திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 974 | பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உலகில் விசித்திரமானதொன்றைப் பார்க்கும்போ தும் விகாரமானதொன்றை பார்க்கும்போதும் கண்கூசி அப்பப்ப! என்று மெய் சிலிர்த்துக் கூறுவது வழக்கம். கிழவர்கள் தண்டுகாலாவூன்றியூன்றித் தள்ளி நடந்துகொண்டு, தாம் நெடுநாள் பழகின மின்னிடை மடவார் வீதியேறச் சென்றவாறே அளவு கடந்த கிழத் தன விகாரங்களைக்கண்டு அந்த மாதர்கள் ‘அப்பப்ப!’ என்று தங்களுக்குள்ளே அதிசயித்து, ‘உலகில் எல்லாரும் கிழத் தனமடைவதுண்டு; இதென்னடோயப்பா! ‘இப்படிப்பட்ட கிழத்தனம் எங்குங் கண்டதில்லை. மிகவும் பொல்லாத கிழத்தனமாயிருக்கின்றதே இது;’ என்று சொல்லிச் சிரிப்பர்கள் ; அவ்வளவோடு நில்லாமல் அண்டைவீட்டுக் காரிகளை யழைத்து ‘உங்கள் எஜமானர் வந்திருக்கிற அழகைப்பாருங்கள் ‘ என்று காட்டியும் சிரிப்பர்கள் ; அப்படிப்பட்ட பரிஹாஸங்களுக்கு ஆளாவ தற்கு முன்னே வதரி வணங்குதல் நன்று.) 7 | பப்ப வப்பர் மூத்த வாறு பாழ்ப்பது சீத் திரளை
ஒப்ப ஐக்கள் போத வுந்த உந்தமர் காண்மின் என்று
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் சிரியா முன்னம்
வைப்பும் நங்கள் வாழ்வு மானான் வதரி வணங்குதுமே –1-3-7 | பதவுரை Show / Hideசீத் திரளை ஒப்ப, Seeth Thiralai Oppa - சீயின் திரட்சிபோல ஐக்கள், Aikkal - கோழையானது போத உந்த, Podha Unda - மிகவும் அதிகரிக்க, (அந்த நிலைமையைக் கண்டு) செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம், Seppu Ner Men Kongai Nallaar Thaam - செப்புப் போன்ற மெல்லிய முலைகளையுடைய மங்கைமார்கள் பப்ப அப்பர்மூத்த ஆறு பாழ்ப்பது, Pappa Apparumootha Aaru Paazhppadhu - “அப்பப்ப! இந்த சாமியார் கிழத்தன மடைந்த விதம் மிகவும் பொல்லாது” (என்று தங்களில் சொல்லிக்கொண்டும்) உம் தமர் காண்மின் என்று, Um Thamar Kaanmin Endru - “அடீ!உங்களோடு உறவுள்ள ஐயங்காரைப் பாருங்கள்” என்று(அயற்பெண்களோடே ஏளனமாகச் சொல்லியும்) சிரியாத முன்னம், Siriyaadha Munnam - சிரிப்பதற்கு முன்னமே-, நங்கள் வைப்பும் வாழ்வும் ஆனான் வதரி வணங்குதும், Nangal Vaippum Vaalvum Aanaan Vadhari Vanangudhum - நமக்கு நிதி போன்றவனும் நம்மை வாழ்விப்பவனுமான எம்பெருமானது ஸ்ரீபதரியை வணங்குவோம். |