| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1042 | பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) (பக்தர்களின் சத்துருக்களிடத்தில் சீற்றமும், பக்தர்களிடத்தில் வாத்ஸல்யமும் விளங்கத் திருமலையிலே ஸேவைஸாதிக்கிறபடியைப் பேசுகிறார். தூணினுள்ளே நரசிங்கமாய்த் தோன்றி இரணியனுடலைப் பிளந்தெறிந்து சிறுக்கனான ப்ரஹ்லாதாழ்வானுக்கு அருள் செய்தாப்போலே அடியேன் மீதும் அருள் செய்யவேணு மென்கிறார்.) 5 | தூணாய தனூடு அரியாய் வந்து தோன்றி பேணா வவுணனுடலம் பிளந்திட்டாய் சேணார் திருவேங்கட மா மலை மேய கோணா கணை யாய் குறிக்கொள் எனை நீயே –1-10-5 | தூணாயதனூடு, Thoonayathanoodu - வெறும் தூணாகவேயிருக் கிறவதற்குள்ளே அரி ஆய், Ari Aai - நரஸிம்ஹமாகி வந்து தோன்றி, Vandhu Thondri - திருவவதரித்து, பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய், Pena Avunan Udalam Pilandittai - (தன்னை) மதியாத ஹிரண்ய கசிபுவின் சரீரத்தைக் கிழித்துப் போகட்டவனே! சேண் ஆர், Seen Aar - மிக்க உயர்த்தி பொருந்திய திரு வேங்கடம் மா மலை மேய, Thiru Vengadam Maa Malai Maeya - திருமலையிலே எழுந்தருளியிருப்பவனும் கோள் நாகம் அணைபாய், Kol Naagam Anaipai - மிடுக்கையுடைய திருவனந்தாழ்வானைப் பள்ளியாகவுடையனுமான பெருமானே! எனை, Enai - அடியேனை நீயே குறிக்கொள், Neeye Kurikkol - நீயாகவே திருவுள்ளம் பற்றியருளவேணும். |