Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 978 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
978பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) (ஸ்ரீதேவி பூதேவிகட்காக அரிய பெரிய காரியஞ்செய்த மஹாநுபாவன் எழுந்தருளியிருக்குமிடம் ஸ்ரீபதரிகாச்ரமம் என்கிறார்.) 1
ஏனம் முனாகி யிரு நிலம் இடந்து அன்று இணை யடி யிமையவர் வணங்க
தான வனாகம் தரணியில் புரளத் தடஞ்சிலை குனித்த வென் தலைவன்
தேனமர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வ நன்னறு மலர் கொணர்ந்து
வானவர் வணங்கும் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-1
முன் அன்று, Mun Anru - முன்னொரு காலத்தில்
இணை அடி, Inai Adi - (தனது) உபய பாதங்களைத்
இமையவர் வணங்க, Imaiyavar Vananga - தேவர்கள் வந்து வணங்குமாறு
ஏனம் ஆகி, Enam Aagi - மஹாவராஹரூபியாகி
இரு நிலம் இடந்து, Iru Nilam Idanthu - விசாலமான பூ மண்டலத்தைக் கோட்டு நுனியாற் குத்தி யெடுத்தவனாயும்,
தானவன் ஆகம், Thanavan Aagam - இராவணணுடைய சரீரமானது
தரணியில் புரள, Tharaniyil Purala - பூமியிலே (செத்துப்) புரளும்படி
தடசிலை குனித்த, Thadasilai Kunitha - பெரிய வில்லை வளைத்தவனாயுமிருக்கிற
என் தலைவன், En Thalaivan - அஸ்மத் ஸ்வாமி
வானவர், Vaanavar - தேவர்கள்,
தேன் அமர் சோலை கற்பகம் பயந்த, Then Amar Solai Karppagam Payantha - தேன் நிறைந்த நந்தனவனத் திலேயுள்ள கல்ப வ்ருக்ஷங்கள் கொடுத்த
தெய்வம் நல் நறு மலர், Deivam Nal Naru Malar - திவ்யமாய் நல்ல மணம் மிக்க பூக்களை
கொணர்ந்து, Konarnthu - கொண்டு வந்து ஸமர்ப்பித்து
வணங்கும், Vanangum - வணங்குமிடமாய்
கங்கையின் கரை மேல், Gangaiyin Karai Mel - கங்கையின் கரையிலுள்ள தான
வதரி ஆச்சிரமத்து, Vadhari Aachiramatthu - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே
உள்ளான், Ullaan - எழுந்தருளியிருப்பவன்.——