| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 989 | பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) (நெஞ்சே! சாளக்கிராமத்தைச் சென்று சேர்; அத்திவ்யதேசம் யாருடையது? —) 2 | கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மாந்தேரும் காலாளும் உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடிவாய்ச் சரம் துரந்தான் இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும் தடம் சூழ்ந்து எங்கும் அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-2 | கடம் சூழ் கரியும், Kadham Soozh Kariyum - மதஜலத்தையுடைய யானைகளும் பரிமாவும், Parimavum - குதிரைகளும் ஒலி மா தேரும், Oli Maa Therum - ஒலியையுடைய மஹாரதங்களும் காலாளும், Kaalalum - காலாட்களும் உடன் சூழ்ந்து, Udan Soozhndhu - ஒன்றாகத் திரண்டு எழுந்த, Ezhundha - கிளர்ந்து தோற்றின கடி இலங்கை, Kadi Ilangai - அரணையுடைத்தான லங்கை பொடி ஆ, Podi Aa - பொடிபடும்படியாக, வடி வாய், Vadi Vaai - கூர்மையான வாயையுடைய சரம், Charam - அம்புகளை துரந்தான், Durandhaan - பிரயோகித்தவனான இராமபிரான் (எழுந்தருளியிருக்குமிடமான) இரு விசும்பில் இமையோர், Iru Visumbil Imaiyoor - விசாலமான ஸ்வர்க்கத்திலுள்ள தேவர்கள் இடம் எங்கும் சூழ்ந்துவணங்க, Idam Engum Soozhnthuvanang - பூமியெங்கும் வந்துபரவி ஆச்ரயிக்கத்தக்கதாய் மணம் கமழும் தடம் சூழ்ந்து, Manam Kamazhum Thadam Soozhndhu - புஷ்பவாஸனைகள் வீசுகின்ற தடாகங்களாலே சூழப்பட்டு எங்கும் அழகுஆய, Engum Azhagu Aa - எல்லாப்பக்கங்களிலும் அழகையுடைத்தாயிருக்கிற |