| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1045 | பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) (இப்படி என்னெஞ்சிலே நப்பின்னைப்பிராட்டியோடுங்கூட வந்து புகுந்தானானபின்பு இவன் திருவடிகளிலே கைங்கரியம் பண்ணுகையொழிய வேறொன்றும் நானறியேன் என்கிறார்.) 8 | சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற மாயன் மணி வாள் ஒளி வெண்டரளங்கள் வேய் விண்டுதிர் வேங்கட மா மலை மேய ஆயன் அடி அல்லது மற்று அறியேனே –1-10-8 | சேயன், Seyan - (பக்தியற்றவர்களுக்கு) எட்டாதவனும் அணியன், Aniyan - (பக்தர்களுக்குக்) கையாளாயிருப்பவனும் என சிந்தையுள் நின்ற மாயன், En Sinthaiyul Nindra Maayan - என் நெஞ்சினுள்ளே வந்து நின்ற ஆச்சரியபூதனும், வேய் விண்டு, Vey Vindu - மூங்கில்களானவை பிளவுபட்டு ஒளி வெண்தரளங்கள், Oli Ventharalangkal - பிரகாசமுள்ள வெளுத்த முத்துக்களையும் வாள்மணி, Vaalmani - ஒளியுள்ள ரத்னங்களையும் உதிர், Uthir - உதிர்க்குமிடமான வேங்கடம் மா மலை மேய, Vengadam Maa Malai Meya - திருமலையில் எழுந்தருளியிருப்பவனுமான ஆயன், Aayan - ஸ்ரீக்ருஷ்ணனுடைய அடி அல்லது, Adi Allathu - திருவடிகளையொழிய மற்று, Mattru - வேறொன்றையும் அறியேன், Ariyeen - அறியமாட்டேன். |