| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1021 | பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) (பாண்டவர்களுக்காகப் பாரதயுத்தம் நடத்தி வெற்றி பெற்றவனும், இப்படி ஆச்ரிதர்களுக்காகக் காரியஞ் செய்யப்பெற்றதனால் திருமேனி மிக விளங்கப் பெற்றவனும், இடைச்சிகளோடு ராஸக்ரீடை யென்கிற குரவைக்கூத்து ஆடினவனும், தன்னைத் துதிப்பவர்களின் நெஞ்சை விட்டுப் பிரியாதே யிருப்பவனும், இடவெந்தை யென்கிற திவ்யதேசத்திலே இனிதாக எழுந்தருளி யிருப்பவனுமான எம்பெருமானுடைய தாய், பலபல புண்ய தீர்த்தங்களாலும் பெரிய பூஞ்சோலைகளாலும் சூழப்பட்டதான திரு வேங்கட மலையைச் சென்று சேர் மனமே!) 4 | பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர் கோத்தங்காயர் தம் பாடியில் குரவை பிணைந்த வெம் கோவலன் ஏத்துவார் தம் மனத்துள்ளான் இட வெந்தை மேவிய வெம்பிரான் தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-4 | அன்று, Andru - முற்காலத்தில் பார்த்தற்கு ஆய், Paarttharkku Aay - அர்ஜூநனுக்காக பாரதம், Bharatham - பாரத யுத்தத்திலே கை செய்திட்டு, Kai Seidittu - கையும் அணியும் வகுத்து வென்ற, Vendra - வெற்றிபெற்ற பரம் சுடர், Param Sudar - பரஞ்சோதியானவனும், அங்கு ஆயர்தம் பாடியில், Angu Aayartham Paadiyil - அங்கே திருவாய்ப் பாடியிலே குரவை கோத்து பிணைந்த, Kuravai Koththu Pinaindha - ராஸக்ரீடை செய்தருளின எம் கோவலன், Em Kovalann - நமது கோபாலனும், ஏத்துவார்தம், Aethuvaartham - தன்னைத் துதிப்பவர்களுடைய மனத்து, Manaththu - நெஞ்சிலே உள்ளான், Ullaan - வஸிப்பவனும் இடவெந்தை, Idaventhai - திருவிடவெந்தையிலே மேவிய, Meviya - பொருந்திய எம்பிரான், Embiran - அஸ்மத் ஸ்வாமியுமானவன் எழுந்தருளியிருக்கப்பெற்றதும் தீர்த்தம் நீர் தட சோலை சூழ், Theertham Neer Thada Solai Soozh - புண்ய தீர்த்தங்களாலும் பெரிய சோலைகளாலும் சூழப்பெற்றதுமான |