| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1038 | பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) (மிகப் பெரிய கடலையே அகழாகவுடைத்தான இலங்கைக்குத் தலைவனான இராவணனுடைய திண்மை பொருந்திய சரீரம் இருபிளவாகப் பிளவுறும்படியாக அவன் மீது அம்புகளைப் பிரயோகித்தவனே! என்று ஸ்ரீராமபிரானாக விளிக்கின்றார் திருவேங்கடமுடையானை;) 1 | கண்ணார் கடல் சூழ் இலங்கைக் கிறைவன் தன் திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய் விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய அண்ணா வடியேன் இடரைக் களையாயே –1-10-1 | கண் ஆர் கடல் சூழ், Kan Aar Kadal Soozh - விசாலமான கடலாலே சூழப்பட்ட இலங்ககைக்கு இறைவன் தன், Ilankakaikku Iraivan Than - லங்காபுரிக்கு தலைவனான இராவணனுடைய திண்ஆகம் பிளக்க, Thinagham Pilakka - திண்ணிய சரீரம் பிளந்துபோம் படியாக சரம், Saram - அம்புகளை செல உய்த்தாய், Sela Uyththai - செலுத்தினவனே! விண்ணோர் தொழும், Vinnor Thozhum - (பிரமன் முதலிய) தேவர்கள் வந்து ஸேவிக்கப் பெற்ற வேங்கடம் மாமலை, Vengadam Mamalai - திருமலையிலே மேய அண்ணா, Meya Annan - எழுந்தருளி யிருக்கிற பெருமானே! அடியேன் இடரை களையாய், Adiyen Idarai Kalaiyai - என் துன்பங்களை நீக்கியருள வேணும். |