| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1013 | பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) (சீற்றத்தாலே அக்நிஜ்வாலைபோலே ஜ்வலிக்கிற சிவந்த கண்ணையும் ஒளிவிடாநின்ற பெரிய வாயையும் கோரப்பற்களையும் கண்டு “அப்பப்ப! இதென்ன உரு!” என்று பயப்பட்டு தேவர்கள் அங்கு மிங்கும் கால் தடுமாறிச் சிதறி ஓடும்படியாக நரசிங்கவுருக்கொண்டு எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேழ்குன்றம்.) 6 | எரிந்த பைங்கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடி தெவ்வுரு வென்று இரிந்து வானோர் கலங்கியோடே இருந்த வம்மானதிடம் நெரிந்த வேயின் முழை யுள் நின்று நீண் எரி வா யுழுவை திரிந்த வானைச் சுவடு பார்க்கும் சிங்க வேள் குன்றமே –1-7-6 | எரிந்த, Erintha - (சீற்றத்தாலே) ஜ்வலிக்கின்ற பை கண், Pai Kan - பசுமைதங்கிய கண்களோடும் இலங்கு பேழ்வாய் எயிற்றொடு, Ilangu Pezhvai Eiyir Thodu - விளங்கா நின்ற பெரிய வாயில் பற்களோடும் கூடியிருக்கிற இது, Idhu - இந்த நரசிங்கத் திருக்கோலமானது எவ்வுரு என்று, Evuru Endru - என்ன பயங்கரமான ரூபம்! என்று அஞ்சி வானோர், Vaanor - தேவர்கள் இரிந்து கலங்கி ஓட, Irinthu Kalangi Oda - அங்குமிங்கும் சிதறிக் கால் தடுமாறி ஓடும்படியாக இருந்த, Irundha - எழுந்தருளியிருந்த அம்மானது இடம், Ammaanathu Idam - ஸர்வேசரனுடைய இடமாவது:- உழுவை, Uzhuvai - புலிகளானவை நெரிந்த வேயின் முழையுள் நின்று, Nerindha Veyin Muzhaiyul Nindru - நெருக்கமான மூங்கிற் புதர்களினின்றும் நீள் நெறி வாய், Neel Nerai Vaai - பெரிய வழியிலே (வந்து) திரிந்த ஆனை சுவடு பார்க்கும், Thirindha Aanai Suvadu Paarkkum - காட்டில் திரிகின்ற யானைகள் போன அடையாளத்தைஆராய்ந்து பார்க்குமிடமான |