திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 965 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
965பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இமயமலையில் சோலைகள் செறிந்து கிடக்குமாதலால் ‘ இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியா” என்னுமாபோலே பகற்போது காணமுடியாமல் இரவு காலமே விஞ்சி எங்கும் இருள் மூடிக்கிடக்கும். அப்படி இருள் மூடிக்கிடக்கிற மலையின் குஹைகளிலே பாம்புகளானவை ஆஹாரம் பெறாமல் பெரும்பசியோடே பெருமூச்சு விட்டுக்கொண்டு கிடக்கும். அப்படிப்பட்ட இமயமலையின்கண். அமரர்கள் வந்து சேர்ந்து ‘பரமபுருஷா!, ஸகல ஜகத்காரண பூதா!!, காளமேகச்யாமளா!!!” என்றிப்படி அநுஸந்தித்துக்கொண்டு நான்முகக்கடவுளை முன்னிட்டு வணங்குமிடமாகிய திருப்பிரிதி யைச் சென்று சேர் நெஞ்சே!) 8
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை இரும்பசியது கூர அரவம் ஆவிக்குமகம் பொழில் தழுவிய அருவரை யிமயத்து பரமனாதி எம்பனி முகில் வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள் பிரமனோடு சென்று அடி தொழும் பெரும் தகைப் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-8
பதவுரை Show / Hide
நெஞ்சே, Nenje - மனமே!
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை, Iravu koornthu irul perugiya varai muzhai - இராப்பொழுதே விஞ்சி இருள் அதிகரிக்கப்பெற்ற மலை முழஞ்சுகளிலே
இரு பசியது கூர, Iru pasiyathu koora - பெரும்பசி உண்டாக
அரவம், Aravam - மலைப்பாம்புகளானவை
ஆவிக்கும், Aavikum - பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிற
அகம் பொழில் தழுவிய, Agam pozhil thazhuviya - உட்சோலைகளோடு கூடிய
அரு வரை இமயத்து, Aru varai Imayathu - ஏறமுடியாத தாழ்வரையையுடைய இமயமலையின் கண்,
இமையோர்கள், Imaiyorkal - தேவர்கள்
பிரமனோடு சென்று, Brahmanodu sendru - நான்முகனோடு கூடச் சென்று
பரமன் என்று எண்ணி நின்று, Paraman endru enni ninru - பரமபுருஷனே! என்றும்
ஆதி என்று, Aadhi endru - ஆதி மூலமே ! என்றும்
எம் பனிமுகில் வண்ணன் என்று, Em panimukil vannan endru - குளிர்ந்த மேகம் போன்ற நிறத்தையுடைய எம்பெருமானே! என்றும்
எண்ணி நின்று, Enni ninru - அநுஸந்தித்துக் கொண்டு
அடி தொழும், Adi thozhum - திருவடிகளை வணங்குதற்குரிய
பெரு தகை, Peru thagai - பெருந்தன்மை பொருந்திய
பிரிதி, Pridhi - திருப்பிரிதியை
சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக