| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1034 | பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) (“கிளரொளியிளமை கெடுவதன் முன்னம்” என்றும்) 7 | தெரியேன் பாலகனாய்ப் பல தீமைகள் செய்துமிட்டேன் பெரியேனாயின பின் பிறர்க்கே வுழைத்து ஏழை யானேன் கரிசேர் பூம் பொழில் சூழ் கனமா மலைவேங்கடவா அரியே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-7 | கரி சேர், Kari Ser - யானைகள் மிகுந்திருக்கப் பெற்றதும் பூ பொழில் சூழ், Poo Pozhil Soozh - அழகிய சோலைகளாலே சூழப்பட்டும் கனம் மா மலை வேங்கடவா, Kanam Maa Malai Vengadavaa - திண்ணியதாயு மிருக்கிற திருமலையிலே வாழ்பவனே! அரியே, Ariye - ஹரியே! பாலகன் ஆய், Palagan Aayi - சிறியேனாயிருந்தபோது தெரியேன், Theriyeen - அறிவில்லாதவனாய் பல தீமைகள், Pala Theemaigal - பல பாவங்களை செய்தும் இட்டேன், Seithum Ittaein - செய்து தீர்த்தேன்; பெரியேன் ஆயின பின், Periyeen Aayin Pin - யௌவன பருவ மடைந்த பின்பு பிறர்க்கே உழைத்து, Pirarkke Uzhaiththu - விஷயாந்தர பரனாய் ச்ரமப் பட்டு ஏழை ஆனேன், Ezhaai Aanen - சதிர்கெட்டுப்போனேன்; |