| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1046 | பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) (தாம் பெற்ற பேற்றை வாயாரச் சொல்லி மகிழ்கிறார். “வந்து என் மனம் புகுந்து மன்னிநின்றாய்” என்று ஒரு வாக்கியமாகவே சொல்லிவிடலாமாயினும் தம்முடைய ஆநந்தம் நன்கு விளங்குமாறு ”வந்தாய் – என் மனம் புகுந்தாய் – மன்னிநின்றாய் ” என்று தனித்தனி வாக்கியமாக நீட்டி நீட்டி யுரைக்கின்றார்.) 9 | வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ சிந்தா மணியே திருவேங்கடம் மேய எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே –1-10-9 | நந்தாத, Nandhaadha - ஒருகாலும் அணையாத கொழு சுடரே, Kozhu Sudare - சிறந்த தேஜஸ்ஸாயிருப்பவனே! எங்கள் நம்பீ, Engal Nambi - எங்களுடைய குறையை நிரப்பவல்ல பூர்ணனே! சிந்தாமணியே, Sindhamaniye - நினைத்த மாத்திரத்தில் எல்லாவற்றையும் கொடுத்தருள வல்லவனே! திருவேங்கடம் மேய எந்தாய், Thiruveengadam Meya Enthaai - திருமலையிலெழுந்தருளியிருக்கும் பெருமானே! வந்தாய், Vandhaai - என்பக்கல் வந்தாய்; என் மனம் புகுந்தாய், En Manam Pugundhaai - எனது நெஞ்சினுள்ளே புகுந்தாய்; மன்னி நின்றாய், Manni Nindraai - உள்ளேயே பொருந்தி நின்றாய்; இனி, Ini - இனிமேல் யான், Yaan - அடியேன் உன்னை என்றும் விடேன், Unnai Endrum Vidaen - உன்னை ஒருநாளும் விடமாட்டேன். |