| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 988 | பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) (கலையுங்கரியும்.) நெஞ்சே! நீ ஸ்ரீஸாளக்ராமமென்னும் திவ்ய தேசத்தை அடைந்திடு. 1 | அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் –1-5-1 | கலையும் கரியும் பரிமாவும், Kalaiyum Kariyum Parimavum - மான்களும் யானைகளும் குதிரைகளுமாகிய மிருகங்கள் திரியும் கானம் கடந்துபோய், Thiriyum Kaanam Kadandupoy - திரியுமிடமான காட்டைத் தாண்டிச்சென்று சிலையும் கணையும் துணை ஆக, Silaiyum Kanaiyum Thunai Aaga - வில்லும் அம்பும் துணையாகக்கொண்டு வென்றி செருகளத்து சென்றான், Vendri Serugalathu Senraan - (தனக்கு) வெற்றியை விளைக்கவல்ல போர்க்களத்திலே எழுந்தருளினவனும், அலை நீர், Alai Neer - அலைக்கின்ற நீரையுடைய கடலிலே மலை கொண்டு, Malai Kondu - மலைகளாலே அணை கட்டி, Anai Katti - ஸேது கட்டி மதிள் நீர் இலங்கை, Mathil Neer Ilangai - மதிலையும் ஸமுத்ரத்தையும் காப்பாக உடைத்தான இலங்கையிலுள்ள வாள் அரக்கர் தலைவன், Vaal Arakkar Thalaivan - வாளை ஆயதமாகக் கொண்ட இராவணனுடைய பத்து தலை, Paththu Thalai - பத்துத்தலைகளையும் அறுத்து உகந்தான், Aruththu Ugandhaan - அறுத்துத்தள்ளி (ஆச்ரித விரோதி தொலைந்தானென்று) திருவுள்ள முகந்தவனுமான எம்பெருமானுடைய திவ்ய தேசமாகிய சாளக்கிராமம், Saalakkiraamam - ஸ்ரீஸாளக்ராமத்தை நெஞ்சே அடை, Nenjee Adai - மனமே!, சென்று சேர். |