Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 1026 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1026பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) (இத்திருமொழியில் கீழ்ப்பாசுரங்க ளெல்லாவற்றிலும் ஆழ்வார் தமது திருவுள்ளத்தை நோக்கிக் கூறுதலொன்றே யுள்ளது; பரோபதேசமென்பது இல்லை. இப்பாசுரம் “பேசுமின் திருநாம மெட்டெழுத்தும் ” என்று தொடங்கப்படுகிறது. பேசுமின் என்றால், ‘சொல்லுங்கள்’ ‘ என்று பொருள்படுகையாலே முன்னடிகளிரண்டும் பரோபதேசமென்றும் பின்னடிகளிரண்டும் ஸ்வாத்மோத்போதநமென்றும் கொள்க.) 9
பேசுமின் திருநாமம் எட்டு எழுத்தும் சொல்லி நின்று பின்னரும்
பேசுவார் தம்மை உய்ய வாங்கிப் பிறப்பு அறுக்கும் பிரானிடம்
வாச மா மலர் நாறுவார் பொழில் சூழ் தரும் உலகுக் கெல்லாம்
தேசமாய்த் திகழும் மலைத் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-9
பேசும், Pesum - எல்லாராலும் அநுஸந்திக்கத் தக்கதும்
இன், In - போக்யமுமான
திரு நாமம் எட்டு எழுத்தும், Thiru Naamam Ettu Ezhuthum - திருவஷ்டாக்ஷர மஹா மந்திரத்தை
சொல்லி நின்று, Solli Nindru - அநுஸந்தித்து
பின்னரும், Pinnaarum - மேன்மேலும்
பேசுவார் தம்மை, Pesuvaar Thammai - (அதனையே) அநுஸந்திப்பவர்களை
உய்யவாங்கி, Uyya Vaangi - உஜ்ஜீவிக்கச்செய்து
பிறப்பு அறுக்கும் பிரான் இடம், Pirappu Arukkum Piraan Idam - (அவர்களது) ஸம்ஸாரத்தைத் தொலைக்கு மெம்பெருமான் எழுந்தருளி யிருக்குமிடமானதும்,
வாசம் மா மலர் நாறும், Vaasam Maa Malar Naarum - மணம்மிக்க சிறந்த புஷ்பங்கள் பரிமளிக்கப்பெற்ற
வார் பொழில், Vaar Pozhil - விசாலமான சோலைகளாலே
சூழ்தரும், Sooltharum - சூழப்பட்டதும்,
உலகுக்கு எல்லாம், Ulagukku Ellam - எல்லா வுலகங்களுக்கும்
தேசம் ஆய் திகழும், Desam Aay Thigalum - திலகம்போன்று விளங்குவதுமான
திருவேங்கடம் மலை, Thiruveengadam Malai - திருமலையை
நெஞ்சமே அடை, Nenjamai Adai - மனமே! அடைந்திடு.