Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 1012 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1012பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) (சீற்றத்தாலே பல்லோடு நாக்கைச் செலுத்தி மென்றுகொண்டே யிருக்கிற பெரிய வாயையும் ஒளிவிடுகிற எயிற்றையும் மிடுக்கையுமுடைய நரசிங்கமாய்த் தோன்றி இரணியன் உயிர்மாளும்படியாக அவனது மார்வைப் பிளந்த பெருமானெழுந்தருளி யிருக்குமிடம் சிங்கவேழ் குன்றம். அஃது எப்படிப்பட்டது? மாறாமல் நின்று எரிகிற அக்நியைச் சுழல் காற்றானது முகந்து கொண்டு ஆகாயமெங்கும் பரவி வீசியெறிகையாலே சென்று காண்பதற்கு அருமைப்படும் கோயில்.) 5
மென்ற பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
பொன்ற வாகம் வள்ளுகிரால்  போழ்ந்த புனிதனிடம்
நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடிரிய
சென்று காண்டற்கரிய கோயில் சிங்க வேள் குன்றமே –1-7-5
மென்ற பேழ்வாய், Mendra Pezhvai - (சீற்றத்தாலே) மடித்த பெரிய வாயையும்
வாள் எயிறு, Vaal Eiyiru - வாள்போன்ற பற்களையுமுடையதாய்
ஓர், Oor - ஒப்பற்றதாய்
கோள், Kol - மிடுக்கையுடையதான
அரி ஆய், Ari Aay - நரசிங்கமாகி
பொன்றஅவுணன், Ponraavunan - (தன்னைக் கண்டமாத்திரத்திலே) செத்துப்போன இரணியனுடைய
ஆகம், Aagam - உடலை
வள் உகிரால், Val Ukiraal - கூர்மையான நகங்களாலே
போழ்ந்த, Pozhntha - பிளந்திட்ட
புனிதன் இடம், Punithan Idam - பரிசுத்தனான பகவான் எழுந்தருளியிருக்குமிடமாவது:-
சூறை, Soorai - சுழல்காற்றானது
நின்ற செம் தீ மொண்டு, Nindra Sem Thee Mondo - குறைவில்லாமலிருக்கிற சிவந்த நெருப்பை வாரிக்கொண்டு
நீள் விசும்பூடு இரிய, Neel Visumpoo Iriya - விசாலமான ஆகாசமடங்கலும் ஓடிப்பரவுகிறபடியாலே
சென்று காண்டற்கு அரிய கோயில், Sendru Kaandharku Ariya Koyil - கிட்டிச் சென்று ஸேவிக்க முடியாத கோயிலான