவுலகங்களிலும் திரிந்தவனான
பெரியோன் தான், Periyoon Thaan - பரமசிவன்
சென்று, Senru - கிட்டவந்து
என் எந்தாய் சாபம் தீர் என்ன, En Endhai Saapam Theer Enna - ‘என் ஸ்வாமீ!, (எனக்கு நேர்ந்திருக்கிற) சாபத்தை நீக்கியருள வேணும்’  என்று பிரார்த்திக்க,
திருமார்பில் இலங்கு அமுதம் நீர் தந்தான், Thirumaarbil Ilangu Amudham Neer Thandhaan - தனது திருமார்பில் விளங்குகின்ற அம்ருத ஜலத்தை  அளித்தவனான எம்பெருமான்
சந்து ஆர் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம், Sandhu Aar Pozhil Soozhntha Saalakkiraamam - சந்தனமரங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த ஸாளக்ராமத்தை
996பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) (“ஒழிவில் காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்ய வேண்டும் நாம்” என்று இடைவிடாது கைங்கரியம் பண்ணப்பாரித்திருக்கின்ற ஸ்ரீ வைஷ்ணவர்களின் கோஷ்டி ஒரு பக்கத்திலும்,) 9
தொண்டாம் இனமும் இமையோரும் துணை நூல் மார்பில் அந்தணரும்
அண்டா வெமக்கே யருளாய் என்று அணையும் கோயிலருகெல்லாம்
வந்தார் பொழிலின் பழனத்து வயலினயலே கயல் பாய
தன்டாமரைகள் முக மலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-9
தொண்டு ஆம் இனமும், Thondu Aam Inamum - தொண்டு செய்பவர்களான பாகவதர்களுடைய ஸமூஹமும்
இமையோரும், Imaiyorum - நித்யஸூரிகளும்
துணை நூல் மார்வில் அந்தணரும், Thunai Nool Maarvil Andhanarum - யஜ்ஞோபவீதத்தோடு கூடின மார்வையுடைய பிராமணர்களும்
அண்டா எமக்கே அருளாய் என்று அணையும்கோயில், Andaa Emakke Arulaai Endru Anaiyumkoil - ‘தேவனே, எங்களுக்கே அருள் புரிய வேணும்’ என்று சொல்லிக்கொண்டு வந்து சேர்ந்து நிற்கிற கோவிலாயும்,
அருகு எல்லாம், Arugu Ellam - சுற்றுப்பிரதேசங்களெங்கும்
வண்டு ஆர் பொழிலின் பழனத்து, Vandu Aar Pozhilin Pazhanathu - வண்டுகள் நிறைந்திருக்கப்பெற்ற சோலைகளிலுண்டான நீர்நிலங்களில்
வயலின் அயலே கயல் பாய, Vayalin Aayale Kayal Paaya - கழனிகளிடத்துள்ள கயல் மீன்கள் வந்து துள்ள
தண்தாமரைகள் முகம்மலர்த்தும், Thanthaamaraigal Mukhammalarthum - குளிர்ந்ததாமரை மொக்குகள் முகம் விகஸிக்கப் பெற்றதாயுமுள்ள
சாளக்கிராமம், Saalakkiraamam - ஸாளக்ராமத்தை
997பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) (தாராவாரும்.) எம்பெருமானுடைய ஸஹஸ்ரநாமங்களை ஸங்கீர்த்தனம் பண்ணுவதும் இந்தத் திருமொழியைக் கற்பதும் துல்ய பலமென்கிறார். 10
தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத் தடிகளை
காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
ஆரார் உலகத்தறிவுடையார் அமரர் நன்னாட்டரசு ஆள
பேர் ஆயிரமும் ஒதுமின்கள் அன்றி யிவையே பிதற்றுமினே –1-5-10
உலகத்து, Ulagaththu - இவ்வுலகத்திலே
அறிவு உடையார் ஆரார், Arivu Udaiyaar Aaraar - விவேகமுள்ளவர்கள் ஆரார் இருக்கிறீர்களோ(அவர்களெல்லீரும்)
அமரர் நல் நாடு அரசு ஆள, Amarar Nal Naadu Arasu Aala - நித்யஸூரிகளுடைய வில க்ஷணமான ஸ்ரீவைகுண்டத்தை அரசாளும் படியாக
பேர்ஆயிரமும் ஓதுமின்கள், Peraayiramum Othuminngal - (ஸ்ரீ வைகுண்டநாதனுடைய) ஆயிரந் திரு நாமங்களையும் ஓதுங்கள்:
அன்றி, Andri - அல்லது,
கார் ஆர் புறவில் மங்கை வேந்தன் கலியன், Kaar Aar Puravil Mangai Vendan Kalyan - மேகங்கள் படிந்துள்ள தோட்டங்களையுடைய திருமங்கை நாட்டுக்குத் தலைவரான திருமங்கையாழ்வார்
தாரா ஆரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளை, Tharaa Aarum Vayal Soozhntha Saalakkiraamathu Adigalai - ஸாரஸபக்ஷிகள் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட ஸ்ரீஸாளக்ராமத்திலே எழுந்தருளியிருக்கு மெம்பெருமான் விஷயமாக
ஒலி செய், Oli Sei - அருளிச்செய்த
தமிழ்மாலை இவையே, Thamizhmaalai Ivaiye - தமிழ் மாலையாகிய இப்பாசுரங்களையே
பிதற்றுமின், Pithatrumin - வாய்வந்தபடி சொல்லுங்கள்.
998பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) (ஸ்ரீ நைமிசாரண்யத் தெம்பெருமான் திருவடிகளிலே பெரிய பிராட்டியார் முன்னிலையாகச் சரணம் புகுகிறார் இத்திருமொழியில். பகவானிடத்தில் சரணாகதி செய்யுமிடத்து அவனுடைய மேன்மைகளையும் தன்னுடைய தாழ்வுகளையும் வெளியிட்டுக்கொண்டே செய்ய வேணுமென்று விதியிருப்பதாலும், ஆர்த்தியின் கனத்தாலே தம்முடைய தோஷங்களெல்லாம் நினைவுக்கு வந்தே தீருமாகையாலும், இவ்வாழ்வார் தாமும் தம்முடைய குற்றங்குறைகளை யெல்லாம் விரிவாகப் பேசிக்கொண்டு சரணாகதி பண்ணுகிறார்.) 1
வாணிலாமுறுவல்சிறுனுதல்பெருந்தோள் மாதரார்வனமுலைப்பயனே
பேணினேன்,
அதனைப்பிழையெனக்கருதிப் பேதையேன்பிறவிநோயறுப்பான்,
ஏணிலேனிருந்தேனெண்ணினேனெண்ணி இளையவர்க்கலவியிந்திறத்தை
நாணினேன்,
வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்! –1-6-1
நைமிசாரணியத்துள் எந்தாய், Naimisaaraniyaththul Endhaai - நைமிசாரண்யத்தில் எழுந்தருளியிருக்கிற ஸ்வாமீ!,
பேதையேன், Paethaiyen - அறிவு கெட்டவனான அடியேன்,
வாள் நிலா முறவல், Vaal Nila Muraval - ஒளி பொருந்திய புண் சிரிப்பையும்
சிறு நுதல், Siru Nuthal - சிறிய நெற்றியையும்
பெரு தோள், Peru Thol - பெரிய தோளையும் உடையரான
மாதரார், Maatharaar - பெண்களினுடைய
வனம் முலையே, Vanam Mulaiye - அழகிய முலைகளையே
பயன், Payan - பரம புருஷார்த்தமாக
பேணினேன், Paeninaen - (நெடுநாள் வரை) ஆதரித்திருந்தேன்;
அதனை, Adhanai - அப்படி ஆதரித்திருந்த நிலைமையை
பிழை என கருதி, Pizhai Ena Karuthi - தப்பென்று நினைத்து
பிறவி நோய் அறுப்பான் ஏண் இலேன் இருந்தேன், Piravi Noi Aruppaan Aen Ileen Irundhen - ஸம்ஸாரமாகிற வியாதியை அறுத்துக்கொள்ள எண்ண மில்லாதவனாகவே இருந்திட்டேன்;
எண்ணினேன், Enninaen - ஸ்வரூபத்தை ஆராயத்தொடங்கினேன்;
எண்ணி, Enni - ஆராயவே,
இளையவர் கலவியின் திறத்தை நாணினேன், Ilaiyavar Kalaviyin Thiraththai Naaninaen - விசயாந்தர போகங்களைக் காறியுமிழ்ந்தேன்;
வந்து உன் திரு அடி அடைந்தேன், Vandhu Un Thiru Adi Adaindhen - இன்று உன் திருவடிகளை வந்து பணிந்தேன்.
999பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) (எம்பெருமான் பக்கல் வந்துசேர்ந்தவுடனே, கீழ்க்கழிந்த காலத்துக்கு அநுதாபம் பிறப்பது வழக்கம். இப்படி பகவத் விஷயத்திலீடுபட்டு ஆநந்தமயமாகப் போது போக்க வேண்டியிருக்க, அந்தோ! விஷயாந்தரங்களில் ஈடுபட்டுத் தருமத்தை அடியோடு மறந்து எவ்விதத்திலாவது இந்திரியங்களுக்கு திருப்தியை உண்டாக்குவதே வேண்டியது என்று கொண்டு அருமந்த காலத்தை அநியாயமாகப் போக்கினேனே! என்று கழிவிரக்கங் காட்டுகின்றார் முன்னடிகளில்.) 2
சிலம்படி யுருவில் கரு நெடும் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து
புலம்படிந்து உண்ணும் போகமே பெருக்கிப் போக்கினேன் பொழுதினை வாளா
அலம் புரி தடக்கை யாயனே மாயா வானவர்க்கு அரசனே வானோர்
நலம் புரிந்து இறைஞ்சுன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-2
சிலம்பு அடி உருவின், Silambu Adi Uruvin - சிலம்புகளை அணிந்த கால்கள் அழகாயிருக்கப் பெற்றவர்களும்
கருநெடு கண்ணார் திறத்தன் ஆய், Karunedu Kannaar Thiraththan Aay - கறுத்து நீண்ட கண்களையுடையவர்களுமான மாதர்களிடத்திலேயே ஆஸக்தனாய்
அறத்தையே மறந்து, Araththaye Maranthu - தருமங்களை மறந்து
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி, Pulan Padinthu Unnum Pogame Perukki - இந்திரியங்கள் பொருந்தி அநுபவிக்கிற விஷய போகங்களையே மேன் மேலும் அதிகப்படுத்திக்கொண்டு
பொழுதினை வாளா போக்கினேன், Pozhudhinai Valaapo Kkinen - வாழ்நாளை வீணாகக் கழித்தேன்;
அலம் புரி தடகை, Alam Puri Thadakai - போதும் போதுமென்று சொல்லும்படியாக தாநஞ்செய்கிற பெரிய திருக்கையையுடைய
ஆயனே, Aayaney - கோபால க்ருஷ்ணனே!
மாயா, Maayaa - ஆச்சரியமான செய்கைகளையுடையவனே!
வானவர்க்கு அரசனே, Vaanavarkku Arasane - தேவாதிதேவனே!
வானோர், Vaanor - நித்யஸூரிகள்
நலம் புரிந்து இறைஞ்சு, Nalam Purinthu Irainju - அன்பு புண்டு ஆக்ரயிக்கப்பெற்ற
உன் திரு அடி அடைந்தேன், Un Thiru Adi Adaindhen - உன் திருவடிகளிலே இன்று வந்து கிட்டப்பெற்றேன்.
1000பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) (போக்கினேன் பொழுதினை வாளா ” என்று வீண்போது போக்கினதாகக் கீழ்ப்பாட்டிலருளிச் செய்தார் ;) 3
சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து கரி குழல் மடந்தையர் திறத்து
காதலே மிகுத்துக் கண்டவா திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்
வேதனைக் கொடுங்கி நடுங்கினேன் வேலை வெண் திரை யலமரக் கடைந்த
நாதனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-3
வேலை வெண்திரை அலமர, Velaivendhirai Alamara - கடலிலேயுள்ள வெளுத்த அலைகள் கலங்கும்படி
கடைந்த, Kadaindha - (தேவர்களுக்காகக்) கடைந்தருளின
சூதினை பெருக்கி, Soodhinai Perukki - அதிகமாகச் சூதாடியும்
களவினை துணிந்து, Kalavinai Thuninthu - களவு செய்வதில் துணிந்தும்
சுரி குழல் மடந்தையர் திறத்து காதலேமிகுத்து, Suri Kuzhal Madanthaiyar Thirathu Kaadhalemiguthu - சுருண்ட கூந்தலையுடைய ஸ்த்ரீகள் விஷயத்திலே மிக்க ஆசைகொண்டு
கண்ட ஆ திரிந்த, Kanda Aa Thirindha - கண்டபடியெல்லாம் தட்டித்தரிந்த
தொண்டனேன், Thondaneyn - அடியேன்
நமன் தமர்செய்யும் வேதனைக்கு, Naman Thamarcheyyum Vedhanaiyikku - யமபடர்கள் செய்யப்போகிற ஹிம்ஸைகளை நினைத்து
ஒடுங்கி நடுங்கினேன், Odungi Nadunginen - உடல் குன்றி நடுங்கினவனாய்
வந்து உன் திருஅடி அடைந்தேன், Vandhu Un Thirudi Adaindhen - இன்று வந்து உன் திருவடிகளைச் சேர்ந்துவிட்டேன்.
1001பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) (அக்நி ஸாக்ஷிகமாகத் தாம் விவாஹம் செய்து கொண்ட பெண்டிர்களை அலக்ஷியஞ் செய்து விட்டிட்டுப் பிறருடைய மனைவியையும் பொருளையும் கைப்பற்றி இவ்வுலகில் மனம் போனபடி திரிந்தவர்கள் அந்தப் பாவங்களின் பலனை அனுபவிப்பதற்கு யம லோகஞ் சென்றவாறே அங்கு யமபடர்கள் வந்து பிடித்துக்கொண்டு சக்தி யுள்ளவளவும் புடைத்துத் தங்களுக்கும் இளைப்பு உண்டானவாறே ‘ இங்கே கிடவுங்கள்’ என்று ஒரு மூலையில் தள்ளிவைத்து, செம்பினால் செய்யப்பட்டு நெருப்பிலே பழுக்கப் பழுக்கக் காய்ச்சப்பட்டு எரி வீசுகின்ற பதுமையைக் கொணர்ந்து முன்னே நிறுத்தி, பாவீ! முன்னே பிறர் மனைவியை அணைந்தாயே; இப்போது இந்தப் பதுமையை அணைந்து கொள்” என்று சொல்லி அணைவித்துத் துன்பப்படுத்து வர்கள் – என்கிற விஷயத்தைக் கேள்விப்பட்டது முதல் அஞ்சி நடுங்குகின்றேன் ; உன்னைச் சரணமடைந்தால் எல்லா அச்சமும் நீங்கிவிடும் என்று இப்போது உன்னைச் சரணமடைந்திட்டேன் என்றாராயிற்று.) 4
வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரம் என்று இவற்றை
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழு வென மொழிவதற்கு அஞ்சி
நம்பனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-4
வம்பு உலாம் கூந்தல் மனைவியை துறந்து, Vambu Ulaam Koondhal Manaiviyai Thurandhu - பரிமளம் வீசாநின்ற கூந்தலையுடையளான தாலி கட்டின பெண் சாதியை உபேக்ஷித்துவிட்டு
பிறர் பொருள் தாரம் என்று இவற்றை நம்பினார், Piraar Porul Thaaram Endru Ivatrai Nambinaar - பிறருடைய பொருள், பிறருடைய மனைவி என்னும்படிய பரத்ரவ்யங்களை விரும்பினவர்கள்
இறந்தால், Irandhaal - இறந்துபோனால்
நமன் தமர், Naman Thamar - யமபடர்கள்
பற்றி, Patri - பிடித்துக்கொண்டு
எற்றி, Etri - துன்பப்படுத்தி
வைத்து, Vaiththu - (தங்களுக்கும் கை சலித்தவாறே) ஓரிடத்தில் போட்டுவைத்து,
பாவீ, Paavee - “பெரும்பாவங்களைச் செய்து இவ்விடம் வந்து சேர்ந்தவனே!
செம்பினால் இயன்ற எரி எழுகின்ற பாவையை தழுவு என, Sembinaal Iyanra Eri Ezhugindra Paavaiye Thazhuvu Ena - செம்பினால் செய்யப்பட்டதாய் நெருப்புப் பற்றியெரிகின்றதான இந்த ஸ்த்ரீப்ரதிமையைத்தழுவிக்கொள்” என்று
மொழிவதற்கு அஞ்சி, Mozhivadharku Anji - சொல்லப்போகிறார்களே! யென்று பயப்பட்டு
நம்பனே, Nambane - ஆச்ரிதர்களுக்கு நம்பத்தகுந்தவனே!
1002பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) (இடும்பையாலடர்ப்புண்டு.- விஷய போகங்களைச்செய்து திரிபவர் களும் ஏழைகளைக் கண்டால் ஐயோ ! என்று இரங்குவதுண்டு ; அந்த இரக்கமும் எனக்கு இல்லாமல் போயிற்றே ! என்று அநுதாபப்படுகிறார்.) 5
இடும்பையால் அடப்புண்டு இடுமினோ துற்றென்று இரந்தவர்க்கு இல்லையே என்று
நெடும் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை
கடும் சொலார் கடியார் காலனார் தமரால் படுவதோர் கொடு மிறைக்கு அஞ்சி
நடுங்கி நான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-5
இடும்பையால் அடர்ப்புண்டு, Idumpaigal Adarppundhu - ஏழ்மைத்தனத்தினால் கஷ்டப்பட்டு
ஓ! துற்று இடுமின் என்று, O Thuttru Idumin Enru - “ஐயோ! ஒரு கவளம் இடுங்கோள்” என்று கதறி
இரந்தவர்க்கு, Irandavarkku - பிச்சை கேட்டவர்களுக்கு
இல்லையே என்று, Illaiye Enru - இல்லவேயில்லை யென்று சொல்லி
நெடு சொலால் மறுத்த, Nedu Solaal Marutha - நீண்ட சொல்லாலே திரஸ்கரித்த
நீசனேன் நான், Neesanen Naan - நீசனாகிய நான்
அந்தோ, Andho - ஐயோ!
வினை பயன்தன்னை நினைக்கிலேன், Vinai Payanthanai Ninaikkilena - பாபங்களுக்கு நேரக்கூடிய பலன்களை நெஞ்சாலும் நினைக்க மாட்டாதவனாயிருக்கின்றேன்;
கடு சொலார் கடியார் காலனார் தமரால் படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி நடுங்கி, Kadu Solaar Kadiyaar Kaalanaar Thamaral Paduvathu Oru Kodu Mirraikku Anji Nadungi - க்ரூரமான சொற்களையுடையராய் க்ரூரமான செய்கை களையுமுடையரான யமபடர்களாலே உண்டாகக் கூடியகடினமாக ஹிம்ஸைகளை நினைத்து அஞ்சி நடுங்கி
1003பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) (ஜீவஹிம்ஸைகள் பண்ணித் திரிந்ததற்கும் எல்லையில்லையென்கிறார். கோடியமனமாவது வழியைவிட்டு விலகின மனம்; ருஜு வான வழியில் போகாமல் கோணலாகச் செல்லுகின்ற மனம் என்றபடி. புத்தி கெட்டுச் சினத்தொழில்களைச் செய்தேனென்கிறார்.) 6
கோடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து திரிந்து நாயினத்தொடும் திளைத்திட்டு
ஓடியும் உழன்றும் உயிர் களே கொன்றேன் உணர்விலேன் ஆதலால் நமனார்
பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே பாற் கடல் கிடந்தாய்
நாடி நான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-6
பரமனே, Paramaney - புருஷோத்தமனே!
பாற்கடல் கிடந்தாய், Paarkadal Kidandhai - திருப்பாற்கடலில் திருக்கண் வளர்ந்தருளுமவனே!
கோடிய மனத்தால், Kodiyamanathal - கோணலான நெஞ்சோடே
சினம் தொழில் புரிந்து, Sinam Thozhil Purinthu - பிறர்க்கு விரோதமான காரியங்களைச் செய்து
நாய் இனத்தொடும் திரிந்து திளைத்திட்டு, Nai Inathodum Thirinthu Thilaithittu - நாய் முதலிய துஷ்ட ஜந்துக்களோடு கூடித்திரிந்து வேட்டையாடிக்களித்து
ஓடியும் உழன்றும், Oadiyum Uzhanthum - இங்குமங்கும் ஓடித்திரிந்தும்
உயிர்களே கொன்றேன், Uyirgale Konren - பிராணி ஹிம்ஸையையே செய்துகொண்டிருந்தவனாய்
உணர்வு இலேன் நான், Unarvu Ilen Naan - விவேக சூந்யனாயிருந்த நான்
நமனார் பாடியை பெரிதும் பரிசு அழித்திட்டேன், Namanar Paadiyai Peridum Parisu Azhithitten - யமபட்டணமான நரகத்தின் நிலைமையை மிகவும் அழித்து விட்டேன்.
1004பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) (மனமொழி மெய்கள் மூன்றாலும் பாவங் களையே செய்து செத்தவர்கள் போகிற வழியின் கொடுமையைக் கேள்விப்பட்ட மாத்திரத்திலே நடுநடுங்கி வந்து உன் திருவடிகளைப் பற்றினேன் என்கிறார்.) 7
நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி யல்லாதன செய்தும்
துஞ்சினார் செல்லும் தொன்னெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவர் தானவர்க்கு என்றும்
நஞ்சனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-7
விளங்கனி முனிந்தாய், Vilangani Munindhai - விளாம்பழமாய் வந்து தோன்றின அஸுரனைச் சீறித் தொலைத்தவனே!
வஞ்சனேன் அடியேன்நெஞ்சினில் பிரியா வானவா, Vanjanen Adiyennenjinil Priya Vaanavaa - வஞ்சகனான என்னுடைய நெஞ்சினுள்ளும் புகுந்து பிரியாதிருக்கிற தேவனே!
தானவர்க்கு என்றும் நஞ்சனே, Thaanavarkku Endrum Nanjane - அசுரர்களுக்கு எப்போதும் மிருத்யுவாயிருப்பவனே!
நீதி அல்லாதன, Neethi Alladhana - அநீதியான ஒழுக்கங்களை
நெஞ்சினால் நினைந்தும், Nenjinaal Ninaindhum - (முதலில்) நெஞ்சாலே நினைத்தும்
வாயினால் மொழிந்தும், Vaayinal Mozhindhum - (பிறகு) வாயாலே சொல்லியும்
செய்தும், Seithum - (பிறகு) செய்கையினால் அனுட்டித்தும்
துஞ்சினார், Thunjinar - முடிந்தவர்கள்
செல்லும், Sellum - அடையத்தக்க
தொல் நெறி, Thol Nerii - நரகமார்க்கத்தை
கேட்டே, Kette - (கற்றுணர்ந்த பெரியோர் சொல்லக்) கேட்டமாத்திரத்திலே
துளங்கினேன், Thulankinen - நடுங்கினவனாய்க்கொண்டு உன் திருவடி அடைந்தேன்-.
1005பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) (கலி புருஷன் என்னைத் துன்பப்படுத்த நினைத்துத் தனக்குக் கையாட்களான இந்திரியங்களையழைத்து நீங்கள் திருமங்கை யாழ்வாரை நன்றாக ஹிம்வித்துவிடுங்கள் என்று ஏவினான் ;) 8
ஏவினார் கலியார் நலிக வென்று என் மேல் எங்கனே வாழுமாறு ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல் வண்ணா
பாவினாரின் சொல் பன் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என்
நாவினால் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-8
குறுங்குடி, Kurungudi - திருக்குறுங்குடியிலெழுந்தருளியிருக்கிற
நெடு கடல் வண்ணா, Nedu Kadal Vanna - பெரிய கடல் போன்ற திருநிறமுடையவனே!
கலியார், Kaliyar - கலிபுருஷனென்கிற ஒரு மஹாப்ரபுவானவர்
நலிக என்று, Nalika Endru - “இந்தத் திருமங்கை மன்னனை ஹிம்ஸியுங்கோள்” என்று சொல்லி
என் மேல், En Mel - என் மேலே
ஐவர் ஏவினார், Aivar Aevinar - பஞ்சேந்திரியங்களையும் ஏவிவிட்டார்;
எங்ஙனே வாழும் ஆறு, Enggane Vaalum Aaru - அந்தக் கலிபுருஷர் இனி பிழைக்க வழி ஏது? (ஏனென்னில்;)
நான், Naan - அடியேன்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன், Kovinar Seyyum Kodumaiyai Madithen - குறும்பர்களான அந்த இந்திரியங்கள் செய்யத்தக்க கொடுமைகளை அப்புறப்படுத்திவிட்டேன்;
என் நாவினால், En Naavinai - எனது நாவினாலே
பா ஆர் இன் சொல் பல் மலர்கொண்டு, Paa Ar In Sol Pal Malarkondu - நல்ல சந்தங்கள் நிறைந்த இனிய சொற்களாகிற புஷ்பங்கள் பலவற்றையுங் கொண்டு
உன் பாதமே பரவி, Un Paathame Paravi - உன் திருவடிகளையே தோத்திரஞ்செய்து
பணிந்து, Panindhu - கீழே விழுந்து
1006பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) (தம்முடைய அத்யவஸாயத்தை வெளி யிடுகிறாரிதில்.) 9
ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
தானுடைக் குரம்பை பிரியும் போது உன் தன் சரணமே சரணம் என்று இருந்தேன்
தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய்
நானுடைத் தவத்தால் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-9
தேன் உடை கமலம் திருவினுக்கு அரசே, Then Udai Kamalam Thiruvinukku Arase - தேன் நிறைந்த தாமரைப்பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார்க்குப் பதியானவனே!
திரை கொள்மா நெடு கடல் கிடந்தாய், Thirai Kolma Nedu Kadal Kidandhai - அலைகள் நிரம்பிய மிகப்பெரிய திருப் பாற்டலில் கண் வளர்ந்தருளுமவனே!
ஊன், Oon - மாமிசத்தை
இடை சுவர் வைத்து, Idai Suvar Vaiththu - நடுநடுவே சுவராக வைத்து
என்பு, Enbu - எலும்புகளை
தூண் நாட்டி, Thoon Naatti - கம்பங்களாக நட்டு
உரோமம் வேய்ந்து, Uromam Veyndhu - மயிர்களை மேலே மூடி
ஒன்பது வாசல் தான் உடை, Onbathu Vaasal Thaan Udai - நவத்வாரங்களையுடையதாகச் செய்யப்பட்ட
குரம்பை, nan - குடிசை போன்ற இந்த சரீரத்தை
பிரியும் போது, nan - விட்டுப்பிரியுங்காலத்தில்
உன்தன் சரணமே சரணம் என்று இருந்தேன், nan - உன்னுடைய திருவடிகளே ரக்ஷகமாக வேணுமென்று நினைத்திருந்தேன்;
நானுடை தவத்தால் திருஅடி அடைந்தேன், nan - (இப்போது) என்னுடைய பாக்கியத்தினால் திருவடிவாரத்தில் சேரப்பெற்றேன்.
1007பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) (இமையோர் நாதனாகிய இந்திரன் தனது பரிவாரங்களை யெல்லாம் அழைத்து நாம் எல்லாரும் நைமிசாரணியத்துள் சென்று எம்பெருமானை ஸேவிப்போம் வாருங்கள்;) 10
ஏதம் வந்து அணுகா வண்ண நாம் எண்ணி எழுமினோ தொழுதும் என்று இமையோர்
நாதன் வந்து இறைஞ்சும் நைமி சாரணி யத்து எந்தையைச் சிந்தையுள் வைத்து
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலி செய் மாலை தான் கற்று வல்லார்கள்
ஓத நீர் வையகம் ஆண்டு வெண் குடைக் கீழ் உம்பரும் ஆகுவர் தாமே –1-6-10
ஏதம் வந்து அணுகா வண்ணம், nan - “துக்கங்கள் நம்மிடம் வந்து சேராத வகையை
நாம் எண்ணி, nan - நாம் எண்ணியிருப்போமாகில்
தொழுதும் எழு மின் என்று, nan - (நைமிசாரண்யத்திலேபோய்த்) தொழுவோம் வாருங்கள்” என்று சொல்லி
இமையோர் நாதன் வந்து, nan - தேவேந்திரன் வந்து
இறைஞ்சும், nan - ஆச்ரயிக்கப்பெற்ற
நைமிச அரணியத்து எந்தையை, nan - நைமிசாரண்யத்தில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானை
சிந்தையுள் வைத்து, nan - தியானம் செய்து
காதல் மிகுந்த, nan - பகவத்பக்தி அதிகரிக்கப்பெற்ற
கலியன், nan - திருமங்கையாழ்வார்
வாய் ஒலி செய்மாலை, nan - அருளிச் செய்த இச்சொல் மாலையை
கற்று வல்லுநர்கள் தாம், nan - அப்யஸித்துத் தேறினவர்கள்
ஓதம்நீர் வையகம், nan - கடல் சூழ்ந்த இப்பூமண்டலத்தை
வெண் குடை கீழ் ஆண்டு, nan - வெளுத்த குடை நிழலின் கீழே இருந்துகொண்டு அரசாட்சி செய்தபின்பு
உம்பரும் ஆகுவர், nan - நித்யஸூரிகளோடும் சேரப்பெறுவர்கள்.
1008பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) (கீழ் இரண்டாந் திருமொழியின் நான்காம் பாட்டின் உரையில் நரஸிம்ஹாவதார ப்ரமேயங்களை மிக்க விரிவாக வரைந்தோ மாதலால் அங்கே கண்டு கொள்வது.) 1
அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய் அவுணன்
பொங்காவாகம் வள்ளு கிரால் போழ்ந்த புனிதன் இடம்
பைம் கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ்
செங்கணாளி யிட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே –1-7-1
அங்கு, Angu - (‘நீ சொல்லுகிற விஷ்ணு இங்கில்லை’ என்று இரணியன் சபதஞ் செய்த) அவ்விடத்திலே
அம் கண் ஞாலம் அஞ்ச ஓர் ஆள் அரி ஆய், Am Kan Nyaalam Anja Oor Aal Ari Aay - அழகியதாய் விசாலமான பூமியிலுள்ளாரெல்லாரும் பயப்படும்படியான ஒப்பற்ற நரசிங்கமூர்த்தியாய் (எம்பெருமான் தோன்றினதைக் கண்டு)
அவுணன் பொங்க, Avunan Pong - இரணியன் கிளர்ந்த வளவிலே,
ஆகம், Aagam - அவனது உடலை
வள் உகிரால், Val Ukiraal - கூர்மையான நகங்களாலே
போழ்ந்த, Pozhntha - இருபிளவாகப் பிளந்த
புனிதன் இடம், Punithan Idam - பரம பரிசுத்தனான எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடமாவது;-
செம் கண் ஆளி, Sem Kan Aali - (சீற்றத்தால்) சிவந்த கண்களையுடைய சிங்கங்களானவை
பை கண் ஆனை கொம்பு கொண்டு, Pai Kan Aanei Kombu Kondu - பசுமையான கண்களையுடைய யானைகளின் தந்தங்களைக் கொணர்ந்து
பத்திமையால், Pathimaiyaal - பக்தியினாலே
அடி கீழ், Adi Keezh - (பகவானுடைய) திருவடிகளிலே
இட்டு, Ittu - ஸமர்ப்பித்து
இறைஞ்சும், Iraichum - ஆச்ரயிக்கப்பெற்ற
சிங்கவேள் குன்றம், Singaveal Kunram - அஹோபிலமென்கிற சிங்க வேள்குன்றமாம்.
1009பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) (சீற்றத்தாலே கடைவாயுடனே நாக்கை எற் றிக்கொள்ளுகிற பெரிய வாயையுடைய நரசிங்கமூர்த்தியாய்த் தோன்றி, பர ஹிம்ஸையே போது போக்கான இரணியனுடைய மார்பைப் பிளந்த பெருமான் எழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேழ்குன்றம்.) 2
அலைத்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
கொலைக் கையாளன் நெஞ்சிடந்த கூர் உகிராளன் இடம்
மலைத்த செல் சாத்தெறிந்த பூசல் வன் துடிவாய் கடுப்ப
சிலைக்கை வேடர் தெழிப் பறாத சிங்க வேள் குன்றமே –1-7-2
அலைத்த பேழ்வாய், Alaitha Pezhvai - (சீற்றத்தாலே) நாக்கு அலையா நின்றுள்ள பெரிய வாயையும்
வாள் எயிறு, Vaal Eiyiru - ஒளி பொருந்திய பற்களையுமுடையதாய்
ஓர், Oor - ஒப்பற்றதாய்
கோள், Kol - மிடுக்கையுடையதான
அரி ஆய், Ari Aay - நரஸிம்ஹமாய்க்கொண்டு
கொலை கையாளன் அவுணன் நெஞ்சு இடந்த, Kolai Kaiyaalan Avunan Nenju Idanthu - ஜீவ ஹிம்சையில் கைகாரனான இரணியனுடைய மார்வைக் கிழித்தெறிந்த
கூர் உகிராளன் இடம், Koora Ukiraalan Idam - கூர்மையான நகங்களையுடைய எம்பெருமான்  எழுந்தருளியிருக்கு மிடமாவது:-
மலைத்த, Malaittha - (வேடர்களாலே) ஆக்கிரமிக்கப்பட்ட
செல் சாத்து, Sel Saathu - வழிப்போக்கு ஜனங்களின் ஸமூகத்தாலே
எறிந்த, Erintha - (பிரதியாகச்) செய்யப்பட்ட
பூசல், Poosal - சண்டையிலே
வல் துடி வாய் கடுப்ப, Val Thudi Vaai Kaduppa - கடூரமான தொனியை யுடைத்தான பறையானது கோஷம் செய்ய,
சிலை கை வேடர், Silai Kai Veda - வில்லைக் கையிலேயுடைய வேடருடைய
தெழிப்பு, Thezhippu - ஆரவாரமானது
அறாத, Aradha - எப்போதும் மாறாத
1010பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) (வடிவின் பெருமைக்குத் தகுதியாகப் பெரிய வாயையும், ஒளி பொருந்திய (அல்லது, வாள் போன்ற) கோரப்பற்களையு முடைய நரசிங்கமாகத் தோன்றி இரணியனுடைய மாம்ஸஞ் செறிந்த மார்வைப் பிளந்த பெருமான் உறையுமிடம் சிங்கவேள் குன்றம்.) 3
ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
வாய்ந்த வாகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம்
ஓய்ந்த மாவுமுடைந்த குன்றும் அன்றியும் நின்றழலால்
தேய்ந்த வேயுமல்ல தில்லாச் சிங்க வேள் குன்றமே –1-7-3
ஏய்ந்த பேழ்வாய் வாள் எயிறு, Eyndha Pezhvai Vaal Eiyiru - (வடிவுக்குத்) தகுதியாகப் பெருத்த வாயையும் வாள் போன்ற பற்களையுடைமுடையதாய்
ஓர் கோள் அரி ஆய், Oru Kola Ari Aay - ஒப்பற்றதாய் மிடுக்கையுடையதான நரசிங்கமாகி
அவுணன், Avunan - இரணியாசுரனுடைய
வாய்ந்த ஆகம், Vaayndha Aagam - வளர்ந்த உடலை
வள் உகிரால், Val Ukiraal - கூர்மையான நகங்களாலே
வகிர்ந்த, Vagirntha - கிழித்தெறிந்த
அம்மானது இடம், Ammaanathu Idam - ஸ்வாமி எழுந்தருளி யிருக்கிற இடமாவது:-
ஓய்ந்த மாவும், Oyndha Maavum - (கடினமான நிலங்களில் அங்குமிங்கும் திரிந்து அலைந்ததனால்) களைத்துப்போன மிருகங்களும்
உடைந்த குன்றும், Udaindha Kunrum - உடைந்துபோன சிறு மலைகளும்
அன்றியும், Andriyum - இன்னமும்
நின்று அழலால் தேய்ந்த வேயும் அல்லது, Ninru Azhalal Theyndha Veyum Allathu - இருந்தபடியே நெருப்பாலே குறைகொள்ளியாய்க் கிடக்கிற மூங்கிலும் ஆகிய இவைகள் தவிர
இல்லா, Illaa - வேறொன்றுமில்லாத
1011பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) (கையும் வேலுமாயிருக்கிற விருப்பைக் கண்ட காட்சியிலே எல்லாரையும் துக்கப்படுத்தவல்லவனான இரணியனுடைய உயிரைக் கவர்ந்து அவனது மார்வைப் பிளந்தருளின பெருமான் உறையுமிடமாவது சிங்கவேழ்குன்றம்.) 4
எவ்வம் வெவ்வேல் பொன் பெயரோன் எதலனின் இன்னுயிரை
வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம்
கவ்வு நாயும் கழுகும் உச்சிப் போதொடு கால் சுழன்று
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே –1-7-4
எவ்வம் வெம்வேல், Evvam Vemveel - துன்பத்தை விளைப்பதாய் தீக்ஷ்ணமான வேலாயுதத்தையுடையனாய்
ஏதலன், Aethalan - பாகவத விரோதியான
பொன் பெயரோன், Pon Peyaron - இரணியனுடைய
இன் உயிரை, In Uyirai - இனிமையான பிரானணை
வவ்வி, Vavvi - அபஹரித்து
ஆகம், Aagam - (அவனுடைய) சரீரத்தை
வள் உகிரால், Val Ukiraal - கூர்மையான நகங்களாலே
வகிர்ந்த அம்மானது இடம், Vagirntha Ammanathu Idam - கிழித்தெறிந்த பெருமான் எழுந்தருளியிருக்குமிடமாவது:-
கவ்வும் நாயும், Kavvum Nayum - (கண்டவர்களை) யெல்லாம் கவர்கின்ற நாய்களும்
கழுகும், Kazhugum - கழுகுகளும் (நிறைந்திருப்பதனாலும்)
உச்சிப் போ தொடு கால் சுழன்று, Uchchi Po Thodu Kaal Suzhndru - கொழுத்த வெய்யிலும் சுழல்காற்றும் எப்போது மிருப்பதனாலும்
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா, Deivam Allal Chella Onna - தேவதைகள் தவிர மற்றையோர் சென்று கிட்ட  முடியாததான
1012பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) (சீற்றத்தாலே பல்லோடு நாக்கைச் செலுத்தி மென்றுகொண்டே யிருக்கிற பெரிய வாயையும் ஒளிவிடுகிற எயிற்றையும் மிடுக்கையுமுடைய நரசிங்கமாய்த் தோன்றி இரணியன் உயிர்மாளும்படியாக அவனது மார்வைப் பிளந்த பெருமானெழுந்தருளி யிருக்குமிடம் சிங்கவேழ் குன்றம். அஃது எப்படிப்பட்டது? மாறாமல் நின்று எரிகிற அக்நியைச் சுழல் காற்றானது முகந்து கொண்டு ஆகாயமெங்கும் பரவி வீசியெறிகையாலே சென்று காண்பதற்கு அருமைப்படும் கோயில்.) 5
மென்ற பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
பொன்ற வாகம் வள்ளுகிரால்  போழ்ந்த புனிதனிடம்
நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடிரிய
சென்று காண்டற்கரிய கோயில் சிங்க வேள் குன்றமே –1-7-5
மென்ற பேழ்வாய், Mendra Pezhvai - (சீற்றத்தாலே) மடித்த பெரிய வாயையும்
வாள் எயிறு, Vaal Eiyiru - வாள்போன்ற பற்களையுமுடையதாய்
ஓர், Oor - ஒப்பற்றதாய்
கோள், Kol - மிடுக்கையுடையதான
அரி ஆய், Ari Aay - நரசிங்கமாகி
பொன்றஅவுணன், Ponraavunan - (தன்னைக் கண்டமாத்திரத்திலே) செத்துப்போன இரணியனுடைய
ஆகம், Aagam - உடலை
வள் உகிரால், Val Ukiraal - கூர்மையான நகங்களாலே
போழ்ந்த, Pozhntha - பிளந்திட்ட
புனிதன் இடம், Punithan Idam - பரிசுத்தனான பகவான் எழுந்தருளியிருக்குமிடமாவது:-
சூறை, Soorai - சுழல்காற்றானது
நின்ற செம் தீ மொண்டு, Nindra Sem Thee Mondo - குறைவில்லாமலிருக்கிற சிவந்த நெருப்பை வாரிக்கொண்டு
நீள் விசும்பூடு இரிய, Neel Visumpoo Iriya - விசாலமான ஆகாசமடங்கலும் ஓடிப்பரவுகிறபடியாலே
சென்று காண்டற்கு அரிய கோயில், Sendru Kaandharku Ariya Koyil - கிட்டிச் சென்று ஸேவிக்க முடியாத கோயிலான
1013பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) (சீற்றத்தாலே அக்நிஜ்வாலைபோலே ஜ்வலிக்கிற சிவந்த கண்ணையும் ஒளிவிடாநின்ற பெரிய வாயையும் கோரப்பற்களையும் கண்டு “அப்பப்ப! இதென்ன உரு!” என்று பயப்பட்டு தேவர்கள் அங்கு மிங்கும் கால் தடுமாறிச் சிதறி ஓடும்படியாக நரசிங்கவுருக்கொண்டு எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேழ்குன்றம்.) 6
எரிந்த பைங்கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடி தெவ்வுரு வென்று
இரிந்து வானோர் கலங்கியோடே இருந்த வம்மானதிடம்
நெரிந்த வேயின் முழை யுள் நின்று நீண் எரி வா யுழுவை
திரிந்த வானைச் சுவடு பார்க்கும் சிங்க வேள் குன்றமே –1-7-6
எரிந்த, Erintha - (சீற்றத்தாலே) ஜ்வலிக்கின்ற
பை கண், Pai Kan - பசுமைதங்கிய கண்களோடும்
இலங்கு பேழ்வாய் எயிற்றொடு, Ilangu Pezhvai Eiyir Thodu - விளங்கா நின்ற பெரிய வாயில் பற்களோடும் கூடியிருக்கிற
இது, Idhu - இந்த நரசிங்கத் திருக்கோலமானது
எவ்வுரு என்று, Evuru Endru - என்ன பயங்கரமான ரூபம்! என்று அஞ்சி
வானோர், Vaanor - தேவர்கள்
இரிந்து கலங்கி ஓட, Irinthu Kalangi Oda - அங்குமிங்கும் சிதறிக் கால் தடுமாறி ஓடும்படியாக
இருந்த, Irundha - எழுந்தருளியிருந்த
அம்மானது இடம், Ammaanathu Idam - ஸர்வேசரனுடைய இடமாவது:-
உழுவை, Uzhuvai - புலிகளானவை
நெரிந்த வேயின் முழையுள் நின்று, Nerindha Veyin Muzhaiyul Nindru - நெருக்கமான மூங்கிற் புதர்களினின்றும்
நீள் நெறி வாய், Neel Nerai Vaai - பெரிய வழியிலே (வந்து)
திரிந்த ஆனை சுவடு பார்க்கும், Thirindha Aanai Suvadu Paarkkum - காட்டில் திரிகின்ற யானைகள் போன அடையாளத்தைஆராய்ந்து பார்க்குமிடமான
1014பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) (நரசிங்கமூர்த்தி இரணியன் மீது கொண்ட கோபம் அளவற்றிருந்ததனால் அந்தக் கோபாக்நி  மேலுலகமளவும் போய்ப் பரவி எங்கும் தஹிக்கப்புகவே ஸர்வலோக ஸம்ஹாரஸமயம் பிறந்துவிட்ட தென்று மூவுலகத்திலுள்ளோரும் அஞ்சி நடுங்கும்படியா யிருந்ததாம். அப்படிப்பட்ட உக்ர நரஸிம்ஹன் எழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேள் குன்றம்.) 7
முனைத்த சீற்றம் விண் சுடப் போய் மூ வுலகும் பிறவும்
அனைத்தும் அஞ்ச வாளரியாய் இருந்த வம்மானிதிடம்
கனைத்த தீயும் கல்லும் அல்லா வில்லுடை வேடருமாய்
தினைத்தனையும் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே –1-7-7
முனைத்த சீற்றம், Munaiththa Seetrum - மிக்க கோபமானது
போய், Poy - வளர்ந்து சென்று
விண் சுட, Vin Sudha - ஆகாயத்தைக் கொளுத்தவும்
மூ உலகும்பிறவும், Moo Ulagum Piravum - மூன்று லோகங்களும் மற்றுமுள்ளவைகளும்
அனைத்தும், Anaiththum - எல்லாம்
அஞ்ச, Anja - பயப்படவும்
கனைத்த தீயும், Kanaittha Theeyum - ஒலி செய்கின்ற நெருப்பும்
கல்லும், Kallum - (அந்த நெருப்பினால் வேகின்ற) கற்களும்
அல்லா வில் உடை வேடரும் ஆய், Allaa Vil Udai Veadarum Aayi - உலகத்தில் கண்டறியாத விற்களையுடைய வேடர்களும் நிறைந்திருப்பதனாலே
தினை தனையும் செல்ல ஒண்ணா, Thinai Thanaiyum Sella Onna - க்ஷணகாலமும் கிட்ட வொண்ணாததான
1015பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) (நான்முகக் கடவுளாகிய பிரமனும் சிவனும் முறைவழுவாது துதிக்கும்படியாக விலக்ஷணமான நரசிங்கவுருக் கொண்டு எம்பெருமா னெழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேள் குன்றம்.) 8
நாத் தழும்ப நான் முகனும் ஈசனுமாய் முறையால்
ஏத்த அங்கு ஓர் ஆளரியாய் இருந்த வம்மானதிடம்
காய்த்த வாகை நெற்றொலிப்பக் கல்லதர் வேய்ங்கழை போய்
தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்க வேள் குன்றமே –1-7-8
நான் முகனும் ஈசனும் ஆய், Naan Mughanum Eesanum Aayi - பிரமனும் சிவனும் கூடிக் கொண்டு
நா தழும்ப, Naa Thazhumba - நாக்குத் தடிக்கும்படி
முறையால் ஏத்த, Muraiyal Aetha - கிரமப்படி ஸ்தோத்ரம் பண்ண
காய்த்த, Kaayththa - காய்கள் நிறைந்த
வாகை, Vaagai - வாகை மரங்களினுடைய
நெற்று, Nettru - நெற்றுகளானவை
ஒலிப்ப, Olippa - சப்திக்க,
கல் அதர், Kal Adhar - கல்வழிகளிலேயுண்டான
வேய் கழை, Veiy Kazhai - குழல் மூங்கிற் செடிகள்
போய், Poy - ஆகாசத்தை அளாவிப்போய்
தேய்த்த, Theyththa - (மூங்கில்கள் ஒன்றோடொன்று) உராய்கையினாலுண்டான
தீயால், Theeyaal - நெருப்பினால்
விண் சிவக்கும், Vin Sivakkum - ஆகாசம் சிவந்திருக்கப்பெற்ற
1016பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) (கீழ்ப்பாட்டுகளில் தெய்வமல்லால் செல்ல வொண்ணா” என்றும், சென்று காண்டற்கு அரிய கோயில்” என்றும், ‘தினைத்தனையுஞ் செல்லவொண்ணா” என்றும் இத்திவ்ய தேசத்தின் அருமையைச் சொல்லிவந்தாரே;) 9
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்
அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம்
நெல்லி மல்கிக் கல்லுடைப்பப் புல்லிலை யார்த்து அதர் வாய்ச்
சில்லி சில் லென்ற சொல் அறாத சிங்க வேள் குன்றமே –1-7-9
நெஞ்சே, Nenjey - ஓ மனமே!
நல்லை, Nallai - நீ மிகவும் நல்லவன்;
நம்முடை நம்பெருமான், Nammudai Namberumaan - நமக்கு ஸ்வாமியாய்
அல்லி மாதர் புல்க நின்ற, Alli Maathar Pulka Nindra - பெரிய பிராட்டியாரை அணைத்துக் கொண்டிருப்பவனாய்
ஆயிரம் தோளன் இடம், Aayiram Tholan Idam - ஆயிரந்தோள்களை யுடையனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கு மிடமாய்,
நெல்லி, Nelli - நெல்லி மரங்கள்
மல்கி, Malki - நிறைந்து
கல் உடைப்ப, Kal Udaippa - பாறைகளை உடைக்கவும்
புல் இலை ஆர்த்து, Pul Ilai Aarththu - பனையோலைகள் ஒலிசெய்யவும்
அதர் வாய், Adhar Vaai - வழிகளிலே
சில்லி, Chilli - சுவர்க்கோழிகளையுடைய
சில் என்று ஒல் அறாத, Sil Endru Ol Aradha - சில் என்கிற ஒலி இடைவிடாமல் ஒலிக்கவும் பெற்ற
சிங்கவேள் குன்றம், Singaveal Kunram - சிங்கவேள்குன்றத்தை
நாம்தொழுதும், Naamthozhudum - நாம் ஸேவிப்போம்.
1017பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) (வீரலக்ஷ்மி விளங்குங் கண்களையுடைய சிங்கங் களானவை யானைக்கோடு முதலியவற்றைக் கொண்டு ஸமர்ப்பித்து வணங்குமிட மான சிங்கவேழ் குன்றத்திலே யெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் விஷயமாகத் திருமங்கை மன்னன் அருளிச்செய்த சொல்மாலையை ஓதவல்லவர்கள் தீங்கின்றி வாழ்வார்கள் என்று – இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.) 10
செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே –1-7-10
செம்கண் ஆளி, Semkan Aali - சிவந்த கண்களையுடைய சிங்கங்கள்
இட்டு, Ittu - (தமக்குக் கிடைத்த யானைத் தந்தம் முதலியவற்றைத்) திருவடிகளிலே ஸமர்ப்பித்து
இறைஞ்சும், Iraichum - வணங்குமிடமான
சிங்க வேழ் குன்று உடைய, Singam Vezh Kuntru Udaiya - சிங்கவேழ் குன்றத்தை இருப்பிடமாகவுடையனாய்
எங்கள் ஈசன், Engal Eesan - ஸம்ஸாரிகளான நமக்கெல்லார்க்கும் ஸ்வாமியாய்
எம் பிரானை, Em Piraanai - நமக்கு உபகாரகனாயுமுள்ள ஸ்ரீ நரஸிம்ஹமூர்த்தி விஷயமாக,
இரு தமிழ் நூல் புலவன், Iru Tamil Nool Pulavan - பெரிய தமிழ் சாஸ்த்ரத்தில் வல்லவராய்
மங்கை ஆளன், Mangai Aalan - திருமங்கை நாட்டுக்குத் தலைவராய்
மன்னு தொல்சீர், Mannu Tholseer - நித்யஸித்தமான ஸ்ரீ வைஷ்ணவலஷ்மியை உடையவராய்
வண்டு அறைதார், Vandu Araidhaar - வண்டுகள் படிந்து ஒலி செய்கின்ற மாலையை யணிந்தவராய்
செம் கை ஆளன், Sem Kai Aalan - மிக்க உதாரரான
கலியன், Kaliyan - ஆழ்வாரருளிச்செய்த
செம் சொல் மாலை, Sem Sol Maalai - செவ்விய இச்சொல் மாலையை
வல்லவர், Vallavar - ஓதவல்லவர்கள்
தீது இலர், Theethu Ilar - தீமை யொன்றுமின்றி நன்மை பெற்றவராவர்.
1018பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) (கொங்கலர்ந்த மலர்க்குருந்த மொசித்த கோவலனாய் எம்பிரானாய் சங்கு தங்கு தடங்கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினனாய் பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணனான எம்பெருமானது இருப்பிடமாகிய பொங்கு நீர் செங்கயல் திளைக்குஞ்சுனைத் திருவேங்கடத்தை நெஞ்சமே! அடை என்கிறார்.) 1
கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான்
சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் பொங்கு நீர்ச்
செங்கயல் திளைக்கும் சுனைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே –1-8-1
கொங்கு அலர் ந்த மலர் குருந்தம் ஒசித்த, Kongu Alar Nda Malar Kurundham Osiththa - பரிமளம் வீசுகின்ற பூக்கள் நிறைந்த குருந்த மரத்தை முறித்தழித்த
கோவலன், Kovalon - கோபால க்ருஷ்ணனாய்
எம்பிரான், Embiran - அஸ்மத்ஸ்வாமியாய்
சங்கு தங்கு தட கடல் துயில் கொண்ட, Sangu Thangu Thada Kadal Thuyil Konda - சங்குகள் தங்கியிருக்கிற பெரிய கடலிலே திருக்கண் வளர்கின்ற
தாமரை கண்ணினன், Thamarai Kanninann - புண்டரீகாக்ஷனாய்,
பொங்கு புள்ளினை வாய் பிளந்த, Pongu Pullinai Vai Pilantha - செருக்குடன் கிளர்ந்து வந்த பகாஸூரன் வாயைக் கிழித்தெறிந்த
புராணர்தம் இடம், Puranartham Idam - புராண புருஷனான ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளியிருக்கு மிடமாயும்
பொங்கு நீர், Pongu Neer - நீர்வளமுடையதாய்
செம் கயல் திளைக்கும், Sem Kayal Thilaikkum - சிவந்த மீன்கள் களித்து வாழப்பெற்ற
சுனை, Sunai - சுனைகளையுடையதாயுமிருக்கிற
திருவேங்கடம், Thiruveengadam - திருமலையை
நெஞ்சமே அடை, Nenjamai Adai - நெஞ்சே! நீ அடைந்திடு.
1019பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) (கம்ஸனால் ஏவப்பட்டு முலை கொடுக் கிற வியாஜத்தாலே ஸ்ரீ க்ருஷ்ண சிசுவை முடித்திடவேணுமென்று முலையிலே விஷம் தடவிக்கொண்டு தாய்போல வந்த பூதனையென்னும் பேய்ச்சியானவள் கதறும்படியாக அவளுடைய முலையையும் உயிரையும் உறிஞ்சியுண்ட பெருமான், பிரமன் முதலியோர்க்கு முகங்கொடுப்பதற்காகப் பள்ளி கொண்டருளுமிடம் திருப்பாற்கடல்;) 2
பள்ளியாவது பாற் கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட வெந்தை பிரானவன் பெருகுமிடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள் தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே –1-8-2
வன் பேய், Van Pei - கல்நெஞ்சை யுடையளான பூதனை யென்பவள்
இரங்க, Iranga - கதறும்படியாக
முலை, Mulai - (அவளது) முலையை
பிள்ளை ஆய், Pillai Aay - சிறு குழந்தையாயிருக்கச் செய்தே
உயிர், Uyir - உயிருடன்
உண்ட, Unda - உறிஞ்சி அமுதுசெய்த
எந்தை பிரான், Endhai Piraan - ஸ்ரீக்ருஷ்ணபகவான்
பள்ளி ஆவது, Palli Aavathu - பள்ளி கொள்ளுமிடமாவது
பாற்கடல் அரங்கம், Paarkadal Arangam - திருப்பாற்கடலும் திருவரங்கமுமாம்;
அவன், Avan - அப்பெருமான்
பெருகும் இடம், Perugum Idam - வளருகிற இடமாயும்,
தெள்ளியார், Thelliyar - தெளிந்த ஞானிகள்,
வெள்ளியான் கரியான் மணி நிறம் வண்ணன் என்று எண்ணி, Velliyan Kariyan Mani Niram Vannan Endru Enni - (கிருதயுகத்தில்) வெளுத்த நிறத்தனாயும் (கலியுகத்தில்) கறுத்த நிறத்தனாயும் (த்வாபரயு கதில்) சாமநிறத்தனா யுமிருப்பவன் என்று தியானித்துக் கொண்டு
நாள் தொறும், Naal Thorum - ஒவ்வொரு நாளும்
வணங்கும், Vanangum - வணங்கப்பெற்றதாயு முள்ள
திருவேங்கடம் மலை, Thiruveengadam Malai - திருமலையை
நெஞ்சே அடை, Nenje Adai - மனமே! ஆச்ரயி.
1020பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) (சயனித்தருளும்படியையும் நின்றருளும்படியையும் கீழ்ப்பாட்டில் அநுஸந்தித்தார்; நடந்தருளும்படியை இப்பாட்டில் அநுஸந்திக்கிறார்.) 3
நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கை தொழும் இணைத் தாமரை யடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திடக் கடிதாநிரைக் கிடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-3
நின்ற, Nindra - பேராமல் நின்று கொண்டிருந்த
மா மருது, Maa Maruthu - பெரிய மருதமரங்களிரண்டும்
இற்று வீழ, Itru Veela - முறிந்து விழும்படியாக
நடந்த, Nadanda - நடைகற்ற
நின்மலன், Ninmalan - நிர்மலனும்,
நேமியான், Nemiyan - திருவாழியை யுடையவனும்,
என்றும், Endrum - எப்போதும்
வானவர், Vaanavar - நித்யஸூரிகள்
கை தொழும், Kai Thozum - ஸேவிக்கப்பெற்ற
தாமரை அடி இணை எம்பிரான், Thamarai Adi Inai Empran - இரண்டு திருவடித் தாமரைகளை யுடைய ஸ்வாமியும்,
கன்றி, Kandri - (இந்திரன்) கோபங்கொண்டு
மாரி, Maari - மழையை
பொழிந்திட, Pozhindida - பெய்வித்தவளவிலே
ஆ நிரைக்கு, A Niraikku - பசுக்கூட்டங்களுக்கு
இடர்நீக்குவான், Idarnikkuvan - துன்பம் தொலைப்பதற்காக
சென்று, Sendru - போய்
குன்றம் எடுத்தவன், Kundram Eduththavan - கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்தவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற
1021பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) (பாண்டவர்களுக்காகப் பாரதயுத்தம் நடத்தி வெற்றி பெற்றவனும், இப்படி ஆச்ரிதர்களுக்காகக் காரியஞ் செய்யப்பெற்றதனால் திருமேனி மிக விளங்கப் பெற்றவனும், இடைச்சிகளோடு ராஸக்ரீடை யென்கிற குரவைக்கூத்து ஆடினவனும், தன்னைத் துதிப்பவர்களின் நெஞ்சை விட்டுப் பிரியாதே யிருப்பவனும், இடவெந்தை யென்கிற திவ்யதேசத்திலே இனிதாக எழுந்தருளி யிருப்பவனுமான எம்பெருமானுடைய தாய், பலபல புண்ய தீர்த்தங்களாலும் பெரிய பூஞ்சோலைகளாலும் சூழப்பட்டதான திரு வேங்கட மலையைச் சென்று சேர் மனமே!) 4
பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர்
கோத்தங்காயர் தம் பாடியில் குரவை பிணைந்த வெம் கோவலன்
ஏத்துவார் தம் மனத்துள்ளான் இட வெந்தை மேவிய வெம்பிரான்
தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-4
அன்று, Andru - முற்காலத்தில்
பார்த்தற்கு ஆய், Paarttharkku Aay - அர்ஜூநனுக்காக
பாரதம், Bharatham - பாரத யுத்தத்திலே
கை செய்திட்டு, Kai Seidittu - கையும் அணியும் வகுத்து
வென்ற, Vendra - வெற்றிபெற்ற
பரம் சுடர், Param Sudar - பரஞ்சோதியானவனும்,
அங்கு ஆயர்தம் பாடியில், Angu Aayartham Paadiyil - அங்கே திருவாய்ப் பாடியிலே
குரவை கோத்து பிணைந்த, Kuravai Koththu Pinaindha - ராஸக்ரீடை செய்தருளின
எம் கோவலன், Em Kovalann - நமது கோபாலனும்,
ஏத்துவார்தம், Aethuvaartham - தன்னைத் துதிப்பவர்களுடைய
மனத்து, Manaththu - நெஞ்சிலே
உள்ளான், Ullaan - வஸிப்பவனும்
இடவெந்தை, Idaventhai - திருவிடவெந்தையிலே
மேவிய, Meviya - பொருந்திய
எம்பிரான், Embiran - அஸ்மத் ஸ்வாமியுமானவன் எழுந்தருளியிருக்கப்பெற்றதும்
தீர்த்தம் நீர் தட சோலை சூழ், Theertham Neer Thada Solai Soozh - புண்ய தீர்த்தங்களாலும் பெரிய சோலைகளாலும் சூழப்பெற்றதுமான
1022பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) (வேண்டினார்க்கு வேண்டின படியே தானஞ் செய்கிற அஸுர சக்ரவர்த்தியான மஹாபலியினுடைய யாகபூமியிலே வாமநப்பிரமசாரியாய்ச் சென்று கை நீட்டி மூவடி மண் தாவென்று இரந்தவனும், ஸுக்ரீவனுக்கு நம்பிக்கையுண்டாவதற்காக ஸப்த ஸாலவ்ருக்ஷங்களைத் துளை படுத்தின மஹா பலமுடையவனும், ஆச்ரிதரக்ஷணார்த்தமாகத் திவ்யாயுதங்களைத் தரிப்பதற்கான பல திருக்கைகளையுடையவனும், (அல்லது) கச்சிமாநகரி லுள்ள அஷ்டபுஜகரம் என்கிற திவ்ய தேசத்திலே அஷ்டபுஜனாக ஸேவை ஸாதிப்பவனும், இமயமலையில் திருப்பிரிதியென்னும் திருப்பதியிலே யெழுந் தருளியிருப்பவனும், திருமாலிருஞ்சோலையிலே வந்து நிற்பவனும், முதலை வாயிலே அகப்பட்டுத் துடித்த ஸ்ரீ கஜேந்த்ராழ்வானுடைய துன்பத்தைத் தொலைத்தவனுமான பெருமானுடைய திருவேங்கட மலையைச் சென்று சேர் மனமே!) 5
வண் கையான வுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்துள்ளான் இருஞ்சோலை மேவிய வெம்பிரான்
திண் கைம்மா துயர் தீர்த்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-5
வண் கையான், Van Kaiyaan - விசேஷமாக தானஞ்செய்கிற கையையுடையவனாய்
அவுணர்க்கு நாயகன், Avaunarkku Naayagan - அசுரர்கட்குத் தலைவனான மாவலியினது
வேள்வியில், Velviyil - யாக பூமியிலே
மாணி ஆய் சென்று, Maani Aay Senru - பிரமசாரி வேஷத்துடன் எழுந்தருளி
கையால், Kaiyaal - தனது திருக்கையாலே
மண் இரந்தான், Man Irandhaan - பூமியை யாசித்தவனும்
மராமரம் ஏழும், Maraamaram Ezhum - ஏழு மராமரங்களையும்
எய்த, Eytha - துளைபடுத்தின
வலத்தினான், Valaththinaan - வலிவையுடையவனும்
எண் கையான், En Kaiyaan - அஷ்ட புஜங்களையுடையவனும்
இமயத்து உள்ளான், Imayaththu Ullaan - இமயமலையின் கண் (திருப்பிரிதியிலே) எழுந்தருளியிருப்பவனும்
இரு சோலை, Iru Solai - திருமாலிருஞ் சோலையிலே
மேவிய, Meviya - பொருந்திய
எம்பிரான், Embiran - ஸ்வாமியும்
திண் கை மா, Thin Kai Maa - திடமான துதிக்கையையுடைய கஜேந்திரனது
துயர், Thuyar - துன்பத்தை
தீர்த்தவன், Theerthavan - போக்கினவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற
1023பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) (உலகங்களெல்லாம் பிரளயத்திலே அழுந்திப் போகாதபடி அவற்றைத் தனது திருவயிற்றிலே வைத்து நோக்கி ஓராலந்தளிரிலே பள்ளி கொண்டவனும், சந்திரனுக்கு நேர்ந்த க்ஷயரோகத்தைப் போக்கி யருளினவனும், “அழகியான் தானே அரியுருவன் தானே” என்கிறபடியே அழகிய கோரப்பற்களுடனே மஹாபலசாலியான நரசிங்கமாய்த் திருவவதரித்து, தன் வலிவோடு ஒத்தவலிவுடையனான ஹிரண்யனுடைய மார்விலே நகங்களை யூன்றி அவ்வுடலைப் பிளந்தவனுமான பெருமானுடைய திருவேங்கடத்தைச் சென்று சேர் மனமே!) 6
எண் திசைகளும் ஏழு உலகமும் வாங்கிப் பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆலிலைப் பள்ளி கொண்டவன் பான் மதிக்கிடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள் எயிற்றொடு
திண் திறல் அரியாய் அவன் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-6
பண்டு, Pandhu - முன்னொருகால்,
எண் திசைகளும், En Thisaigalum - எட்டுத் திக்குகளையும்
ஏழ் உலகமும், Ezh Ulagamum - ஸப்த லோகங்களையும்
வாங்கி, Vaangi - (பிரளயம் கொள்ளாதபடி) எடுத்து
பொன் வயிற்றில், Pon Vayittril - (தனது) அழகிய திருவயிற்றிலே
பெய்து, Peidhu - இட்டுவைத்து
ஓர் ஆல் இலை, Oor Aal Ilai - ஒரு ஆலந்தளிரிலே
பள்ளி கொண்டவன், Palli Kondaavan - சயனித்தருளினவனும்
பால் மதிக்கு, Paal Mathikku - வெளுத்த சந்திரனுக்கு
இடர், Idar - க்ஷயரோகமாகிற துக்கத்தை
தீர்த்தவன், Theerthavan - போக்கினவனும்,
ஒள் எயிற்றோடு, Ol Eiyirtoadu - ஒளிபொருந்திய கோரப் பற்களோடு கூடி
திண் திறல் அரி ஆயவன், Thin Thiral Ari Aayavan - மிக்க வலிவுடைய நரசிங்கமூர்த்தியாகத் தோன்றினவனாய்
ஒண் திறல் அவுணன், On Thiral Aavunan - மஹா பலசாலியான இரணியாசுரனுடைய
உரத்து, Urathu - மார்விலே
உகிர், Ukir - (திருக்கை) நகங்களை
வைத்தவன், Vaiththavan - வைத்து அழுத்தினவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற
1024பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) (பிருதிவி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் என்கிற பஞ்சபூத ஸ்வரூபியாக நிற்பவன் என்று சொன்னது-ஸகல லோகங்களும் தானிட்ட வழக்கா யிருக்குமவன் என்றபடி.) 7
பாரு நீர் எரி காற்றினோடு ஆகாசமுமிவை யாயினான்
பேருமாயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகுமிடம்
காரும் வார் பனி நீள் விசும்பிடைச் சோருமா முகில் தோய் தர
சேரும்வார் பொழில் சூழ் எழில் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-7
பாரும் நீர் எரி காற்றினோடு ஆகாசமும் இவை ஆயினான், Paarum Neer Eri Kaatrinodu Aakachamum Ivai Aayinaan - பூமி ஜலம் தேஜஸ் வாயு ஆகாசம் என்கிற பஞ்சபூத ஸ்வரூபியானவனும்
ஆயிரம் பேரும் பேச நின்ற, Aayiram Perum Pesa Nindra - ஸஹஸ்ர நாமங்களாலும் பிரதி பாதிக்கப்படா நிற்பவனும்
பிறப்பு இலி, Pirappu Ili - (கருமமடியாகப்) பிறத்தல் இல்லாதவனுமான எம்பெருமான்
பெருகும் இடம், Perugum Idam - வளருகிற இடமானதும்,-
நீள் விசும்பிடை, Neel Visumbidai - பெரிய ஆகாசத்தினின்றும்
காரும் வார் பனி, Kaarum Vaar Pani - மழைநீரும் மிக்க பனித்துளியும்
சோரும், Soorum - பெய்யப்பெற்றதும்
மாமுகில் தோய்தர, Maamugil Thoythara - (மேலுள்ள) காள மேகங்கள் வந்து படியும்படியாக
சேரும், Serum - பொருத்தமான
வார், Vaar - உயரவோங்கியிருக்கிற
பொழில், Pozhil - சோலைகளாலே
சூழ், Sool - சூழப்பெற்றதும்
எழில், Ezhil - அழகியதுமான
1025பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) (கீழ்ப்பாட்டில் “பாரு நீரெரி காற்றினோடு ஆகாயமுமிவையாயினான்” என்ற முதலடியிற் சொன்ன அர்த்தமே இப்பாட்டிலும் முதலடியிற் சொல்லப்படுகிறது. அம்பரம் – ஆகாயம்; தற்சம வடசொல். பிருதிவி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் என்கிற பஞ்சபூதஸ்வ ரூபியானவனும், நித்யஸூரிகளுக்குத் தலைவனும், அலர்மேல் மங்கைக்குத் துணைவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கப்பெற்ற திருமலையைச் சென்று சேர்மனமே!.) 8
அம்பர மனல் கால் நிலம் சலமாகி நின்ற வமரர் கோன்
வம்புலா மலர் மேல் மலி மட மங்கை தன் கொழுநன் அவன்
கொம்பின்னன விடை மடக் குற மாதர் நீளிதணம் தொறும்
செம்புனமவை காவல் கொள் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-8
அம்பரம் அனல் கால் நிலம் சலம் ஆகி நின்ற, Ambaram Anal Kaal Nilam Salam Aagi Nindra - ஆகாயம் நெருப்பு காற்று பூமி ஜலம் ஆகிய பஞ்சபூதஸ்வ ரூபியும்
அமரர் கோன், Amarar Kon - நித்ய ஸூரிகட்குத் தலைவனும்
வம்பு உலாம் மலர்மேல் மலி மட மங்கை தன், Vambu Ulaam Malarmel Mali Mada Mangai Than - பரிமளம் உலாவுகின்ற தாமரை மலரின் மேலே பொருந்திய பெரிய பிராட்டியாருக்கு
கொழுநன் அவன், Kozhunaan Aavan - நாயகனுமான எம்பிரான் எழுந்தருளியிருக்கப் பெற்றதும்,
நீள் இதணம் தொறும், Neel Idhanam Thorum - உயர்ந்த பரண்கள் தோறும்
கொம்பின் அன்ன இடை, Kombin Anna Idai - வஞ்சிக் கொம்போடு ஒத்த (நுண்ணிய) இடுப்பையுடைய
மட குற மாதர், Mada Kura Maathar - மடமை தங்கிய குறப்பெண்கள்
செம்புனம் அவை காவல் கொள், Sempunam Avai Kaaval Kol - செவ்விய வயல்களைக் காவல் செய்து கொண்டிருக்கப் பெற்றதுமான
1026பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) (இத்திருமொழியில் கீழ்ப்பாசுரங்க ளெல்லாவற்றிலும் ஆழ்வார் தமது திருவுள்ளத்தை நோக்கிக் கூறுதலொன்றே யுள்ளது; பரோபதேசமென்பது இல்லை. இப்பாசுரம் “பேசுமின் திருநாம மெட்டெழுத்தும் ” என்று தொடங்கப்படுகிறது. பேசுமின் என்றால், ‘சொல்லுங்கள்’ ‘ என்று பொருள்படுகையாலே முன்னடிகளிரண்டும் பரோபதேசமென்றும் பின்னடிகளிரண்டும் ஸ்வாத்மோத்போதநமென்றும் கொள்க.) 9
பேசுமின் திருநாமம் எட்டு எழுத்தும் சொல்லி நின்று பின்னரும்
பேசுவார் தம்மை உய்ய வாங்கிப் பிறப்பு அறுக்கும் பிரானிடம்
வாச மா மலர் நாறுவார் பொழில் சூழ் தரும் உலகுக் கெல்லாம்
தேசமாய்த் திகழும் மலைத் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-9
பேசும், Pesum - எல்லாராலும் அநுஸந்திக்கத் தக்கதும்
இன், In - போக்யமுமான
திரு நாமம் எட்டு எழுத்தும், Thiru Naamam Ettu Ezhuthum - திருவஷ்டாக்ஷர மஹா மந்திரத்தை
சொல்லி நின்று, Solli Nindru - அநுஸந்தித்து
பின்னரும், Pinnaarum - மேன்மேலும்
பேசுவார் தம்மை, Pesuvaar Thammai - (அதனையே) அநுஸந்திப்பவர்களை
உய்யவாங்கி, Uyya Vaangi - உஜ்ஜீவிக்கச்செய்து
பிறப்பு அறுக்கும் பிரான் இடம், Pirappu Arukkum Piraan Idam - (அவர்களது) ஸம்ஸாரத்தைத் தொலைக்கு மெம்பெருமான் எழுந்தருளி யிருக்குமிடமானதும்,
வாசம் மா மலர் நாறும், Vaasam Maa Malar Naarum - மணம்மிக்க சிறந்த புஷ்பங்கள் பரிமளிக்கப்பெற்ற
வார் பொழில், Vaar Pozhil - விசாலமான சோலைகளாலே
சூழ்தரும், Sooltharum - சூழப்பட்டதும்,
உலகுக்கு எல்லாம், Ulagukku Ellam - எல்லா வுலகங்களுக்கும்
தேசம் ஆய் திகழும், Desam Aay Thigalum - திலகம்போன்று விளங்குவதுமான
திருவேங்கடம் மலை, Thiruveengadam Malai - திருமலையை
நெஞ்சமே அடை, Nenjamai Adai - மனமே! அடைந்திடு.
1027பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) (யௌவனபருவத்திற்குத் தகுதி யாகச் சிவந்த நிறத்தையுடைய கயல்களானவை ஒன்றோடொன்று களித்து விளையாடப்பெற்ற சுனைகளையுடைய திருவேங்கட மலையிலே நித்யவாஸம் செய் தருள்கின்ற பெருமானைக்குறித்துத் திருமங்கைமன்னன் அழகிய தமிழிலே செவ்விய சொல்லாலே அருளிச்செய்த இச்சொல்மாலையைத் தரித்துச் சொல்லவல்லவர்கள் இவ்விபூதியிலுள்ள வளவும் ராஜாதி ராஜர்களாய் விளங்கி, பின்னை நித்திய விபூதிக்கும் நிர்வாஹகராகப் பெறுவர்களென்று இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.) 10
செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேம்கடத்துறை செல்வனை
மங்கையர் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள்
சங்கை யின்றித் தரித்து உரைக்க வல்லார்கள் தஞ்சமதாகவே
வங்க மா கடல் வையம் காவலராகி வானுல காள்வரே –1-8-10
செம் கயல், Sem Kayal - (இளமையாலே) சிவந்த மீன்கள்
திளைக்கும், Thilaikkum - களித்து விளையாடப் பெற்ற
சுனை, Sunai - நீர் நிலைகளையுடைய
திரு வேங்கடத்து, Thiru Vengadaththu - திருமலையிலே
உறை, Urai - நித்யவாஸம் பண்ணா நின்ற
செல்வனை, Selvanai - திருமாலைக் குறித்து,
மங்கையர் தலைவன் கலிகன்றி, Mangaiyar Thalaivan Kalikanri - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான கலியன் (அருளிச் செய்த)
வண் தமிழ், Van Tamil - அழகிய தமிழினாலாகிய
செம் சொல் மாலைகள், Sem Sol Maalaigal - சிறந்த சொல் மாலையை
சங்கை இன்றி தரித்து உரைக்க வல்லார்கள், Sangai Indri Tharithu Uraikka Vallarhal - ‘இது பலன்தருமோ, தராதோ’ என்கிற ஸந்தேஹமில்லாமல் (விச்வாஸத்துடனே) அப்யஸித்து அநுஸந்திக்க வல்லவர்கள்
வங்கம் மா கடல் வையம், Vangam Maa Kadal Vaiyam - கப்பல்கள் நிறைந்த பெரிய கடலால் சூழப்பட்ட பூமண்டலத்திலுள்ளார்க்கு
தஞ்சம் அது ஆகவே காவலர் ஆகி, Thanjam Adhu Aagave Kaavalar Aagi - புகலிடமாய்க்கொண்டு அவர்களுக்கு ரக்ஷகராகி (இப்படி லீலாவிபூதியை நிர்வஹித்த பின்பு)
வான் உலகு ஆள்வர், Vaan Ulagu Aalvar - பரமபதத்தையும் ஆளப் பெறுவர்கள்.
1028பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) (1.“சேலேய்கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத்தாய் தந்தையுமவரே யினியாவாரே” 2. “தாயாய்த்தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய், நீயாய் நீ நின்றவாறு” என்கிறபடியே உன்னையே ஸகலவிதபந்துக்களுமாகக் கொள்ள வேண்டியிருக்க அது செய்யாதே தாயேயென்றும் தந்தையேயென்றும் தாரமேயென்றும் கிளையேயென்றும் மக்களேயென்றும் ஆபாஸமான புத்ரமித்ராதிகளிடத்திலே ஆசைவைத்து மிகவும் கஷ்டங்கள் பட்டேன்; அவர்களுக்கு என்னை ரக்ஷிக்க சக்தியுண்டாகிலன்றோ அவர்களால் நான் வாழ்வேன்; உண்மையில் அசக்தர்களான அவர்களை நான் வீணே நம்பிக்கெட்டேன் என்றபடி.) 1
தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டு ஒழிந்தேன் உன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம் பொழில் சூழ் விரையார் திருவேம்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கியாள் என்னைக் கொண்டருளே –1-9-1
வேய் ஏய், Vey Aey - மூங்கில்கள் நெருங்கி யிருக்கப் பெற்றதும் (ஆகையினாலே)
பூ பொழில் சூழ், Poo Pozhil Soozh - பூஞ்சோலைகள் நிறைந்திருக்கப் பெற்றதும் (ஆகையினாலே)
விரை ஆர், Virai Aar - பரிமளம் விஞ்சியிருக்கிற
திருவேங்கடவா, Thiruveengadavaa - திருமலையில் எழுந்தருளியுள்ள பெருமானே!
தாயே என்றும் தந்தையே என்றும் தாரமேஎன்றும் கிளையே என்றும் மக்களே என்றும், Thaaye Endrum Thandhaie Endrum Thaarameendrum Kilaie Endrum Makkaie Endrum - தாய் தந்தை மனையாள் பந்துக்கள் பிள்ளைகள் என்கிற ஆபாஸமான சரீர ஸம்பந்திகளையே எப்போதும் வாய்வெருவிக்கொண்டு
நோய் பட்டு ஒழிந்தேன், Noi Pattu Ozhindhen - அநர்த்தப்பட்டுப் போனவனும்
நாயேன், Naayen - நாய் போலே மிக்க நீசனுமான அடியேன்
உன்னை காண்பது ஓர் ஆசையினால், Unnai Kaanbathu Oor Aasaiyin Aal - (அந்த ஆபாஸ பந்துக்களை விட்டு, ப்ராப்த பந்துவான) உன்னை ஸேவிக்க வேணுமென்கிற ஆசையினால்
வந்து அடைந்தேன், Vandhu Adaindhen - உன்னிடம் வந்து சரணம் புகுந்தேன்;
என்னை, Ennai - சரணாகதனான என்னை
நல்கி, Nalki - கிருபை செய்து
ஆள் கொண்டருள், Aal Konda Arul - அடிமை கொண்டருளவேணும்.
1029பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) (ஆபாஸபந்துக்களை உற்ற உறவினராக நினைத்திருந்த குற்றத்தைப் பொறுத்தருளவேணுமென்று சரணம் புகுந்தார் கீழ்ப்பாட்டில்;) 2
மானேய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம் பொழில் சூழ் திருவேம்கட மா மலை என்
ஆனாய்  வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-2
தேன்ஏய், Then Aey - வண்டுகள் நிறைந்த
பூ பொழில் சூழ், Poo Pozhil Soozh - பூஞ்சோலைகளாலே சூழப்பட்ட
திருவேங்கடம் மா மலை, Thiruveengadam Maa Malai - திருவேங்கடமென்னும் சிறந்த மலைகளாலே எழுந்தருளியிரா நின்ற
என் ஆனாய், En Aanai - ஆனை போன்ற எம்பெருமானே!
மா நிலத்து, Maa Nilaththu - இப்பெரிய பூமண்டலத்திலே
மான் ஏய் கண் மடவார் மயக்கில் பட்டு, Maan Aey Kan Madavaar Mayakkil Pattu - மான்போன்ற கண்ணழகுடைய மாதர்களின் கண்மயக்கிலே, அகப்பட்டு,
நாநாவித நரகம் புகும் பாவம், Naanavitha Naragam Pugum Paavam - பலவகைப்பட்ட நரகங்களிலே புகுவதற்குக் காரணமான பாவங்களை
நானே செய்தேன், Naane Seidhen - நானொருவனே செய்து வைத்தேன்;
வந்து அடைந்தேன், Vandhu Adaindhen - உன்பக்கல் வந்து சரணம் புகுந்தேன்;
1030பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) (ஜீவஹிம்சை பண்ணிப் போந்த குற்றங்களையும் பொறுத்தருளவேணுமென்று சரணம் புகுகிறார்.) 3
கொன்றேன் பல்லுயிரைக் குறிக் கோளொன்றி லாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக வுரைத்தறியேன்
குன்றேய் மேக மதிர்  குளிர் மா மலை வேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-3
குன்று ஏய் மேகம் அதிர் குளிர் மா மலை வேங்கடவா, Kundru Aey Megam Adhir Kulir Maa Malai Vengadavaa - மலைபோன்ற மேகங்கள் கோஷிக்குமிடமாய்க் குளிர்ந்ததாய்ச் சிறந்ததான திருவேங்கட மலையி லெழுந்தருளி யிருப்பவனே!
குறிக்கோள் ஒன்று இலாமையினால், Kurikkol Onru Ilamaiyinai - விவேகமென்பது சிறிதுமில்லாமையினாலே
இரந்தார்க்கு, Irandhaarkku - யாசித்தவர்களுக்கு
இனிது ஆக, Inidhu Aaga - மதுரமாக
என்றேனும், Endraenume - ஒருநாளும்
உரைத்து அறியேன், Uraiththu Ariyaen - பதில் சொல்லி அறியேன்;
பல் உயிரை, Pal Uyirai - பல பிராணிகளை
கொன்றேன், Konraen - கொலைசெய்து முடித்தேன்;
அன்றே, Andrae - அந்த க்ஷணத்திலேயே
வந்து அடைந்தேன், Vandhu Adaindhen - உன்னை வந்து பற்றினேன்;
1031பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) (அநுலோமப் பிறவிகளென்றும் பிரதிலோமப் பிறவிகளென்றும் சாஸ்த்ரங்களில் எத்தனை விதமான ஸங்கர ஜன்மங்கள் சொல்லப்பட்டிருக்கின்றனவோ, அத்தனை ஜன்மங்களிலும் பிறப்பதுமிறப்பதும் செய்தாயிற்று.) 4
குலம் தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன்
நலம் தான் ஒன்றும் இலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன்
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறியார் திருவேங்கடவா
அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-4
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறி ஆர் திருவேங்கடவா, Nilam Thoy Neel Mukil Ser Neri Aar Thiruveengadavaa - பூமியிலே படிந்த பெரிய மேகங்கள் நடமாடின வழிகள்  பொருந்தியிரு க்கிற திருமலையிலெழுந்தருளி யுள்ளவனே!
எத்தனை குலமும், Ethanai Kulamum - எல்லாக்குலங்களிலும்
பிறந்து இறந்து எய்த்து ஒழிந்தேன், Pirandhu Irandhu Eyththu Ozhindhaen - பிறப்பதும் இறப்பதுமாக இளைத்துப் போனவனும்
நலம் ஒன்றும் இலேன், Nalam Onrum Ilaen - ஒருவகை நன்மையுமில்லாதவனும்
நல்லது ஓர் அறமும் செய்திலேன், Nalladhu Oru Arahamum Seidhilaen - நல்ல தருமமொன்றும் செய்தறியாதவனும்
அலந்தேன், Alandhaen - பல கஷ்டங்களை அநுபவித்த வனுமான அடியேன்
வந்து அடைந்தேன், Vandhu Adaindhen - உன்னை வந்து பற்றினேன்;
1032பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) (அதிபாதகம், உபபாதகம், மஹாபாதகம் என்னும்படியான பாவங்கள் எப்படிப்பட்டவையாயினும் செய்யும்போது சிறிதும் சலியாமல் செய்துவிட்டேன்.) 5
எப்பாவம் பலவும் இவையே செய்து இளைத்து ஒழிந்தேன்
துப்பா நின்னடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்
செப்பார் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என்
அப்பா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-5
செப்பு ஆர் திண் வரை சூழ், Seppu Aar Thin Varai Soozh - அரணாகப் போரும்படியான திண்ணிய மலைகளாலே சூழப்பட்ட
திரு வேங்கடம் மா மலை, Thiru Vengadam Maa Malai - திருமலையிலே எழுந்தருளியிரா நின்ற
என் அப்பா, En Appaa - என் அப்பனே
துப்பா, Thuppaa - ஸர்வசக்தனே!
எப்பாவம் பலவும் இவையே செய்து, Eppavam Palavum Ivaiye Seidhu - பலவகைப்பட்ட பாவங்களையே பண்ணி
இளைத்தொழிந்தேன், Ilaiththozhindhaen - துக்கப்பட்டவனாய்
நின் அடியே, Nin Adiye - உனது திருவடிகளை
தொடர்ந்து, Thodarnthu - அநுஸரித்து
ஏத்தவும், Aeththavum - துதிக்கவும்
கிற்கின்றிலேன், Kirkkinrilen - சக்தியற்றவனான நான் வந்து அடைந்தேன்-.
1033பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) (சரீரமென்பது பஞ்சபூமயமாயிருக்கும். மண்ணையும் மணலையும் கல்லையும் நீரையும் சேற்றையுங்கொண்டு வீடு கட்டுமா போலே, ப்ருதிவி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் என்கிற பஞ்சபூதங்களைக் கொண்டு இந்த மாம்ஸபிண்டம் நிருமிக்கப்பட்டிராநின்றது.) 6
மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுளாவு மாகாசமுமாம்
புண்ணார் ஆக்கை தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்த்து ஒழிந்தேன்
விண்ணார் நீள் சிகர விரையார் திருவேங்கடவா
அண்ணா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-6
விண் ஆர் நீள் சிகரம், Vin Ar Neel Sikaram - ஆகாசத்தையளாவி உயர்ந்திருக்கிற கொடுமுடிகளையுடையதும்
விரை ஆர், Virai Aar - பரிமளம் மிக்கதுமான
திருவேங்கடவா, Thiruveengadavaa - திருமலையிலே எழுந்தருளியிருக்கிற
அண்ணா, Anna - ஸ்வாமிந்!,
மண்ஆய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம், Manai Neer Eri Kaal Manju Ulaavum Aakachamum Aam - பூமி, ஜலம், அக்நி, வாயு, மேகங்களு லாவுகின்ற ஆகாசம் ஆகிய பஞ்சபூதங்களினாலாகியதும்
புண் ஆர், Pun Ar - புண்கள் நிறைந்ததுமான
ஆக்கை தன்னுள், Aakkai Thannul - சரீரத்திலே (அகப்பட்டுக் கொண்டு)
புலம்பி தளர்ந்து எய்த்து ஒழிந்தேன், Pulambi Thalarndhu Eyththu Ozhindhen - கதறியழுது உடல் மெலிந்து மிகவும் கஷ்டப்பட்டவனான அடியேன்
1034பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) (“கிளரொளியிளமை கெடுவதன் முன்னம்” என்றும்) 7
தெரியேன் பாலகனாய்ப் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேனாயின பின் பிறர்க்கே வுழைத்து ஏழை யானேன்
கரிசேர் பூம் பொழில் சூழ் கனமா மலைவேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-7
கரி சேர், Kari Ser - யானைகள் மிகுந்திருக்கப் பெற்றதும்
பூ பொழில் சூழ், Poo Pozhil Soozh - அழகிய சோலைகளாலே சூழப்பட்டும்
கனம் மா மலை வேங்கடவா, Kanam Maa Malai Vengadavaa - திண்ணியதாயு மிருக்கிற திருமலையிலே வாழ்பவனே!
அரியே, Ariye - ஹரியே!
பாலகன் ஆய், Palagan Aayi - சிறியேனாயிருந்தபோது
தெரியேன், Theriyeen - அறிவில்லாதவனாய்
பல தீமைகள், Pala Theemaigal - பல பாவங்களை
செய்தும் இட்டேன், Seithum Ittaein - செய்து தீர்த்தேன்;
பெரியேன் ஆயின பின், Periyeen Aayin Pin - யௌவன பருவ மடைந்த பின்பு
பிறர்க்கே உழைத்து, Pirarkke Uzhaiththu - விஷயாந்தர பரனாய் ச்ரமப் பட்டு
ஏழை ஆனேன், Ezhaai Aanen - சதிர்கெட்டுப்போனேன்;
1035பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) (நோற்கையாவது – ஸங்கல்பிக்கை; பல பிறவிகளை ஸங்கல்பிக்கையாவது – பலபிறவிகள் உண்டாகும்படி கருமங்களைச் செய்தலாம்.) 8
நோற்றேன் பல் பிறவி உன்னைக் காண்பதோர் ஆசையினால்
ஏற்றேன் இப் பிறப்பே இடர் உற்றனன் எம்பெருமான்
கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா
ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-8
கோல் தேன் பாய்ந்து ஒழுகும், Kol Then Paayndhu Ozhugum - கோல்களின்றும் தேன் இழிந்து வெள்ளமிடா நின்ற
குளிர் சோலை சூழ் வேங்கடவா, Kulir Solai Soozh Vengadavaa - குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருமலையில் வாழ்பவனே!
எம்பெருமான், Emperumaan - அஸ்மத் ஸ்வாமியே!,
பல் பிறவி நோற்றேன், Pal Piravi Nootren - எனக்குப் பல பிறவிகள் உண்டாகும்படி காரியம் செய்து வைத்தேன்.
உன்னை காண்பது ஓர் ஆசையினால், Unnai Kaanbathu Oor Aasaiyin Aal - உன்னை ஸேவிக்கவேணுமென்று ஒரு காதல் கிளர்ந்த படியினாலே
இப்பிறப்பே ஏற்றேன், Ippirappe Aetren - இந்த ஜந்மத்திலே உனக்கு அன்பனாக ஏற்பட்டேன்.
இடர்உற்றனன், Idarutranan - (இன்னமும் நேரக்கூடிய பிறவிகளை நினைத்து) துக்கப்படா நின்றேன்;
1036பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) (உன்னுடைய ஸம்பந்தத்தை               அறுத்துக்கொண்டு வெகுதூரம் ஓடிப்போன வெனக்கு ஓரிடத்திலும் ஒருவகையான ஆதாரமுமில்லை.) 9
பற்றேல் ஒன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன்
மற்றேல் ஓன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா
அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-9
மாயனே, Maayaney - ஆச்சரியமான குணங்களை யுடையவனே!
எங்கள் மாதவனே, Engal Maadhavane - எங்களுக்குப் புருஷகாரமான பிராட்டிக்கு வல்லபனே!
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலம் சுனை வேங்கடவா, Kal Then Paayndhu Ozhugum Kamalam Sunai Vengadavaa - மலை முழைஞ்சுகளின்றும் தேன் பெருகி வெள்ளமிடா நிற்பதும் தாமரைச் சுனைகளை யுடையதுமான திரு மலையிலே வாழ்பவனே!
பற்று ஒன்றும் இலேன், Patru Ondrum Ileen - ஒருவிதமான ஆகாரமும் அற்றவனாய்
பாவமே செய்து பாவி ஆனேன், Paavame Seidhu Paavi Aaneen - பாவங்களையே செய்து பாபிஷ்டனாய்
மற்று ஒன்று அறியேன், Mattru Ondru Ariyeen - ஒரு உபாயமுமறியாதவனான அடியேன்
அற்றேன், Atraen - உனக்கே அற்றுத் தீர்ந்தவனாய்க் கொண்டு
1037பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) (“கண்ணாவானென்றும் மண்ணோர் விண்ணோர்க்குத், தண்ணார் வேங்கடவிண்ணோர் வெற்பனே” என்றபடி) 10
கண்ணா யேழ் உலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்
பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே –1-9-10
ஏழ் உலகுக்கு, Ezhu Ulagukku - எல்லா வுலகங்களுக்கும்
கண் ஆய், Kan Aay - கண் போன்றவனும்
உயிர் ஆய, Uyir Aay - உயிர் போன்றவனும்
எம், Em - எமக்காக
கார் வண்ணணை, Kaar Vannanaik - மேகம் போன்ற திரு நிறத்தையுடையவனும்
விண்ணோர் தாம் பரவும்பொழில் வேங்கடம், Vinnor Thaam Paravumpozhil Vengadam - நித்ய ஸூரிகளும் வந்து துதிக்கப்பெற்ற, சோலை சூழ்ந்த திருமலையிலே
வேதியதனை, Vediyathanai - வேத ப்ரதிபாத்யனாய் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமானைக் குறித்து
திண் ஆர் மாடங்கள் சூழ் திரு மங்கையர்கோன் கலியன், Thin Ar Maadangal Soozh Thiru Mangaiyarkon Kalyan - திண்ணிய மாடங்கள் சூழ்ந்த திருமங்கையி லுள்ளார்க்குத் தலைவரான கலியன் (அருளிச் செய்த)
பண் ஆர் பாடல் பத்தும், Pan Ar Paadal Paththum - பண்ணோடு கூடிய இப்பத்துப் பாசுரங்களையும்
பயில்வார்க்கு, Payilvaarakku - ஓதுமவர்களுக்கு
பாவங்கள் இல்லை, Paavangal Illai - பிரதிபந்தங்களெல்லாம் தொலைந்து போம்.
1038பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) (மிகப் பெரிய கடலையே அகழாகவுடைத்தான இலங்கைக்குத் தலைவனான இராவணனுடைய திண்மை பொருந்திய சரீரம் இருபிளவாகப் பிளவுறும்படியாக அவன் மீது அம்புகளைப் பிரயோகித்தவனே! என்று ஸ்ரீராமபிரானாக விளிக்கின்றார் திருவேங்கடமுடையானை;) 1
கண்ணார் கடல் சூழ் இலங்கைக் கிறைவன் தன்
திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய
அண்ணா வடியேன் இடரைக் களையாயே –1-10-1
கண் ஆர் கடல் சூழ், Kan Aar Kadal Soozh - விசாலமான கடலாலே சூழப்பட்ட
இலங்ககைக்கு இறைவன் தன், Ilankakaikku Iraivan Than - லங்காபுரிக்கு தலைவனான இராவணனுடைய
திண்ஆகம் பிளக்க, Thinagham Pilakka - திண்ணிய சரீரம் பிளந்துபோம் படியாக
சரம், Saram - அம்புகளை
செல உய்த்தாய், Sela Uyththai - செலுத்தினவனே!
விண்ணோர் தொழும், Vinnor Thozhum - (பிரமன் முதலிய) தேவர்கள் வந்து ஸேவிக்கப் பெற்ற
வேங்கடம் மாமலை, Vengadam Mamalai - திருமலையிலே
மேய அண்ணா, Meya Annan - எழுந்தருளி யிருக்கிற பெருமானே!
அடியேன் இடரை களையாய், Adiyen Idarai Kalaiyai - என் துன்பங்களை நீக்கியருள வேணும்.
1039பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) (புற்றானது என்றைக்கும் துஷ்ட ஸர்ப்பங்கள் மாறாதே உறையுமிடமாக இருப்பதுபோல இலங்கையானது இராவணனுக்கு முன்பும் குடியிருந்து வந்த மாலி முதலானவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்ததாதலால் அவர்களையும் தொலைத்தபடி சொல்லுகிறது இப்பாட்டில்.) 2
இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர்
குலம் கெட்டவர் மாளக் கொடிப் புள் திரித்தாய்
விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய
அலங்கல் துளப முடியாய் அருளாயே –1-10-2
அன்று, Andru - முற்காலத்தில்
இலங்கை பதிக்கு, Ilankai Pathikku - லங்காபுரிக்கு
இறை ஆய, Irai Aaya - அரசர்களாயிருந்த
அரக்கரவர், Arakkaravar - (மாலிமுதலிய) ராக்ஷஸர்கள்
குலம்கெட்டு மாள, Kulamkettu Maala - கும்பலோடே சிதறியோடி முடியும்படியாக
கொடி, Kodi - (தனக்கு) த்வஜமான
புள், Pul - பெரிய திருவடியை
திரித்தாய், Thiriththai - ஸஞ்சரிப்பித்தவனே!,
விலங்கல் குடுமி, Vilankal Kudumi - (மேலே ஸஞ்சரீக்கிற சந்திர ஸூர்யர்கள்) விலங்கிப் போகவேண்டும்படியான (உயர்த்திபொருந்திய) சிகரத்தையுடைய
திருவேங்கடம், Thiruveengadam - திருமலையிலே
மேய, Meya - மேவியிருப்பவனாய்
துளபம், Thulabam - திருத்துழாயினாலாகிய
அலங்கல், Alangal - மாலையை
முடியாய், Mudiyaai - திருமுடியிலே அணிந்துள்ளவனே!
அருளாய், Arulai - (அடியேன் மீது) க்ருபை பண்ணியருள வேணும்.
1040பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) (மற்ற பேர்களை ரக்ஷிக்க நான் சக்தனாயினும் பாவிகளில் தலைவரான உம்மை ரக்ஷித்தல் எனக்கு எளிதன்றே; இஃது அருமையான காரியமாயிற்றே!’ என்று எம்பெருமான் திருவுள்ளமாக;) 3
நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏரால மிளந்தளிர் மேல் துயில் எந்தாய்
சீரார் திருவேங்கட மா மலை மேய
ஆராவமுதே அடியேற்கு அருளாயே –1-10-3
நீர் ஆர் கடலும், Neer Aar Kadhalum - நீர் நிரம்பியிருக்கிற கடலையும்
நிலனும், Nilanum - பூமியையும்
முழுது, Muzhuthu - மற்றுமுள்ள எல்லாவற்றையும் (பிரளயம் கொள்ளாதபடி)
உண்டு, Undu - அமுது செய்து
ஏர், Aer - அழகியதும்
இள, Ila - இளையதுமான
ஆலந்தளிர் மேல், Aalanthazhirk Mel - ஆலந்தளிரின் மேலே
துயில், Thuyil - திருக்கண்வளர்ந்தருளின
எந்தாய், Endhai - ஸ்வாமியே!,
சீர் ஆர், Seer Aar - சிறப்புப் பொருந்திய
திருவேங்கடம் மா மலை மேய, Thiruveengadam Maa Malai Maeya - திருமலையிலே எழுந்தருளியிருக்கிற
ஆரா அமுதே, Aaraa Amudhe - ஆராவமுதமான எம்பெருமானே!
அடியேற்கு அருளாய், Adiyeerkku Arulai - அடியேன் மீது கிருபை செய்தருளவேணும்.
1041பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) (திருமலையிலெழுந்தருளியிருக்கிற இருப்பில் பரத்வ ஸௌலப்யங்களிரண்டும் ஒருங்கே விளங்குகின்றன வென்ன வேண்டி இரண்டுக்கும் ப்ரகாசகமான இரண்டு சேஷ்டிதங்களை முன்னடிகளிற் கூறுகின்றார்.) 4
உண்டாய் உறி மேல் நறு நெய்யமுதாக
கொண்டாய் குறளாய் நிலமீரடியாலே
விண டோய் சிகரத் திருவேங்கடம் மேய
அண்டா வடியேனுக்கு அருள் புரியாயே –1-10-4
உறி மேல், Uri Mel - உறிகளின் மேல் வைக்கப்பட்டிருந்த
நறு நெய், Naru Ney - நல்ல நெய்யை
அமுது ஆக உண்டாய், Amuthu Aaga Undaai - அமுதமாகக் கொண்டு புஜித்தவனே!
குறள் ஆய், Kural Aai - வாமநனாகி
நிலம், Nilam - பூமியை
ஈர் அடியாலே, Eer Adiyaale - இரண்டடியாலே
கொண்டாய், Kondai - அளந்து கொண்டவனே!
விண் தோய் சிகரம், Vin Thoy Sikaram - பரமபதம் வரையில் சென்று ஓங்கின சிகரத்தையுடைய
திருவேங்கடம் மேய, Thiruveengadam Maeya - திருமலையிலே நித்யவாஸம் பண்ணுகிற
அண்டா, Andaa - தேவாதி தேவனே!
அடியேனுக்கு அருள் புரியாய், Adiyenukku Arul Puriyai - அடியேன் மீது கிருபை செய்தருளவேணும்.
1042பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) (பக்தர்களின் சத்துருக்களிடத்தில் சீற்றமும், பக்தர்களிடத்தில் வாத்ஸல்யமும் விளங்கத் திருமலையிலே ஸேவைஸாதிக்கிறபடியைப் பேசுகிறார். தூணினுள்ளே நரசிங்கமாய்த் தோன்றி இரணியனுடலைப் பிளந்தெறிந்து சிறுக்கனான ப்ரஹ்லாதாழ்வானுக்கு அருள் செய்தாப்போலே அடியேன் மீதும் அருள் செய்யவேணு மென்கிறார்.) 5
தூணாய தனூடு அரியாய் வந்து தோன்றி
பேணா வவுணனுடலம் பிளந்திட்டாய்
சேணார் திருவேங்கட மா மலை மேய
கோணா கணை யாய் குறிக்கொள் எனை நீயே –1-10-5
தூணாயதனூடு, Thoonayathanoodu - வெறும் தூணாகவேயிருக் கிறவதற்குள்ளே
அரி ஆய், Ari Aai - நரஸிம்ஹமாகி
வந்து தோன்றி, Vandhu Thondri - திருவவதரித்து,
பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய், Pena Avunan Udalam Pilandittai - (தன்னை) மதியாத ஹிரண்ய கசிபுவின் சரீரத்தைக் கிழித்துப் போகட்டவனே!
சேண் ஆர், Seen Aar - மிக்க உயர்த்தி பொருந்திய
திரு வேங்கடம் மா மலை மேய, Thiru Vengadam Maa Malai Maeya - திருமலையிலே எழுந்தருளியிருப்பவனும்
கோள் நாகம் அணைபாய், Kol Naagam Anaipai - மிடுக்கையுடைய திருவனந்தாழ்வானைப் பள்ளியாகவுடையனுமான பெருமானே!
எனை, Enai - அடியேனை
நீயே குறிக்கொள், Neeye Kurikkol - நீயாகவே திருவுள்ளம் பற்றியருளவேணும்.
1043பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) (கீழ் ஐந்து பாட்டும் பிரார்த்தனையாய்ச் சென்றது; இனி மேற்பாட்டுக்கள் பிரார்த்தனை ஒருவாறு தலைக்கட்டினபடியைச் சொல்வதாகச் செல்லுகிறது.) 6
மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி
தன்னாக்கித் தன்னினருள் செய்யும் தன்னை
மின்னார் முகில்சேர் திருவேங்கடம் மேய
என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே –1-10-6
மன்னா, Mannaa - நிலைத்திராத
இ மனிசப் பிறவியை, I Manisap Piraviyai - இந்த மநுஷ்யஜன்மத்தை
நீக்கி, Neekki - போக்கடித்து
தன் ஆக்கி, Than Aakki - தனக்கு ஆளாக்கிக்கொண்டு
தன் இன் அருள் செய்யும், Than In Arul Seyyum - தனது பரமகிருபையைச் செய்கின்ற
தலைவன், Thalaivan - ஸ்வாமியும்,
மின் ஆர் முகில் சேர், Min Ar Mukil Ser - மின்னலோடுகூடிய மேகங்கள் வந்து சேரப்பெற்ற
திருவேங்கடம், Thiruveengadam - திருமலையிலே
மேய, Meya - எழுந்தருளியிருக்கிற
என் ஆனை, En Aanai - எனது ஆனை போன்றவனுமான
என் அப்பன், En Appan - எம்பெருமான்
என் நெஞ்சில் உளானே, En Nenchil Ulaaney - எனது நெஞ்சிலே எழுந்தருளி விட்டான்
1044பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) (அண்ணா வடியே னிடரைக் களையாயே” என்று முதற்பாட்டிலே தாம் பிரார்த்தித்தபடியே தம்முடைய இடர்களைக் களைந்து அருளினது, முன்பு நப்பின்னைப்பிராட்டியின் கலவிக்கு விரோதிகளாயிருந்த ஏழு ரிஷபங்களை வலியடக்கினதுபோலே யிருக்கையாலே அதனைப்பேசி இனியராகிறார்.) 7
மானேய் மட நோக்கி திறத்து எதிர் வந்த
ஆனேழ் விடை செற்ற அணி வரைத் தோளா
தேனே திருவேங்கட மா மலை மேய
கோனே என் மனம் குடி கொண்டு இருந்தாயே –1-10-7
மான் ஏய் மட நோக்கி திறத்து, Maan Aey Mad Nookki Thirathu - மானினுடைய நோக்குப் போன்ற அழகிய நோக்குடையளான நப்பின்னைப் பிராட்டிக்காக,
எதிர் வந்த, Edhir Vanda - செருக்குடன் வந்த
ஆன் விடை ஏழ் செற்ற, Aan Vidai Aezh Settra - ஏழு ரிஷபங்களைக் கொன்ற
அணி வரை தோளா, Ani Varai Thoalaa - அழகிய மலைபோன்ற திருத்தோள்களை யுடையவனே
தேனே, Thene - தேன்போல் போக்யனானவனே!
திருவேங்கடம் மா மலை மேய கோனே, Thiruveengadam Maa Malai Maeya Kone - திருமலையிலே எழுந்தருளியிருக்கிற ஸ்வாமியே!
என் மனம், En Manam - என்னுடைய நெஞ்சை
குடிகொண்டு, Kudikondru - இருப்பிடமாகக்கொண்டு
இருந்தாய், Irundhai - நிலைபெற்றிரா நின்றாய்.
1045பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) (இப்படி என்னெஞ்சிலே நப்பின்னைப்பிராட்டியோடுங்கூட வந்து புகுந்தானானபின்பு இவன் திருவடிகளிலே கைங்கரியம் பண்ணுகையொழிய வேறொன்றும் நானறியேன் என்கிறார்.) 8
சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற
மாயன் மணி வாள் ஒளி வெண்டரளங்கள்
வேய் விண்டுதிர் வேங்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே –1-10-8
சேயன், Seyan - (பக்தியற்றவர்களுக்கு) எட்டாதவனும்
அணியன், Aniyan - (பக்தர்களுக்குக்) கையாளாயிருப்பவனும்
என சிந்தையுள் நின்ற மாயன், En Sinthaiyul Nindra Maayan - என் நெஞ்சினுள்ளே வந்து நின்ற ஆச்சரியபூதனும்,
வேய் விண்டு, Vey Vindu - மூங்கில்களானவை பிளவுபட்டு
ஒளி வெண்தரளங்கள், Oli Ventharalangkal - பிரகாசமுள்ள வெளுத்த முத்துக்களையும்
வாள்மணி, Vaalmani - ஒளியுள்ள ரத்னங்களையும்
உதிர், Uthir - உதிர்க்குமிடமான
வேங்கடம் மா மலை மேய, Vengadam Maa Malai Meya - திருமலையில் எழுந்தருளியிருப்பவனுமான
ஆயன், Aayan - ஸ்ரீக்ருஷ்ணனுடைய
அடி அல்லது, Adi Allathu - திருவடிகளையொழிய
மற்று, Mattru - வேறொன்றையும்
அறியேன், Ariyeen - அறியமாட்டேன்.
1046பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) (தாம் பெற்ற பேற்றை வாயாரச் சொல்லி மகிழ்கிறார். “வந்து என் மனம் புகுந்து மன்னிநின்றாய்” என்று ஒரு வாக்கியமாகவே சொல்லிவிடலாமாயினும் தம்முடைய ஆநந்தம் நன்கு விளங்குமாறு ”வந்தாய் – என் மனம் புகுந்தாய் – மன்னிநின்றாய் ” என்று தனித்தனி வாக்கியமாக நீட்டி நீட்டி யுரைக்கின்றார்.) 9
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ
சிந்தா மணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே –1-10-9
நந்தாத, Nandhaadha - ஒருகாலும் அணையாத
கொழு சுடரே, Kozhu Sudare - சிறந்த தேஜஸ்ஸாயிருப்பவனே!
எங்கள் நம்பீ, Engal Nambi - எங்களுடைய குறையை நிரப்பவல்ல பூர்ணனே!
சிந்தாமணியே, Sindhamaniye - நினைத்த மாத்திரத்தில் எல்லாவற்றையும் கொடுத்தருள வல்லவனே!
திருவேங்கடம் மேய எந்தாய், Thiruveengadam Meya Enthaai - திருமலையிலெழுந்தருளியிருக்கும் பெருமானே!
வந்தாய், Vandhaai - என்பக்கல் வந்தாய்;
என் மனம் புகுந்தாய், En Manam Pugundhaai - எனது நெஞ்சினுள்ளே புகுந்தாய்;
மன்னி நின்றாய், Manni Nindraai - உள்ளேயே பொருந்தி நின்றாய்;
இனி, Ini - இனிமேல்
யான், Yaan - அடியேன்
உன்னை என்றும் விடேன், Unnai Endrum Vidaen - உன்னை ஒருநாளும் விடமாட்டேன்.
1047பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) (திருமலையிலே வில்லுங்கையுமான வேடர்கள் நிறைந்து கிடப்பது வருணிப்பதன் கருத்து யாதெனில்; ஆழ்வார் மங்களாசாஸநபரராகையாலே தம்மைப்போன்ற மங்களாசாஸநபரர்கள் திருமலையிலே பலருளர் என்றபடி.) 10
வில்லார் மலி வேங்கட மா மலை மேய
மல்லார் திரடோள் மணி வண்ணன் அம்மானை
கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை
வல்லார் வர் வானவர் ஆகுவர் தாமே –1-10-10
வில்லார் மலி, Villaar Mali - வேடர்கள் நிறைந்திருக்கப்பெற்ற
வேங்கடம் மாமலை, Vengadam Mamalai - திருவேங்கடமென்னும் சிறந்த மலையிலே
மேய, Meya - எழுந்தருளியிருப்பவனும்
மல் ஆர் திரள் தோள், Mal Aar Thiral Thol - மிடுக்குமிக்குத் திரண்ட திருத்தோள்களை யுடையவனும்
மணிவண்ணன், Manivannan - நீலமணி போன்ற திருநிறத்தையுடையவனுமான
அம்மானை, Ammanai - எம்பெருமானைக் குறித்து,
கல் ஆர் திரள் தோள், Kal Aar Thiral Thol - மலைபோன்ற திரண்ட தோள்களையுடையரான
கலியன், Kaliyan - திருமங்கைமன்னன்
சொன்ன, Sonna - அருளிச்செய்த
மாலை, Maalai - இச்சொல்மாலையை
வல்லாரவர் தாம், Vallaaravar Thaam - ஓதவல்லவர்கள்
வானவர் ஆகுவர், Vaanavar Aaguvar - நித்யஸூரிகளாகப் பெறுவர்கள்.