| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 997 | பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) (தாராவாரும்.) எம்பெருமானுடைய ஸஹஸ்ரநாமங்களை ஸங்கீர்த்தனம் பண்ணுவதும் இந்தத் திருமொழியைக் கற்பதும் துல்ய பலமென்கிறார். 10 | தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத் தடிகளை காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை ஆரார் உலகத்தறிவுடையார் அமரர் நன்னாட்டரசு ஆள பேர் ஆயிரமும் ஒதுமின்கள் அன்றி யிவையே பிதற்றுமினே –1-5-10 | உலகத்து, Ulagaththu - இவ்வுலகத்திலே அறிவு உடையார் ஆரார், Arivu Udaiyaar Aaraar - விவேகமுள்ளவர்கள் ஆரார் இருக்கிறீர்களோ(அவர்களெல்லீரும்) அமரர் நல் நாடு அரசு ஆள, Amarar Nal Naadu Arasu Aala - நித்யஸூரிகளுடைய வில க்ஷணமான ஸ்ரீவைகுண்டத்தை அரசாளும் படியாக பேர்ஆயிரமும் ஓதுமின்கள், Peraayiramum Othuminngal - (ஸ்ரீ வைகுண்டநாதனுடைய) ஆயிரந் திரு நாமங்களையும் ஓதுங்கள்: அன்றி, Andri - அல்லது, கார் ஆர் புறவில் மங்கை வேந்தன் கலியன், Kaar Aar Puravil Mangai Vendan Kalyan - மேகங்கள் படிந்துள்ள தோட்டங்களையுடைய திருமங்கை நாட்டுக்குத் தலைவரான திருமங்கையாழ்வார் தாரா ஆரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளை, Tharaa Aarum Vayal Soozhntha Saalakkiraamathu Adigalai - ஸாரஸபக்ஷிகள் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட ஸ்ரீஸாளக்ராமத்திலே எழுந்தருளியிருக்கு மெம்பெருமான் விஷயமாக ஒலி செய், Oli Sei - அருளிச்செய்த தமிழ்மாலை இவையே, Thamizhmaalai Ivaiye - தமிழ் மாலையாகிய இப்பாசுரங்களையே பிதற்றுமின், Pithatrumin - வாய்வந்தபடி சொல்லுங்கள். |